Facebook Pixel இளையராஜா இசையில் பாடுவதற்காகவே படங்களை தயாரித்து நடிக்கிறார் இந்த அமெரிக்கப் பெண்! | Kungumam - entertainment - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

இளையராஜா இசையில் பாடுவதற்காகவே படங்களை தயாரித்து நடிக்கிறார் இந்த அமெரிக்கப் பெண்!

Kungumam

|

16-01-2026

பிறந்தது, வளர்ந்தது அமெரிக்காவாக இருந்தாலும் தமிழில் பொளந்துகட்டுகிறார் சிந்தியா லூர்டே. இளையராஜா இசையில் பாட வேண்டும் என்ற லட்சியத்துக்காகவே இளையராஜா இசையில் படம் தயாரித்தவர் என்பது இவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்.

- எஸ்.ராஜா

இளையராஜா இசையில் பாடுவதற்காகவே படங்களை தயாரித்து நடிக்கிறார் இந்த அமெரிக்கப் பெண்!

‘வர்ணாஸ்ரமம்’, ‘தின சரி' படங்களைத் தொடர்ந்து தற்போது 'அனலி' படத்தை தயாரித்து நடித்துள்ளார். பட வெளியீட்டுக்காக சென்னை வந்தவரிடம் பேசினோம்.

imageஅமெரிக்கா டூ சென்னை டிராவல் பற்றி சொல்லுங்க..?

கலிஃபோர்னியாவில் நாங்கள் இரண்டு தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்கள் குடும்பத்தில் டாக்டர், என்ஜினியர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், என்னுடைய கவனம் சினிமா பக்கம் போயிடுச்சு. அதற்காக படிப்பு ஏறலையான்னு கேட்காதீங்க. நான் படிப்ஸ் பொண்ணு.

imageதற்போது பன்னாட்டு கம்பெனியில் இயக்குனராகவும் வேலை பார்க்கிறேன். தொழில் முனைவராக பல புதிய நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். டிரேடிங் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னுடைய 10 வயசுலேயே பாக்கெட் மணி சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன்.

குழந்தைகளுக்கு பண நிர்வாகம் பற்றி சின்ன வயசுலேயே சொல்லிக் கொடுத்து வளர்க்கும்போது அவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் வாழ முடியும் என்ற எண்ணம் உருவாகும். அந்த வகையில் என்னைப் பற்றி நானே நிறைய சொல்லக் கூடாது. இன்ஸ்ட்டா பக்கம் வந்தீங்கன்னா எனக்கு எத்தனை முகம் இருக்குன்னு தெரிஞ்சுடும்.

சினிமாவுக்கு வர யார் இன்ஸ்பி ரேஷன்?

எனக்கு எந்தவித சினிமா பேக்ரவுண்டும் கிடையாது. சின்ன வயசுல பாடல் போட்டி, மோனோ ஆக்டிங் என எல்லா போட்டிகளிலும் ஆர்வமாக கலந்துகொள்வேன். அப்படி தான் எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்துச்சு.

imageரொம்ப அழகாக தமிழ் பேசுறீங்க?

எனக்கு தமிழ் மட்டுமல்ல, ஆங்கிலம், ஸ்பானீஷ், ஃபிரெஞ்சு உட்பட பல மொழிகள் தெரியும். என்னுடைய தாய் மொழி எது என்று கேட்டால் ஆங்கிலம் என்று சொல்வேன்.

FLERE HISTORIER FRA Kungumam

Kungumam

Kungumam

ஹீரோயினா நடிச்சு ரிலீஸ் ஆகாத படங்கள் இருக்கு!

‘சொல்லாமலே’ ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சங்கீதா. 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர். ஹோம்லி கேரக்டர் என்றால் இயக்குநர்களுக்கு இவர்தான் முதல் சாய்ஸாக இருந்தார்.

time to read

2 mins

01-05-2026

Kungumam

Kungumam

ஸ்போர்ட்ஸ் கதை...ஆனா, புதுக்கதை!

தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். நடித்துள்ள 'அங்கீகாரம்' ரிலீஸுக்கு ரெடி. விளையாட்டு வீரராக அவதாரம் எடுத்துள்ள கே.ஜே.ஆர்., உடலை வருத்தி கேரக்டருக்காக செய்த தியாகத்தை சினிமா உலகில் வியந்து பார்க்கிறார்கள்.

time to read

1 mins

01-05-2026

Kungumam

Kungumam

இது குப்பை பை அல்ல... ஃபேஷன் BAG

விலை : ரூ.142 லட்சம்!

time to read

2 mins

01-05-2026

Kungumam

Kungumam

ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வருமானம் ஈட்டும் அக்கா, தம்பி..!

வெடித்தது ஈரான் போர்...பஞ்சாப்பில் விளைகிறது காஷ்மீர் குங்குமப்பூ...

time to read

2 mins

01-05-2026

Kungumam

Kungumam

தரமான குடிநீர்!

உலகிலேயே தரமான குடிநீரைக் கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

01-05-2026

Kungumam

Kungumam

அசத்தும் பிளாஸ்டிக் வீடு!

பிளாஸ்டிக் பாட்டில்கள்தான் செங்கல்...

time to read

3 mins

01-05-2026

Kungumam

Kungumam

சைக்கிள்

சில வருடங்களாக சென்னையின் சாலைகளில் சைக்கிள் போக்கு அதிகரித்து இருக்கிறது. சைக்கிளை ஓட்டுபவர்களைத் தாண்டி, தங்களின் அன்றாட தேவைகளுக்காக சைக்கிளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

time to read

3 mins

01-05-2026

Kungumam

Kungumam

திமுகவின் இமாலய வெற்றியும் பாஜகவின் படுதோல்வியும்!

கடந்த வாரம் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் இணைந்த தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்களை மக்களவையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது.

time to read

4 mins

01-05-2026

Kungumam

Kungumam

வீராங்கனை

சஹானா வீட்டு திறந்தவெளி முற்றத்தில் நின்றபடி பார்த்தாலே பெருவுடையார் கோயிலின் பிரம்மாண்ட கோபுர உச்சி தெரியும்.

time to read

4 mins

01-05-2026

Kungumam

Kungumam

சதுரங்க மகாராணி!

உலக சதுரங்க விளையாட்டில் இந்திய இளைஞர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா தேஷ்முக், வைஷாலி என சதுரங்க ஜாம்பவான்களின் பட்டியல் நீள்கின்றது. இதில் ஆண்களுக்கு நிகராக பெண் வீராங்கனைகளும் சதுரங்க விளையாட்டில் கலக்கி வருகின்றனர். குறிப்பாக இந்திய இளம் வீராங்கனை வைசாலியைப் பற்றித்தான் சதுரங்க உலகில் ஹாட் டாக்.

time to read

1 mins

01-05-2026

Listen

Translate

Share

-
+

Change font size