試す 金 - 無料
வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர்...? தமிழகத்தை மேற்கோள் காட்டி மத்திய அரசு வாதம்
DINACHEITHI - DHARMAPURI
|May 22, 2025
"வக்பு திருத்தச் சட்டத்தின்படி வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் எண்ணிக்கையில் இருப்பார்கள்" என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில் தெரிவித்தார். அத்துடன், 'தமிழகத்தில் அர்ச்சகர்கள் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்கள்' என்று அவர் தனது வாதத்தில் மேற்கோள் காட்டினார்.
-
புதுடெல்லி: மே 22-
வக்பு திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு இடைக்கால தடை விதிப்பது தொடர்பான வாதம் உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக நேற்று (மே 21) நடைபெற்றது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். அவர் தனது வாதத்தின்போது, "வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. மாறாக, பொது நலனுக்காக தனிநபர்களால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 102 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு சட்டம் குறித்து எங்களுக்கு (அரசுக்கு) கவலை இருந்தது. அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். கூட்டு நாடாளுமன்றக் குழுவால் விரிவான செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. 25 வக்பு வாரியங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதற்கு முன் இப்படி ஒரு விவாதம் நடந்ததே இல்லை எனும் அளவுக்கு விவாதங்கள் நடத்தப்பட்டு பிறகு நாடாளுமன்றம் மசோதாவை நிறைவேற்றியது. 2013 வரை, ஒரு முஸ்லிம் மட்டுமே வக்பு கொடுக்க முடியும். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு யார் வேண்டுமானாலும் வக்பு உருவாக்கலாம் என்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் எப்போதுமே ஒரு முஸ்லிம் மட்டுமே வக்பு கொடுக்க முடியும் என்று சட்டங்கள் கூறுகின்றன.
தற்போதைய சட்டம் வக்பு அல் - அவுலாதை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி, வக்பு நிறுவனரின் குடும்பத்தைச் சேர்ந்த மகள்கள் உட்பட அனைத்து சந்ததியினரும் நிரந்தரமாக சொத்துகளை நிர்வகிக்க முடியும். இது ஒரு நல்ல விஷயம். தனி நபர்களுக்கும் வக்புகளுக்கும் இடையிலான எந்தவொரு தகராறும் தகுதிவாய்ந்த நடுவரால் தீர்ப்பளிக்கப்படும்" என தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "ஒரு குறிப்பிட்ட சொத்து அரசுக்கானதா, வக்புக்கானதா என்பதை முடிவு செய்யக் கூடியவராக உள்ள அதிகாரி ஓர் அரசு ஊழியர் என்பதை மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்" என்ற வாதத்தை முன்வைத்தார். இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "அரசு நிலத்தின் மீது யாருக்கும் உரிமை இல்லை. முழு நாடும் நிலத்தின் உரிமையாளர். பொதுமக்களுக்காக அரசு நிலத்தை அறக்கட்டளையாக வைத்திருக்கிறது.
このストーリーは、DINACHEITHI - DHARMAPURI の May 22, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
DINACHEITHI - DHARMAPURI からのその他のストーリー
DINACHEITHI - DHARMAPURI
வட கிழக்கு பருவ மழை 2 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து விலகுகிறது
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min
January 18, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஒரே நாடு ஒரே தேர்தல்: தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு
ஒரே நாடு, ஒரே தேர்தல், மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
1 min
January 15, 2026
DINACHEITHI - DHARMAPURI
புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட வாழ்த்துகள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது :-
1 min
January 15, 2026
DINACHEITHI - DHARMAPURI
பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்த்தப்படும்
அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
1 min
January 15, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை, என குறிப்பிட்டு, ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
1 min
January 14, 2026
DINACHEITHI - DHARMAPURI
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை
ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
1 min
January 14, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
January 14, 2026
DINACHEITHI - DHARMAPURI
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயரப்போகிறதா?
பெண்களுக்கு இனிப்பான செய்தி
1 min
January 12, 2026
DINACHEITHI - DHARMAPURI
வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 10, 2026
DINACHEITHI - DHARMAPURI
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 09, 2026
Translate
Change font size
