試す - 無料

தீபாவளித் திருநாளும் சஷ்டித் திருவிழாவும்!

Penmani

|

October 2025

சோதி என்னும் கரையற்ற வெள்ளம் தோன்றி எங்கும் திரை கொண்டு பாய என்று மகாகவியுடன் இயற்கையின் ஒளி வெள்ளத்தைக் கண்டு மகிழ்கிறோம்; தீபமங்கள ஜோதி நமோநம என்று ஒளியில் இறைவனை உணர்ந்து பக்தியுடன் வழிபடுகிறோம். ஒளி பல நிலைகளில் நம் வாழ்க்கையோடு இணைந்துள்ளது. ஒளியே உலகின் இயக்கம். இருள் எனும் அறியாமையிலிருந்து நம்மை மீட்பது ஒளி எனும் ஞானம். ஆகையால் தான் ஆண்டவனும் தீபஒளியாக வணங்கப்படுகிறான்!

- மாலதி சுந்தரராஜன்

தீபாவளித் திருநாளும் சஷ்டித் திருவிழாவும்!

தீப வழிபாட்டுத் திருநாள் இரண்டு. ஒன்று, தீபாவளித் திருநாள், ஐப்பசி மாதம் கொண்டாடப்படுவது, மற்றொன்று திருக்கார்த்திகை திருநாள், கார்த்திகை மாதம் கொண்டாடப்படுவது. இரண்டுமே அக இருளையும் புற இருளையும் நீக்கி நல்வழி காட்டும் பண்டிகைகள். இதில் தீபாவளிப் பண்டிகை இமயம் முதல் குமரி வரை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒளியை ஆராதிக்கும் பாரத நாட்டின் பாரம்பரியப் பண்டிகையாக ஒளிர்கிறது தீபாவளி! தீப, ஆவளி என்ற இரு சொற்களின் சேர்க்கையே தீபாவளி. இதற்கு விளக்குகளின் வரிசை என்று பொருள். பொய்மை, அறியாமை போன்ற எதிர்மறை எண்ணங்களிலிருந்து, உண்மை, அறிவு அமைதி போன்ற நேர்மறை எண்ணங்களை வரவேற்கும் திருநாள் தீபாவளித் திருநாள்! தீபாவளிப் பண்டிகையின் உட்கருத்து இதுவே! இது போன்ற உட்பொருளை நினைவில் வைத்திருந்து பின்பற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்டவையே பண்டிகைகள்.

தீபாவளிப் பண்டிகை பல புராண பின்னணிகளைக் கொண்டது. கந்தபுராணத் தின்படி, இறைவன் அர்த்தநாரீஸ்வரராக வடிவெடுத்த தினம் தீபாவளி என்று குறிப்பிடப்படுகிறது. ஈசனை நோக்கி அன்னை பராசக்தி தவமிருந்து அதன் நிறைவில் ஐயன் திருவுருவில் சரிபாதியாக அமர்ந்த தினமாகக் கருதப்படுகிறது. இதனையொட்டித்தான் தீபாவளியின் போது கேதார கௌரி விரதம் பலரால் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆணும் பெண்ணும் சமம் என்ற தத்துவத்தை இது போதிக்கின்றது.

புகழ்பெற்ற இதிகாசம் ராமாயணத்தின் படி, பதினான்கு ஆண்டு வனவாசமும் ராவண சம்காரமும் வெற்றிகரமாக முடித்து ஸ்ரீராம பிரான் அயோத்திக்கு திரும்பிய நன்னாளை மக்கள் உற்சாகமாக கொண்டாடிய தினமே தீபாவளித் திருநாள் என்று கூறப்படுகிறது! அன்று அயோத்தி நகரமே விளக்கேற்றி ஸ்ரீராமனை வரவேற்றது! இராமனைக் கண்ணால் காண்போம், இன்றே பிறந்த பயன் அடைவோம். அவன் நாமாமிர்தம், செவிக்கு திவ்யாமிர்தம், ஸ்ரீராமநாமம் செவிக்கு தேவாமிர்தம் அல்லவா?! ஆகையால் இன்றும் அயோத்தியில் தீபாவளி முக்கிய திருநாளாக, வண்ண விளக்கு அலங்காரத்துடன் கொண்டாடப்படுகிறது! உத்தமரை உலகம் கொண்டாடும் என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது!

Penmani からのその他のストーリー

Penmani

Penmani

தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!

தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....

time to read

7 mins

October 2025

Penmani

Penmani

தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!

அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.

time to read

2 mins

October 2025

Penmani

Penmani

ஆலங்காட்டு ரகசியம்!

சிதம்பர ரகசியம்னு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பர். திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்கு தலை கீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். பார்வதி சிவ பெருமானிடம் அவர் யார் என்று கேட்க 'இவர்கள் என் அம்மையார்' என்றார். வெகு அருகில் வந்து விட்ட காரைக்கால் அம்மையாரிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது அவர் எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.

time to read

1 min

October 2025

Penmani

நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்

ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.

time to read

3 mins

October 2025

Penmani

குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!

இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.

time to read

2 mins

October 2025

Penmani

Penmani

தித்திக்கும் தீபாவளியில் திகட்டாத இனிப்பு வகைகள்!

தீபாவளி என்றாலே எல்லோருடைய நினைவுக்கு வருவது புத்தாடை பட்டாசு, லேகியம், இனிப்பு, காரம் இவை தான். கடைகளில் என்னதான் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளும் காரங்களும் கிடைத்தாலும் நாம் வீட்டில் அவற்றை செய்யும் போது அதில் ஆரோக்கியமும் தனி சுவையும் இருப்பதை உணரலாம். இப்போது தீபாவளிக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய சுவையான ஆரோக்கியமான தித்திப்பு மற்றும் கார வகைகளை பார்ப்போம்.

time to read

4 mins

October 2025

Penmani

Penmani

இனிப்பு பிறந்த கதை

இந்தியாவில் கரும்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.

time to read

1 min

October 2025

Penmani

Penmani

பிளாஸ்டிக் பயன்பாட்டால் உயிரினங்கள் அழிகின்றன!

யானை முதல் டால்பின்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரை இழக்கும் நிலை தொடர்வதால், விரைவில் பல உயிரினங்கள் பூமியில் இருந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

October 2025

Penmani

Penmani

தீபாவளி பூ!

இந்திய வீடுகளில் சாமந்தி பூ சகஜம். வடநாட்டில் மழை காலம் முடிந்ததும் குளிர்ந்த அக்டோபர் மண்ணில் புதிய நாற்றுக்களை மற்றும் விதைகளை நடுவர். உயிர் பெற்றதும் தண்ணீர் தெளிப்பர். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது. பெரும்பாலும் அக்டோபர் ஆரம்பத்தில் நடுவதால் துர்கா பூஜா, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா சமயங்களில் இதுவே தெருவில் கிடைக்கும் பூ. அதனை தொடுத்து மாலையாக கட்டி விற்பர். எந்த கோயில் வாசலுக்குச் சென்றாலும் இந்த பூவை தான் கட்டி விற்பர். தீபாவளி சமயம் பூத்துக்குலுங்குவதால் தீபாவளி பூ என அழைப்பர்.

time to read

1 min

October 2025

Penmani

மதுரையில் மஹா பெரியவர் கோயில்!

திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்!!

time to read

1 min

October 2025

Translate

Share

-
+

Change font size