कोशिश गोल्ड - मुक्त

அறிவறிந்த மக்கட்பேறு

Dinamani Kanchipuram

|

June 03, 2025

இல்லறவியலில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் ஆகிய அதிகாரங்களின் வரிசையில் மக்கட்பேற்றினைப் போற்றுகிற திருவள்ளுவர், அதன் பெருமை கருதி வாழ்க்கைத் துணைநலத்தின் நிறைவுக் குறட்பாவிலேயே மனைமாட்சியின் மங்கலமாகத் திகழ்பவள் மனைவி எனில், நல்லணியாக விளங்குவது நன்மக்கட்பேறு என்று முன்மொழிகிறார்.

- முனைவர் அருணன் கபிலன்

உலகத்தில் பல்லுயிரும் இன்புற்று வாழ்வதற்கு இயற்கை வகை செய்து தந்திருக்கிறது. ஆதலால் அவை தத்தம் இயல்புகளோடு இயற்கைக்கு முரணாகாத வண்ணம் வாழ்க்கையை நிறைவு செய்கின்றன. இறப்புக்கும் பிறப்புக்குமான இடைவெளியில் எல்லா உயிரும் தனக்கான மரபு வழியைத் தொடர்கின்றன. ஏனைய உயிர்களின் மரபுத் தொடர்ச்சிக்கு இனப்பெருக்கம் என்று பெயர். அதாவது, தன்னுடைய இனத்தைப் பெருக்கிக் கொள்வது என்று அதற்குப் பொருள். ஆனால், மனிதன் மேற்கொள்கிற மரபுத் தொடர்ச்சிக்குப் பேறு என்று பெயர். இதனை 'மக்கட்பேறு' என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிறப்பித்துக் கூறுகிறார்.

பெறுதல் என்பதும் பெருக்குதல் என்பதும் இயல்பாகத் தன் முயற்சியால் தோன்றக் கூடிய ஏனைய உயிர்ச்செயலின் விளைவு. ஆனால், பேறு என்பது அவ்வாறன்று. மானுட முயற்சியோடு இயற்கையின் அதற்கு மேலான ஆற்றலின் வெளிப்பாடாகப் பெறப்படுவதே பேறு.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பெற வேண்டிய பேறுகள் பலவுண்டு. அவற்றைத் தொகுத்துப் பதினாறு என்று வகைப்படுத்துகிற தமிழ் மரபு மக்கட்பேற்றினை நடுவில் நிறுத்துகிறது. ஆனால், திருவள்ளுவர் மற்ற பேறுகளை விடவும் முதன்மையானது மக்கட்பேறு என்று குறிப்பிடுவதுடன், அந்தப் பேற்றினை 'அறிவறிந்த மக்கட்பேறு' என்று பண்புசுட்டி முன்னிலைப்படுத்துகிறார். அதிலும் 'அறிவறியும் மக்கட்பேறு' என்று குறிப்பிடாமல் 'அறிவறிந்த மக்கட்பேறு' என்று குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு.

இல்லறவியலில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் ஆகிய அதிகாரங்களின் வரிசையில் மக்கட்பேற்றினைப் போற்றுகிற திருவள்ளுவர், அதன் பெருமை கருதி வாழ்க்கைத் துணைநலத்தின் நிறைவுக் குறட்பாவிலேயே மனைமாட்சியின் மங்கலமாகத் திகழ்பவள் மனைவி எனில், நல்லணியாக விளங்குவது நன்மக்கட்பேறு என்று முன்மொழிகிறார். தோன்றின் புகழொடு தோன்றுதலைத் தானே தன் திருக்குறளில் மக்கட்பேற்றின் சிறப்பினை உணர்த்துவதற்கு வள்ளுவர் பயன்கொண்டிருக்கிறார்.

ஏனெனில், கணவனும் மனைவியுமாக இல்லறம் நடத்தும் எல்லாருக்கும் மக்கட்பேறு எளிமையாக வாய்த்து விடுகிறது. ஆனால், 'அறிவறிந்த மக்கட்பேறு' என்பது அத்தனை எளிதாகக் கிடைத்து விடுகிற பேறு இல்லை என்பது அவர்தம் கருத்து. இது சங்க காலத்திலிருந்தே தொடர்ந்திருக்கிறது.

Dinamani Kanchipuram से और कहानियाँ

Dinamani Kanchipuram

அமெரிக்காவுடன் போரிடவும் தயார்: ஈரான்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார், தேவைப்பட்டால் போரிடவும் தயார் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Kanchipuram

தமிழக அரங்குகளைப் பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்

புது தில்லியில் நடைபெற்றுவரும் பன்னாட்டுப் புத்தகக் காட்சியைப் பார்வையிட்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தமிழகத்தில் வாசிப்பு மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

‘டபுள் டெக்கர்’ மின்சார பேருந்து சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் டபுள் டெக்கர் மின்சார பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Kanchipuram

போக்குவரத்துப் பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத் தொகை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் 1,03,123 பணியாளர்களுக்கு ரூ.

time to read

1 min

January 13, 2026

Dinamani Kanchipuram

அரையிறுதியில் கர்நாடகம், சௌராஷ்டிரம்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம், சௌராஷ்டிரம் அணிகள் அரை யிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.

time to read

1 min

January 13, 2026

Dinamani Kanchipuram

வளர்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!

மத்திய அரசு வருகிற 2047ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.

time to read

3 mins

January 13, 2026

Dinamani Kanchipuram

மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 13, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

ஜனநாயகன் திரைப்பட விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Kanchipuram

பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு

மும்பை, ஜன.

time to read

1 min

January 13, 2026

Dinamani Kanchipuram

மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!

சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.

time to read

2 mins

January 13, 2026

Translate

Share

-
+

Change font size