Prøve GULL - Gratis
காலிஸ்தான் பயங்கரவாதத்தின் நெடிய நிழல்!
Dinamani Puducherry
|June 27, 2025
காலிஸ்தான் தனிநாடு கோரி கனடாவில் இயங்கிவரும் சீக்கிய பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவின் அமைதியைச் சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளைச் செய்துவருகின்றன.
1985, ஜூன் 23-இல் ஏர் இந்தியா-182 ‘கனிஷ்கா’ விமானம் லண்டன் வழியாக புது தில்லி, மும்பையை இறுதி இலக்காகக் கொண்டு கனடாவின் மான்ட்ரியால் நகரிலிருந்து புறப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேல் 31,000 அடி உயரத்தில் இந்த விமானம் பறந்தபோது வெடித்துச் சிதறியது. சரக்குகள் வைக்கும் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து விமானத்தில் இருந்த 329 பேர் உயிரிழந்தனர்; இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் உள்பட கனடா குடிமக்கள் 268 பேர், பிரிட்டனைச் சேர்ந்த 27 பேர், 22 இந்தியர்கள், விமான ஊழியர்கள் என அதில் பயணித்த யாரும் உயிர்பிழைக்கவில்லை.
2001 செப்டம்பர் 11 நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முந்தைய மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும். கனடா வரலாற்றிலேயே மிகப் பெரும் பயங்கரவாதத் தாக்குதலாக இந்தச் சம்பவம் கருதப்படுகிறது.
அந்தச் சம்பவம் நடந்த அதே நேரத்தில் மற்றொரு ஏர் இந்தியா விமானத்தை இலக்கு வைத்து, ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் நரிட்டா விமான நிலைய சரக்குச் சேமிப்பகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தவறுதலாக முன்கூட்டியே வெடித்து இரு ஊழியர்கள் உயிரிழந்தனர்.
இந்த இரு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாகப் பின்னர் நடைபெற்ற விசாரணையில், காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை முன்னிறுத்தி பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் சீக்கியப் பிரிவினை அமைப்பான ‘பப்பர் கல்சா’ இருந்தது தெரியவந்தது.
Denne historien er fra June 27, 2025-utgaven av Dinamani Puducherry.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Puducherry
Dinamani Puducherry
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Puducherry
சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்
பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Puducherry
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Puducherry
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Dinamani Puducherry
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Puducherry
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Puducherry
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
3 mins
November 01, 2025
Dinamani Puducherry
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்
உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.
1 min
October 31, 2025
Dinamani Puducherry
தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்
தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
October 31, 2025
Dinamani Puducherry
சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு
ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு
1 mins
October 31, 2025
Translate
Change font size
