மேலும் 34 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
Dinamani Thoothukudi
|June 17, 2025
நிவாரண முகாம்கள் அருகே தொடரும் துப்பாக்கிச்சூடு
-
டேய்ர் அல்-பாலா, ஜூன் 16: காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தவர்கள் மீது திங்கள்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேலும் 34 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது: காஸா முழுவதும் திங்கள்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் ராஃபா நகரில் 33 பேரும் மத்திய காஸாவில் ஒருவரும் அடங்குவர் என்று அமைச்சகம் கூறியது.
அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) நிவாரணப் பொருள் விநியோக மையங்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்தின் நிவாரண மையங்களுக்கும் செல்லும் வழியில் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.
இதற்கு முன்னர் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களைப் போலவே இவற்றையும் இஸ்ரேல் ராணுவம்தான் நடத்தியதாக சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இருந்தாலும், இந்தத் தகவலை இஸ்ரேல் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை அனுமதித்ததில் இருந்தே அந்தப் பொருள்களை வாங்க முகாம்களை நோக்கி வருவோர் மீது இஸ்ரேல் படையினர் தினமும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். ஆனால், ஒரே நாளில் இவ்வளவு அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
Esta historia es de la edición June 17, 2025 de Dinamani Thoothukudi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்
அரசு ஊழியர்களின் கடைசி மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 mins
January 04, 2026
Dinamani Thoothukudi
எல்லாவற்றையும் வாசியுங்கள்
தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.
1 mins
January 04, 2026
Dinamani Thoothukudi
வருடச் சிவந்த மலரடிகள்
சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.
2 mins
January 04, 2026
Dinamani Thoothukudi
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு
முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 04, 2026
Dinamani Thoothukudi
நீரில் விழுந்த நெருப்பு!
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.
1 mins
January 04, 2026
Dinamani Thoothukudi
தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி தொடக்கம்
ஷூட் அவுட்டில் ஹைதராபாதை வீழ்த்தியது
1 min
January 04, 2026
Dinamani Thoothukudi
அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!
“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.
1 min
January 04, 2026
Dinamani Thoothukudi
எம்பியை ஈங்குப் பெற்றேன்!
உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.
1 min
January 04, 2026
Dinamani Thoothukudi
பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்
லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
1 min
January 04, 2026
Dinamani Thoothukudi
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
3 mins
January 03, 2026
Translate
Change font size
