Prøve GULL - Gratis
செயற்கை நுண்ணறிவும், குற்றப் புலனாய்வும்
Dinamani Chennai
|January 16, 2025
ஓசை மூலம் தகவல் பரிமாற்றங்களைச் செய்து வந்த ஆதி மனிதர்கள், காலப்போக்கில் அவர்களுக்கென்று ஒரு மொழியை வடிவமைத்து, அவர்களுக்கிடையே தகவல் பரிமாற்றங்களைச் செய்யத் தொடங்கினர்.
-
நேரடியாகத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டவர்கள், தொலைவில் வசித்து வந்தவர்களிடம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள தூது அனுப்பும் முறையைப் பயன்படுத்தினர். மனித சமுதாயத்தில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியைத் தொடர்ந்து கடிதம், தொலைபேசி, செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்றவை தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
1970-களின் தொடக்கத்தில் கணினிகளின் மூலம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள கண்டுபிடிக்கப்பட்ட ‘இணையம்’ என்ற மென்பொருள் பொதுமக்களின் பரவலான பயன்பாட்டுக்கு 1990-களின் தொடக்கத்தில் வந்தது. மின்னஞ்சல், இணைய வங்கி, இணைய வணிகம், இணைய வழி மருத்துவம், கல்வி, விளையாட்டு என அனைத்துத் தரப்பினரின் தினசரி செயல்பாடுகளை இணையம் தன்பால் ஈர்த்துக் கொண்டது. மிகக் குறைந்த செலவிலும், துரிதமாகவும், அனைத்து வகையான தகவல் பரிமாற்றங்களுக்கு இணையத்தின் வழியாகச் செயல்படும் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த இணையம், தற்பொழுது சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துவிட்டது. இந்தச் சூழலில், இணையத்தின் உதவி கொண்டு நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் நிகழத் தொடங்கின. பெண்கள் மற்றும் சிறார்கள் மீதான பாலியல் குற்றங்கள், போதைப்பொருள்கள், ஆயுதங்கள் மற்றும் கள்ள நோட்டுகள் கடத்தல், நிதி மோசடி, தேசப் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் இணையத்தின் உதவி கொண்டு நடத்தப்படுகின்றன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ‘இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்’ இந்தியாவில் நிகழும் சைபர் குற்றங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வின்படி, 2019 ஆம் ஆண்டில் பதிவான 26,050 சைபர் குற்றங்கள், 2023-ஆம் ஆண்டில் 15,56,220 ஆக உயர்ந்துள்ளன. அதாவது இந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 60 மடங்கு உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால், 2025-ஆம் ஆண்டில் சைபர் குற்றங்களினால் ரூ.1,20,000 கோடி இழப்பை இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என்றும் இந்த மையம் எச்சரித்துள்ளது.
Denne historien er fra January 16, 2025-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
டித்வா புயல் எச்சரிக்கையை முன்னிட்டு, சனிக்கிழமை (நவ.29) நடைபெறவிருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக பதிவாளர் ரா. சிங்காரவேலு அறிவித்தார்.
1 min
November 29, 2025
Dinamani Chennai
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவ.28) தீர்ப்பு வழங்கியது.
1 min
November 29, 2025
Dinamani Chennai
மருத்துவத் துறையில் காலிப் பணியிடங்கள் இல்லை
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
1 min
November 29, 2025
Dinamani Chennai
புகார் அளிக்க வந்த பெண் பொறியாளரிடம் அத்துமீறல்
காத்திருப்போர் பட்டியலில் உதவி ஆணையர்
1 min
November 29, 2025
Dinamani Chennai
பிறவிக் குறைபாடு: பச்சிளம் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு
சென்னை, நவ. 28: பிறவிக் குறைபா டுகளுக்குள்ளான நூற்றுக்கணக் கான பச்சிளம் குழந்தைகளுக்கு அதிநவீன அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு மறுவாழ்வு அளித் துள்ளதாக எழும்பூர் அரசு குழந் தைகள் நல மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர்.
1 min
November 29, 2025
Dinamani Chennai
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், தேர்தல் முடிவுகள் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டது என்று தெளிவுபடுத்தியது.
1 min
November 29, 2025
Dinamani Chennai
ராமேசுவரம் பகுதியில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
படகுகள் சேதம், ரயில் போக்குவரத்து ரத்து
1 mins
November 29, 2025
Dinamani Chennai
ஹாங்காங் குடியிருப்பு தீ விபத்து: மீட்புப் பணிகள் நிறைவு
உயிரிழப்பு 128-ஆக உயர்வு
1 min
November 29, 2025
Dinamani Chennai
வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 9% அதிகரிப்பு
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவின் வேளாண்மை மற்றும் தொடர்புடைய துறைகளின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் 8.8 சதவீதம் உயர்ந்து 2,590 கோடி டாலரை எட்டியுள்ளது.
1 min
November 29, 2025
Dinamani Chennai
வழிகாட்டுதல்களை பின்பற்ற மக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்
டித்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புயல் மழை வழிகாட்டி நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
1 min
November 29, 2025
Translate
Change font size

