Prøve GULL - Gratis
துருவ்வின் மாம்பழ கனவு கூடை
Champak - Tamil
|May 2025
குஜராத்தின் வடோதரா நகரத்தில் உள்ள ஒரு சிறிய வீட்டின் ஜன்னல்களில் பொன்னிற காலை வெளிச்சம் விரிந்தது.
பளபளக்கும் கண்களுடன் பத்து வயது சிறுவனான துருவ், அங்கே விழித்திருந்தான், அவன் இதயம் உற்சாகத்துடன் நடனமாடியது.
இன்று ஒரு சாதாரண நாள் அல்ல. இன்று, அப்பா வீட்டிற்கு குஜராத்தின் பெருமையான, இந்தியா முழுவதும் பிரபலமான, மலர்ந்த மல்லிகைப் பூக்களின் மணம் கொண்ட, பாட்டியின் தாலாட்டை விட இனிப்பான கிர் கேசர் மாம்பழங்களின் கூடையைக் கொண்டு வருவார்.
“நான் மாம்பழ ஜூஸ் உடன் பூரிகள் சாப்பிடுவேன்! மாம்பழ ஸ்ரீகண்டும்! அம்மாவின் ஸ்பெஷல் மாம்பழ அப்பளமும் மறக்க முடியாது!” என்று துருவ் குதித்துக்கொண்டே காலை உணவை விழுங்கினான்.
“உணவை சரியாக மெல்லா விட்டால், எதுவும் கிடைக்காது!” என்று அம்மா சிரித்துக்கொண்டே சொன்னாள்.
துருவ் உற்சாகத்துடன் தலையாட்டி, பள்ளிப் பையை எடுத்து வெளியே ஓடினான். அவன் உலகம் மாம்பழ சுவையுள்ள கனவுலகமாக மாறியிருந்தது. பள்ளிக்கு நடக்கும் வழியில், காற்று மாம்பழ மொட்டுகளின் மெல்லிய மணத்தைச் சுமந்து வந்தது. சூரியன் பழுத்த மாம்பழத்தின் நிறங்களில் பிரகாசித்தது. ஒவ்வொரு முகமும் பளபளக்கும் பித்தளை தட்டைப் போல் மின்னியது. தன்னைப் பார்க்கும் வழியோர நாய்களை கூட ஆர்வத்துடன் பார்த்தன. அவன் மாம்பழங்களைப் பற்றிய ஒரு பாடலை ரகசியமாக முணுமுணுத்துக் கொண்டே சென்றான்.
பள்ளியில், முதல் வகுப்பு கணிதம். ஆசிரியர் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்கும் போது, துருவ் தன் பென்சிலால் நோட்டுப் புத்தகத்தைத் தட்டிக்கொண்டிருந்தான்.“3 பேனாக்களின் விலை, 15 ரூபாய் என்றால், 12 பேனாக்களின் விலை எவ்வளவு?”
துருவ் புன்னகைத்தான். இது அவனுக்குப் பிடித்த ப்ராப்ளம்!
விரைவாக கணக்கைச் செய்தான். “அம்மா எனக்கு 15 ரூபாய் கொடுத்தால், நான் 3 மாம்பழங்கள் வாங்கலாம். அப்படியானால் 12 மாம்பழங்களுக்கு நான்கு மடங்கு பணம் தேவைப்படும்! அப்போது தான் எனக்கு பெரிய பங்கு கிடைக்கும்!” அவன் கை விரைவாக வானை நோக்கி உயர்த்தப் பட்டது. ஆசிரியர் அவன் பெயரைச் சொன்னபோது, துருவ் பெருமையாக எழுந்தான். “12 மாம்பழங்களின் விலை 60 ரூபாய், மேடம். ஆனால் என்னிடம் அவை இருந்தால், என் சகோதரி மிகவும் பொறாமைப்படுவாள்!” என்றான்.
Denne historien er fra May 2025-utgaven av Champak - Tamil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Champak - Tamil
Champak - Tamil
பிரியாவும் தோட்ட அரக்கனும்
அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.
3 mins
November 2025
Champak - Tamil
குழந்தைகள் தினம்
அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
2 mins
November 2025
Champak - Tamil
பூ கற்றுத் தந்த பாடம்
அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.
2 mins
November 2025
Champak - Tamil
இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்
ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.
3 mins
November 2025
Champak - Tamil
மெர்ரி-கோ-சர்ப்ரைஸ்!
ஜாக்ரிதியின் பிறந்தநாள் வரப்போகுது. நாம என்ன பண்ணலாம்?” ஜாக்ரிதி கைகளை கழுவப் போனவுடன் ஷெஃபாலி மெதுவாகக் கேட்டாள். புதிய பள்ளிக்கு வந்த சில மாதங்களிலேயே, ஜாக்ரிதி நல்ல நண்பர்களை பெற்றிருந்தாள்.
2 mins
November 2025
Champak - Tamil
நட்பின் வாக்குறுதி
பத்து வயது நிதேஷுக்கு அவனுடைய கிளி போபோ மீது அளவில்லா பாசம். போபோ அந்த வீட்டின் செல்லக்குட்டி. அவனுடைய கூண்டு முற்றத்தில் தொங்கிக் கொண்டிருந்தது; வீட்டுக்கு வருகிற ஒவ்வொருவரும் முதலில் அவனுக்கு ஹாய் சொல்லுவார்கள். பதிலுக்கு, போபோவும் ஒவ்வொருவரையும் பெரும் உற்சாகத்துடன் வரவேற்பான். நிதேஷின் அம்மா ரோஹிணி, அவனுக்கு சில வார்த்தைகளை கற்றுத்தந்திருந்தார். எனவே, யாராவது விருந்தினராக வந்தால், உடனே போபோ “ஹலோ!” என்று சொல்லி எல்லோரின் மனத்தையும் கவர்ந்து விடுவான்.
3 mins
November 2025
Champak - Tamil
உன் தோழமை-எனக்காக
பள்ளிக்குப் போகும் வழியில், “யிப். .யிப்..” என்ற மெதுவான குரல் ஷிவானியை நிறுத்தியது.
2 mins
August 2025
Champak - Tamil
குறும்புடன் ரக்ஷாபந்தன்
தனய்! என் சடை முடியை ஏன் மீண்டும் இழுத்தாய்?” என்று எட்டு வயதான ஜான்வி கோபமாகக் கூச்சலிட்டாள். அவள் கண்களில் கண்ணீர், புருவத்தில் கோபம், ஓடி அம்மாவிடம் சென்றாள்.
2 mins
August 2025
Champak - Tamil
நட்பின் நிழலில்
மழைக்காலம். வகுப்பறை ஜன்னல்களில் தட்டித் தட்டிக் கொட்டும் மழைத்துளிகள். ஹிந்தி பாட நேரம் ஆரம்பம் ஆனது. குழந்தைகள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்துவிட்டனர்.
3 mins
August 2025
Champak - Tamil
நியோவின் ரோபான்டு
பள்ளியின் டெக் ப்ளாக்கில் ஒரு புதிய வகுப்பு துவங்க ஆயத்தமானது - செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ்.
2 mins
August 2025
Translate
Change font size
