Prøve GULL - Gratis
டிரம்ப்பின் எச்சரிக்கை-பயமா, பலவீனமா?
Dinamani Nagapattinam
|July 22, 2025
ஆசிய நாடுகளில் பலவும் இந்த வரி விதிப்பு அலைக்கழிப்புகளால் அவதிப்படுகின்றன என்றாலும், இந்தியாவின் நிலைப்பாடு என்ன? பாதிப்பு யாது? என்ற வினாக்கள் எழுகின்றன. இந்தியா மௌனம் சாதிக்கிறது. டிரம்ப் தனது நிலைப்பாட்டில் தடுமாறுகிறார் என்றே பார்க்க வேண்டியிருக்கிறது.
மெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே உலக நாடுகளுடனான வர்த்தகம், கூடுதல் வரி விதிப்பு பற்றி பேசி வருகிறார். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிகம் இறக்குமதி வரி விதிப்பதால் அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து கூறி வரும் அதிபர், அதை சம நிலைப்படுத்த பரஸ்பரம் வரி விதிப்பது என்று தீர்மானித்தார்.
அமெரிக்க அதிபரின் இந்தப் போக்கு உலக நாடுகளிடையே ஆரம்பத்தில் அச்சத்தை ஏற்படுத்தியது என்றாலும், அமெரிக்காவிலேயே அவரின் கருத்துக்கு எதிர் குரல்கள் எழுந்தன. இந்தியா போன்ற நாடுகளோடு முரண்படுவதால் அமெரிக்கா மருந்துப் பொருள்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளில் சிக்கல்களை சந்திக்கும் என்ற காரணம் டிரம்பை சிந்திக்க வைத்தது.
எந்தெந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி வெளியிட்டார். பின்னர், இந்த பரஸ்பர வரி விதிப்பை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாகவும் அறிவித்தார். கடந்த ஜூலை 9-ஆம் தேதியுடன் 90 நாள்கள் முடிவடைந்த நிலையில், காலக்கெடு ஆகஸ்ட் ஒன்றாம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இருமுறை நாள்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த முறை வரி விகித உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் நாளில் அமலுக்கு வருவது 100 சதவீதம் உறுதியாகிவிட்டதா என்ற வினா எழுப்பப்பட்டதும் உறுதிதான்; ஆனாலும், இன்னும் 100 சதவீதம் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்று ஊசலாட்டமான பதிலையே அமெரிக்க அதிபர் தந்துள்ளார்.
டிரம்ப்பின் இந்தப் பதில் மற்ற நாடுகளை ஆசுவாசப்பட வைத்துள்ளது.
தனது முடிவை நிறுத்திவைப்பதாகவோ, தான் பின்வாங்குவதாகவோ இருத்தல் கூடாது என்று கருதியவர் 14 நாடுகளின் தலைவர்களுக்கு வரி விதிப்பு உயர்த்தப்படுவதற்கான கடிதங்களை அனுப்பி விட்டு, அதை தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவுடன் இந்த நாடுகளுக்கு இருக்கும் உறவை பொருத்து வரி விகிதங்கள் குறைக்கப்படவோ அல்லது உயர்த்தப்படவோ வாய்ப்புள்ளது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதை இந்த அறிவிப்பு உணர்த்துகிறது.
Denne historien er fra July 22, 2025-utgaven av Dinamani Nagapattinam.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Nagapattinam
கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே
நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்
1 min
June 28, 2026
Dinamani Nagapattinam
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Translate
Change font size
