Facebook Pixel அன்பின் வழியது உயிர்நிலை | Dinamani Pudukkottai - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

அன்பின் வழியது உயிர்நிலை

Dinamani Pudukkottai

|

October 30, 2025

நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.

- கல்யாணி வெங்கடராமன்

வெறுப்பு சார்ந்த எண்ணங்கள் மனதின் ஆழத்திலே நீறுபூத்த நெருப்பைப் போல் வேரூன்றி வீற்றிருக்கும். இதனால், பெரும் கேடுகள் விளையக்கூடும். வெறுப்பு உள்ள இடத்தில் அன்பு இருப்பதில்லை. ஒருவரிடம் ஒருவர் எத்தகைய பரிவும் இன்றி உள்ளனர். இரு நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து போர் நடைபெறுகிறது. அதன் விளைவுகளையும் உலகம் கண்கூடாகக் கண்டு வருகிறது. ஆங்காங்கே எல்லைத் தகராறுகள் வெடிக்கின்றன. உலகில் அமைதி நிலவ வேண்டும் எனில், மனிதனின் மனத்திலே அன்பு சுரக்க வேண்டும்.

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அன்பு என்னும் உணர்வானது இயல்பாகவே அமைந்துள்ளது. அன்பு இல்லையெனில் வாழ்க்கைத் தொடர் என்பது அற்று விடும். அன்புதான் உடல் நலம், மனநலன் போன்றவற்றின் மேன்மையான நிலைக்கும் அடித்தளமாக விளங்குகிறது. அன்பிற்குப் பரந்த, விரிந்த ஆற்றல் உள்ளது. அன்பு அலைகளை இயற்கையிடம் பாயும்படிச் செய்தால், அதன் பயனாக உலகெங்கிலும் நல்ல விளைவுகளைத் தோற்றுவிக்க முடியும்.

கன்னடக் கவிஞர் குவெம்பு, 'செல்வம் உள்ளது, கல்வி உள்ளது விஞ்ஞானமும் கையில் உள்ளது சினம் மிக்க போர்க்களத்தின் செந்தழல் மருள் கொண்டு திரண்டு எழுந்த நிலை' என்று தன் கவிதையில் தற்காலச் சூழலை உள்ளவாறு வடித்துள்ளார்.

MÁS HISTORIAS DE Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Pudukkottai

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Pudukkottai

நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்

நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Pudukkottai

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Pudukkottai

மனநிலை மாற வேண்டும்!

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

May 12, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Pudukkottai

நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Listen

Translate

Share

-
+

Change font size