कोशिश गोल्ड - मुक्त
மாநிலங்களவைத் தேர்தல் வேட்பு மனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் வழக்கு தள்ளுபடி
Dinamani Dharmapuri
|June 13, 2026
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
-
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மூன்று எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவர் மீது தெலங்கானா நீதிமன்றத்தில் இருக்கும் கிரிமினல் வழக்கு விவரத்தை வேட்புமனுவில் (பிரமாணப் பத்திரத்தில்) குறிப்பிடாமல் மறைத்துவிட்டதாகக் கூறி, மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மீனாட்சி நடராஜன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, அதுல் எஸ். சந்துர்கர் அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மீனாட்சி நடராஜன் சார்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் தேர்தல் அதிகாரி முழுவதும் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 33-ஏ பிரிவானது, கிரிமினல் வழக்குகளில் குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்தால் மட்டுமே, அந்த வழக்கு குறித்து வேட்பு மனுவில் (வேட்பாளர்) குறிப்பிடுவது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎன்எஸ் சட்டத்தின் 223-ஆவது பிரிவில், தனி நபர் புகார் மீது முடிவெடுக்கும் முன்பு, அதில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
यह कहानी Dinamani Dharmapuri के June 13, 2026 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Dharmapuri से और कहानियाँ
Dinamani Dharmapuri
ஆபாசமாக படமெடுத்த பெண்களுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது
சேலத்தில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் இளைஞர் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
1 min
June 14, 2026
Dinamani Dharmapuri
விமானப் படை விமானம் விபத்து: 5 வீரர்கள் உயிரிழப்பு
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போக்குவரத்து விமானம் அஸ்ஸாம் விமானப் படைத்தளத்தில் சனிக்கிழமை தரையிறங்கிய போது தரையில் மோதி வெடித்துச் சிதறியது.
1 mins
June 14, 2026
Dinamani Dharmapuri
தங்கம் பவுனுக்கு ரூ.480 உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880-க்கு விற்பனையானது.
1 min
June 14, 2026
Dinamani Dharmapuri
வளர்ந்து வரும் தொழில்நுட்பம் போரின் வரையறையை மாற்றியுள்ளது
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
1 min
June 14, 2026
Dinamani Dharmapuri
தேசிய மக்கள் நீதிமன்றம்: தமிழகத்தில் 91,000 வழக்குகளுக்கு தீர்வு
தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 91,369 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.664.47 கோடி பெற்றுத்தரப்பட்டுள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Dharmapuri
ஐரோப்பிய யூனியனில் உக்ரைன், மால்டோவா நாடுகளைச் சேர்க்க நாளை முதல் பேச்சுவார்த்தை
ரஷியாவுடனான போர் தொடர்ந்து வரும் நிலையிலும், உக்ரைன் மற்றும் மால்டோவா நாடுகளை ஐரோப்பிய யூனியனில் (ஐ.யூ.) இணைப்பதற்கான பேச்சுவார்த்தை லக்ஸம்பர்க்கில் வரும் திங்கள்கிழமை முதல் அதிகாரபூர்வமாகத் தொடங்கவுள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Dharmapuri
அமேசானில் இருசக்கர வாகன விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு
இந்தியாவில் பிரபல இணையவழி வர்த்தக தளமான அமேஸான் மூலம் நடைபெற்ற இருசக்கர வாகன விற்பனை கடந்த ஆண்டைவிட 2 மடங்கு அதிகரித்துள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Dharmapuri
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Dinamani Dharmapuri
மின்வெட்டு பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும்
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
1 min
June 14, 2026
Dinamani Dharmapuri
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Listen
Translate
Change font size

