வெள்ளச்சி!
Thozhi
|1-15, August 2025
கனத்துத் ததும்பும் மல்லிகை தோட்டத்திற்கு நடுவில் இருந்தது இளவரசியின் ஓலை வீடு.
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இளவரசி, பள்ளிக் கூடம் விட்டு வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக புறவாசல் பக்கம் போய் வெள்ளச்சியை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டப் பிறகுதான் வீட்டிற்குள்ளேயே செல்வாள்.
வெள்ளச்சி என்றால் இளவரசிக்கு உயிர். தன் அம்மாவின் திடீர் இறப்பு, அதைத் தொடர்ந்து திருமணமாகிப்போன அக்காவின் பிரிவு... இப்படி எல்லாவற்றிற்கும் வடிகாலாய் இருந்தது இந்த வெள்ளச்சிதான். இந்த ஒரு வருட காலமாக பேச்சுத் துணையாக இருந்ததுகூட வெள்ளச்சிதான். “வெள்ளச்சி..!” என்ற குரல் கேட்ட அடுத்த நொடியே ஓடி வந்து இளவரசியின் மடியில் சுருண்டு கொள்ளும். அதன் இதமான கதகதப்பு இறந்து போன தாயின் பரிசத்தை உணரச் செய்யும்.
நல்லதோ கெட்டதோ இளவரசியின் மனதில் உள்ளதை வெள்ளச்சியிடம்தான் பகிர்ந்துகொள்வாள்.
வெள்ளச்சிக்கென்று பெரிய கதையே இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இளவரசி தன் அப்பா அழகப்பனோடு சந்தைக்குப் போன போது ஏலத்திற்கு வந்திருந்த வெள்ளச்சியை பார்த்தாள். முயல் குட்டிப்போல் முசுமுசுவென்று இவளைப் பார்த்து தலையை ஆட்டியது.
“அப்பா இந்த ஆட்டுக்குட்டியை எனக்கு வாங்கித் தர்றீங்களாப்பா..?” சிறு குழந்தையைப்போல் கேட்ட மகளை யோசனையோடு பார்த்தவர், தன் கால்சட்டை பாக்கெட்டை தொட்டுப் பார்த்துவிட்டு சட்டென்று சம்மதித்தார்.
“சரி சரி வாங்கித்தரேன்! அதுக்கு என்ன தேவையோ அதையெல்லாம் நீதான் கவனிச்சிக்கணும் சரியா..." என்றவர், மகளின் ஆசையை நிறைவேற்றும் களிப்போடு ஆட்டுக்குட்டியை அடிமாட்டு விலைக்கு பேசி பாதிப்பணத்தை கொடுத்துவிட்டு மீதி அடுத்த வாரம் சந்தைக்கு வரும்போது கொடுப்பதாக வாக்களித்த போது, அழகப்பனின் பேச்சில் நம்பிக்கையற்று தலையை சொரிந்தான் ஆட்டுக்காரன்.
“என்னப்பா... அப்படி பார்க்கிறே? இந்த அழகப்பனுக்கு சொல்லொன்னு செயல் ஒன்னெல்லாம் கிடையாது! சொன்ன தேதிக்குள் உன் காசு கைக்கு வந்துடும் புரியுதா?” அவனுடைய பதிலுக்கு காத்திராமல் மகளை அழைத்துக்கொண்டு கிளம்பினார் அழகப்பன்.
மகிழ்ச்சியோடு ஆட்டுக்குட்டியை வீட்டிற்கு தூக்கிக்கொண்டு வந்தாள் இளவரசி.
ஆட்டுக்குட்டியை பார்த்தவுடன் இளவரசியின் அண்ணன் வேலு கோபப்பட்டு கத்தினான்.
இளவரசிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. வாசற்படியில் குத்திட்டு அமர்ந்தாள்.
Esta historia es de la edición 1-15, August 2025 de Thozhi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Thozhi
Thozhi
பாரிலே நாளைய சரிதம் நாம்!
இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை நம் நாடே கொண்டாடி மகிழ்கிறது... உலகமே போற்றுகிறது.
2 mins
16-30, Nov 2025
Thozhi
மாரடைப்பைத் தவிர்க்க!
பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
First Lady of New York City
தனது தனித்துவமான அடையாளங்களுடன் ஓவியர் ரமா துவாஜி நியூயார்க் நகரின் ஃபர்ஸ்ட் லேடியாகி இருக்கிறார்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
ராமநாதபுரம் to தாய்லாந்து
மிஸ் ஹெரிடேல்
1 mins
16-30, Nov 2025
Thozhi
கையாறு நதி
பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
நாங்களும் மனிதர்களே
“சார் கொஞ்சம் நில்லுங்கள்...” என்றாள் பூங்கொடி. குரல் கேட்டு திரும்பி பார்த்தார் கதிரேசன். “என்னம்மா... என்னையா கூப்பிட்ட.”
4 mins
16-30, Nov 2025
Thozhi
போலி ORS பானங்களுக்கு தடையின் பின்னணியில் பெண் டாக்டர்!
உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் 'ORS' (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள்.
2 mins
16-30, Nov 2025
Thozhi
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தன்னம்பிக்கையே சாதனைக்கான வழிகாட்டி!
அப்பா தொழில் செய்து வந்தால் அவரின் வாரிசாக அவர் மகன்தான் அதனை எடுத்து நடத்துவார் என்ற காலம் மாறி, வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளாலும் அப்பாவின் தொழிலை திறம்பட செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த மாலதி தாமோதரன்.
1 mins
16-30, Nov 2025
Thozhi
தேசம் கடந்து மணக்கும் மதுரை மல்லி!
“மல்லிகை... என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..!” என்ற பாடலுக்கு ஏற்ப மல்லிகை மலரின் மணத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
2 mins
16-30, Nov 2025
Translate
Change font size
