Intentar ORO - Gratis
பிசுபிசுக்கும் சர்வதேச நீதி கோரல்?
Tamil Mirror
|August 18, 2025
வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முழுமையான மக்கள் ஆதரவு கிடைக்குமா? இல்லையா? என்பதை ஒரு புறம் வைத்துக் கொள்வோம். இந்தக் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக ஒரு சில தரப்புகளும், ஆதரவு வழங்கமாட்டோம், வழங்கக் கூடாது என்ற வகையில் மற்றொரு தரப்பும் என்று நிலைப்பாடு வெவ்வேறாக இருந்து கொண்டிருக்கிறது.
வடக்கு கிழக்கில் நடைபெற்ற யுத்த காலத்தில் காணாமல் ஆகப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு வெளிப்படுத்த வேண்டும், அவர்களுக்கான நீதி வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அப் போராட்டங்களை நடத்திவருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒவ்வொருவராக மரணமாகிக் கொண்டு இருக்கின்றனர். இருந்தாலும் அப்போராட்டமானது தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாட்டுக்கு கடந்த மாதத்தில் விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரும் அவர்களைச் சந்தித்திருந்தார்.
கடந்த காலங்களில் ஜனாதிபதிகளாக இருந்தவர்கள், அரசாங்கத்தின் பிரதமர், அமைச்சர்கள் காணாமலாக்கப்பட்டமை என்கிற விடயத்தினை ஏற்றுக்கொள்ளவே அஞ்சி அது தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கும் தயங்கியிருந்தனர். அதனால் அவர்கள் அவ்விவகாரம் குறித்து பேசுவதேயில்லை. அல்லது அவ்வாறு ஒரு தரப்பு இல்லை என்றவாறாகவே கருத்துக்களை வெளியிட முயன்றிருந்தனர். இதற்கிடையில் தான், கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற, ஊடகவியலாளர்களான தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப். எம். பஸீர் ஆகியோர் எழுதிய 'செம்மணி' புத்தக வெளியீடு மற்றும் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் மனிதப் புதைகுழிகள் எனும் தலைப்பிலான கலந்துரையாடலில் கலந்து கொண்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னாள் தவிசாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் வெளியிட்ட கருத்து கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. அவருடைய கருத்து முன்னைய அரசாங்கத்தின் கருத்தா, பெரும்பான்மை மக்களின் சிந்தனையா என்று எண்ணவும் தோன்றுகின்றது.
"இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்படல்கள் இடம்பெற்றன என்ற உண்மையை அரசும், அரசு சாராத சகல தரப்புகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்விவகாரத்துக்கு சர்வதேசத்தின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதொரு விடயமாகும். எனவே, நாம் உள்ளகப் பொறிமுறையை மேலும் பலப்படுத்த வேண்டும்" என்பது அவரது கருத்தாகும்.
Esta historia es de la edición August 18, 2025 de Tamil Mirror.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
