कोशिश गोल्ड - मुक्त
ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்
Dinakaran Nagercoil
|June 23, 2025
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பல ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் இயந்திர மீன் பிடி படகுகளில் பணியாற்றுவதற்காக ஈரான், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர்.
-
கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களான தூத்தூர், இனயம், குறும்பனை, குளச்சல், முட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த உவரி, கூட்டப்புளி, இடிந்தகரை, கூத்தன்குழி, மைக்கேல் நகர், ஜார்ஜ் நகரைச் சேர்ந்த மீனவர்கள் இத்தொழிலில் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.
ஈரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், 'ஸ்பான்சர்ஸ்' எனப்படும் வெளிநாட்டு முதலாளிகளுக்கு கீழ் பணியாற்றுகின்றனர். இவர்கள் 7 முதல் 10 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்கின்றனர். ஒவ்வொரு முறையும் ஆழ்கடலில் மீன் பிடித்துவிட்டு திரும்பியவுடன் அவர்களுக்கு உடனே ஊதியம் வழங்கப்படுகிறது. பிற வளைகுடா நாடுகளில் 6 முதல் 8 வாரங்களுக்கு ஒருமுறைதான் ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே அதனை விட சிறந்ததாக ஈரான் இருப்பதால் மீனவர்கள், ஈரானை மீன்பிடி தொழிலுக்கு சிறந்த இடமாக கருதுகின்றனர்.
இருப்பினும், சில மீனவர்கள் மோசமான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். முதலாளிகளால் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவது. பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படுவது, உடல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் ஊதியமின்மை போன்ற பிரச்னைகள் அவ்வப்போது எழுந்து வருகிறது. ஈரானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளான ஜீரோ, கிஷ் தீவு, அசலுயே, லாவா தீவு, கம்கு, ஸ்டாரக் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களை மையமாக கொண்டு தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.
தற்போது ஈரானில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்ததால், ஈரானில் மீன்பிடி தொழில் செய்யும் குமரி மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன. கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை பாதுகாப்பாக மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உவரியைச் சேர்ந்த 36 மீனவர்கள் ஈரானில் சிக்கியுள்ளதாகவும், அவர்களின் குடும்பங்கள் தமிழக அரசின் உதவியை நாடியுள்ளனர்.
यह कहानी Dinakaran Nagercoil के June 23, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinakaran Nagercoil से और कहानियाँ
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது
வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்
1 mins
June 17, 2026
Dinakaran Nagercoil
இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்
தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.
1 min
June 17, 2026
Dinakaran Nagercoil
ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி
உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், \"ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன.
1 min
June 17, 2026
Dinakaran Nagercoil
5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்
உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு
1 mins
June 17, 2026
Dinakaran Nagercoil
வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை
பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்
3 mins
June 17, 2026
Dinakaran Nagercoil
6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தை
பேரணாம்பட்டு அருகே கொடூரம்
1 mins
June 16, 2026
Dinakaran Nagercoil
இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை
பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு
1 min
June 16, 2026
Dinakaran Nagercoil
வங்கதேசப் பிரதமரின் உதவியாளர் 2 மணி நேரம் தடுத்து வைப்பு
வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான், இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார்.
1 min
June 16, 2026
Dinakaran Nagercoil
எந்த தேதியில் என்ன நடந்தது?
பிப்ரவரி 28: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின; இதில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் பல உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
2 mins
June 16, 2026
Dinakaran Nagercoil
பெண்ணின் முடியை பிடித்து தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல்
ஓமலூர் அருகே வழித்தட பிரச்னையில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஒருவரை தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
June 15, 2026
Translate
Change font size

