Prøve GULL - Gratis

வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர்...? தமிழகத்தை மேற்கோள் காட்டி மத்திய அரசு வாதம்

DINACHEITHI - DHARMAPURI

|

May 22, 2025

"வக்பு திருத்தச் சட்டத்தின்படி வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் எண்ணிக்கையில் இருப்பார்கள்" என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில் தெரிவித்தார். அத்துடன், 'தமிழகத்தில் அர்ச்சகர்கள் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்கள்' என்று அவர் தனது வாதத்தில் மேற்கோள் காட்டினார்.

புதுடெல்லி: மே 22-

வக்பு திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு இடைக்கால தடை விதிப்பது தொடர்பான வாதம் உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக நேற்று (மே 21) நடைபெற்றது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். அவர் தனது வாதத்தின்போது, "வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. மாறாக, பொது நலனுக்காக தனிநபர்களால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 102 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு சட்டம் குறித்து எங்களுக்கு (அரசுக்கு) கவலை இருந்தது. அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். கூட்டு நாடாளுமன்றக் குழுவால் விரிவான செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. 25 வக்பு வாரியங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதற்கு முன் இப்படி ஒரு விவாதம் நடந்ததே இல்லை எனும் அளவுக்கு விவாதங்கள் நடத்தப்பட்டு பிறகு நாடாளுமன்றம் மசோதாவை நிறைவேற்றியது. 2013 வரை, ஒரு முஸ்லிம் மட்டுமே வக்பு கொடுக்க முடியும். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு யார் வேண்டுமானாலும் வக்பு உருவாக்கலாம் என்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் எப்போதுமே ஒரு முஸ்லிம் மட்டுமே வக்பு கொடுக்க முடியும் என்று சட்டங்கள் கூறுகின்றன.

தற்போதைய சட்டம் வக்பு அல் - அவுலாதை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி, வக்பு நிறுவனரின் குடும்பத்தைச் சேர்ந்த மகள்கள் உட்பட அனைத்து சந்ததியினரும் நிரந்தரமாக சொத்துகளை நிர்வகிக்க முடியும். இது ஒரு நல்ல விஷயம். தனி நபர்களுக்கும் வக்புகளுக்கும் இடையிலான எந்தவொரு தகராறும் தகுதிவாய்ந்த நடுவரால் தீர்ப்பளிக்கப்படும்" என தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "ஒரு குறிப்பிட்ட சொத்து அரசுக்கானதா, வக்புக்கானதா என்பதை முடிவு செய்யக் கூடியவராக உள்ள அதிகாரி ஓர் அரசு ஊழியர் என்பதை மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்" என்ற வாதத்தை முன்வைத்தார். இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "அரசு நிலத்தின் மீது யாருக்கும் உரிமை இல்லை. முழு நாடும் நிலத்தின் உரிமையாளர். பொதுமக்களுக்காக அரசு நிலத்தை அறக்கட்டளையாக வைத்திருக்கிறது.

FLERE HISTORIER FRA DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பீகார் மாநிலத்தில் 122 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் பரப்புரை ஓய்ந்தது

நாளை இறுதி கட்ட வாக்குப்பதிவு

time to read

1 min

November 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

சமூக நீதியின் உந்து சக்தியாக உருவெடுத்துள்ளார், தேஜஸ்வி

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

time to read

1 min

November 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு

இன்று கீரனூரில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

time to read

1 min

November 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு - மக்கள் அவதி

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி டெல்லியில் காலை காற்றின் தரக்குறியீடு 355 ஆக பதிவானது.

time to read

1 min

November 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது

இந்தியாவில் ஆண்டுக்கு மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப்படுவது வழக்கம். ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பாகங்களாக நடத்தப்படும்.

time to read

1 min

November 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

கலைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம். பி.யுமான கமல்ஹாசன் நேற்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 min

November 08, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பள்ளிகள், மருத்துவமனைகளில் தெரு நாய்கள் நுழையாதவாறு வேலி அமைக்க வேண்டும்

உச்ச நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

November 08, 2025

DINACHEITHI - DHARMAPURI

கோவையில் அர்ச்சனா பட்நாயக் மத்திய தேர்தல் அதிகாரி ஆய்வு

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி சரியாக நடக்கிறதா? என கேட்டறிந்தனர்

time to read

1 min

November 08, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்யத்தயார்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

time to read

1 min

November 08, 2025

DINACHEITHI - DHARMAPURI

தொழிலாளர் ஆணையரகம் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 min

November 07, 2025

Translate

Share

-
+

Change font size