Intentar ORO - Gratis
விநாயகர் சதுர்த்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு
Dinamani Vellore
|August 28, 2025
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் 1040 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
-
வேலூர்/ திருப்பத்தூர்/ராணிப்பேட்டை, ஆக.27: அனைத்து கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. விநாயகர் சதுர்த்தி புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் 1040 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
அதிகபட்சம் 10 அடிக்கு மிகாமல் அமைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் புதுமையான வடிவமைப்புடன் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, தொரப்பாடியில் காவல் நிலையத்தில் காவலர்களாக பணி யாற்றும் விநாயகர்கள், கைதியாக எலி என சித்தரித்து அமைக்கப்பட்டிருந்த விநாயகர் கோயில் வரவேற்பை பெற்றது.
வேலூர் சைதாப்பேட்டை கன்னாரத்தெருவில் 10 அடி உயரம் கொண்ட விநாயகர் 200 கிலோ காகிதத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. இதேபோல், மாவட்டம் முழுவதும் பல இடங்களில் புதுமையான வடிவமைப்புகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பக்தர்களின் கவனம் ஈர்த்தது.
இதுதவிர, வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள செல்வ விநாயகர், ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலிலுள்ள 1700 கிலோ எடை வெள்ளியாலான ஸ்ரீசக்தி கணபதி, தோட்டப்பாளையத்திலுள்ள செல்வ கணபதி, ஆற்காடு சாலையிலுள்ள வரசித்தி விநாயகர் என மாவட்டம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
இதனிடையே, வீடுகளில் விநாயகர் வழிபாடு செய்திட ஆங்காங்கே களிமண் விநாயகர் சிலைகளின் விற்பனையும் தீவிரமாக நடைபெற்றன. பொதுமக்கள் பூஜை பொருள்கள் வாங்க கடைவீதிகளில் திரண்டிருந்தனர்.
Esta historia es de la edición August 28, 2025 de Dinamani Vellore.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Vellore
Dinamani Vellore
ஹைதராபாத்தில் அக்டோபரில் வில்வித்தை பிரீமியர் லீக்
வில்வித்தை பிரீமியர் லீக் (ஏபிஎல்) இரண்டாவது சீசன் தொடர் ஹைதராபாதில் வரும் அக். 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
1 min
June 11, 2026
Dinamani Vellore
அவதூறு பேச்சு: யூடியூபர் முக்தார் கைது
சமூக ஊடகத்தில் அவதூறாகப் பேசிய வழக்கில், யூடியூபர் முக்தார் கர்நாடக மாநிலத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 11, 2026
Dinamani Vellore
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்
அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
June 11, 2026
Dinamani Vellore
அல்லி நகரத்து மண்வாசனை...
நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
3 mins
June 11, 2026
Dinamani Vellore
அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் திமுகவில் இணைந்தார்
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா. பென்ஜமின் அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் புதன்கிழமை இணைந்தார்.
1 min
June 11, 2026
Dinamani Vellore
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Vellore
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Dinamani Vellore
நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி
பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.
1 mins
June 11, 2026
Dinamani Vellore
வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான இருவருக்கும் எதிராக போலீஸார் சம்பவம் நடைபெற்ற 21 நாள்களிலேயே 819 பக்க குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தாக்கல் செய்துள்ளனர்.
1 min
June 11, 2026
Dinamani Vellore
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Translate
Change font size

