試す - 無料

அறிவறிந்த மக்கட்பேறு

Dinamani Kanchipuram

|

June 03, 2025

இல்லறவியலில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் ஆகிய அதிகாரங்களின் வரிசையில் மக்கட்பேற்றினைப் போற்றுகிற திருவள்ளுவர், அதன் பெருமை கருதி வாழ்க்கைத் துணைநலத்தின் நிறைவுக் குறட்பாவிலேயே மனைமாட்சியின் மங்கலமாகத் திகழ்பவள் மனைவி எனில், நல்லணியாக விளங்குவது நன்மக்கட்பேறு என்று முன்மொழிகிறார்.

- முனைவர் அருணன் கபிலன்

உலகத்தில் பல்லுயிரும் இன்புற்று வாழ்வதற்கு இயற்கை வகை செய்து தந்திருக்கிறது. ஆதலால் அவை தத்தம் இயல்புகளோடு இயற்கைக்கு முரணாகாத வண்ணம் வாழ்க்கையை நிறைவு செய்கின்றன. இறப்புக்கும் பிறப்புக்குமான இடைவெளியில் எல்லா உயிரும் தனக்கான மரபு வழியைத் தொடர்கின்றன. ஏனைய உயிர்களின் மரபுத் தொடர்ச்சிக்கு இனப்பெருக்கம் என்று பெயர். அதாவது, தன்னுடைய இனத்தைப் பெருக்கிக் கொள்வது என்று அதற்குப் பொருள். ஆனால், மனிதன் மேற்கொள்கிற மரபுத் தொடர்ச்சிக்குப் பேறு என்று பெயர். இதனை 'மக்கட்பேறு' என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிறப்பித்துக் கூறுகிறார்.

பெறுதல் என்பதும் பெருக்குதல் என்பதும் இயல்பாகத் தன் முயற்சியால் தோன்றக் கூடிய ஏனைய உயிர்ச்செயலின் விளைவு. ஆனால், பேறு என்பது அவ்வாறன்று. மானுட முயற்சியோடு இயற்கையின் அதற்கு மேலான ஆற்றலின் வெளிப்பாடாகப் பெறப்படுவதே பேறு.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பெற வேண்டிய பேறுகள் பலவுண்டு. அவற்றைத் தொகுத்துப் பதினாறு என்று வகைப்படுத்துகிற தமிழ் மரபு மக்கட்பேற்றினை நடுவில் நிறுத்துகிறது. ஆனால், திருவள்ளுவர் மற்ற பேறுகளை விடவும் முதன்மையானது மக்கட்பேறு என்று குறிப்பிடுவதுடன், அந்தப் பேற்றினை 'அறிவறிந்த மக்கட்பேறு' என்று பண்புசுட்டி முன்னிலைப்படுத்துகிறார். அதிலும் 'அறிவறியும் மக்கட்பேறு' என்று குறிப்பிடாமல் 'அறிவறிந்த மக்கட்பேறு' என்று குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு.

இல்லறவியலில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் ஆகிய அதிகாரங்களின் வரிசையில் மக்கட்பேற்றினைப் போற்றுகிற திருவள்ளுவர், அதன் பெருமை கருதி வாழ்க்கைத் துணைநலத்தின் நிறைவுக் குறட்பாவிலேயே மனைமாட்சியின் மங்கலமாகத் திகழ்பவள் மனைவி எனில், நல்லணியாக விளங்குவது நன்மக்கட்பேறு என்று முன்மொழிகிறார். தோன்றின் புகழொடு தோன்றுதலைத் தானே தன் திருக்குறளில் மக்கட்பேற்றின் சிறப்பினை உணர்த்துவதற்கு வள்ளுவர் பயன்கொண்டிருக்கிறார்.

ஏனெனில், கணவனும் மனைவியுமாக இல்லறம் நடத்தும் எல்லாருக்கும் மக்கட்பேறு எளிமையாக வாய்த்து விடுகிறது. ஆனால், 'அறிவறிந்த மக்கட்பேறு' என்பது அத்தனை எளிதாகக் கிடைத்து விடுகிற பேறு இல்லை என்பது அவர்தம் கருத்து. இது சங்க காலத்திலிருந்தே தொடர்ந்திருக்கிறது.

Dinamani Kanchipuram からのその他のストーリー

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயம்

எம்ஆர்எஃப் எம்எம்எஸ்சி எஃப்எம்எஸ்சிஐ தேசிய மோட்டார் சைக்கிள் கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெகதிஸ்ரீ குமரேசன், ரஹில், சூர்யா, ராஜ் குமார் சிறப்பிடம் பெற்றனர்.

time to read

1 min

January 12, 2026

Dinamani Kanchipuram

எழுந்திடு, விழித்திடு, உழைத்திடு...

இன்று பாரதத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷாரை விரட்டியது 'வெள்ளையனே வெளியேறு' என்ற 'குயிட் இந்தியா' இயக்கம்.

time to read

2 mins

January 12, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

சபலென்கா, மெத்வதேவ் சாம்பியன்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் அரினா சபலென்காவும், ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவும் பட்டம் வென்றனர்.

time to read

1 min

January 12, 2026

Dinamani Kanchipuram

ஸ்விட்டோலினா சாம்பியன்

ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைனின் எலனா ஸ்விட்டோலினா சாம்பியன் பட்டம் வென்றார்.

time to read

1 min

January 12, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

தேசிய கூடைப்பந்து: ரயில்வேக்கு இரட்டை பட்டம்

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டியில் இந்திய ரயில்வே இரட்டை சாம்பியன் பட்டம் வென்றது.

time to read

1 min

January 12, 2026

Dinamani Kanchipuram

கேரளத்தில் உள்ள கள்ளக்கடத்தல்காரர்களின் உரிமையைக் காக்கத் தவறி விட்டார்

பிரியங்கா மீது பாஜக குற்றச்சாட்டு

time to read

1 min

January 12, 2026

Dinamani Kanchipuram

சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.

time to read

1 min

January 12, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

தாமதமாகும் 'ஜனநாயகன்' - பின்புலம் என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜனவரி 9-ஆம் தேதி வெளி வரவேண்டிய நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' தணிக்கைக் குழுவினரின் தாமதத்தால் வெளிவராமல் போனது பரவலான விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

time to read

3 mins

January 12, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

கோலி அதிரடியில் இந்தியா வெற்றி

வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

time to read

1 min

January 12, 2026

Dinamani Kanchipuram

இளைஞர்களின் துறவி!

ஸ்ரீ அரவிந்தர் விவேகானந்தரைத் தம் குரு எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

time to read

3 mins

January 12, 2026

Translate

Share

-
+

Change font size