Intentar ORO - Gratis
யாருக்கான எதிர்காலத்தை கட்டமைக்கிறோம்?
Dinamani Karur
|July 30, 2025
நல்லவற்றைக் கற்று நாடு போற்றும் மனிதனாக தம்பிள்ளை வரவேண்டும் என்ற ஒற்றைக் கனவைத் தவிர பெற்றோருக்கு வேறெதுவுமில்லை. இத்தகைய குழந்தைகளை போதையின் பாதைக்கு இழுத்துச் செல்லும் கொடுஞ்செயலைச் செய்கிறவர்கள் பாதகர்கள்; துணைபோகிறவர்கள் படுபாதகர்கள்.
ன்றைய சமுதாயத்தில் மிகுதியான குற்றச் செயல்களுக்கு அடிப்படை காரணிகளாக பெரிதும் விளங்குபவை சமூக ஊடகங்களும் போதைப் பொருள் களின் அளவுகடந்த பயன்பாடும் என்றால் அது மிகை இல்லை. அதிலும், முக்கியமாக இந்த இரண்டு காரணிகளும் மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தை இருண்டு போகச் செய்யும் சாத்தான்களாக உருமாறி வேகமெடுத்துள்ளன. சமூக ஊடகங்களில் நிகழ்கின்ற குற்றங்கள் தொழில்நுட்ப ரீதியாக நிகழ்த்தப்படுகின்றன. கண்காணிப்பதில் கூடுதல் சிரத்தை தேவைப்படுகிறது. ஆனால், போதைப் பொருள்களின் நடமாட்டம் என்பது கண்காணிக்கவும் தடுக்கவும் இயலக்கூடிய ஒன்றாகும். சான்றாக, வான் நுண்ணறிவு சுங்கத் துறை அதிகாரிகள் அண்மையில் திருச்சி விமான நிலையத்தில் 11.8 கிலோ அளவுள்ள ஹைட்ரோ கஞ்சா எனப்படும் தீங்குதரும் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு ரூ.12 கோடி ஆகும். இந்திய அரசின் பத்திரிகைத் தகவல் பிரிவு அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டு இந்திய அளவில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.25,330 கோடி ஆகும். போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் தடுப்பு தொடர்பான ஐ.நா. அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, உலக அளவில் ஏறத்தாழ 30 கோடிக்கும் அதிகமான மக்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி உடல்ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதனால், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் என்பது சர்வதேச அளவில் சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு சவாலாகவும், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் ஆரோக்கியத்துக்கு சீர்கேடாகவும், ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் சீர்குலைவை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. பட்டிதொட்டி எங்கும் தங்குதடை இன்றி சமூக விரோதிகளால் புழக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள போதைப் பொருள்களின் பயன்பாடு சிறியோர், பெரியோர் என்ற பாகுபாடின்றி மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், கூலித் தொழிலாளர்கள் மட்டுமல்ல, நாளைய இந்தியாவின் நம்பிக்கையாக விளங்குகிற மாணவர்களிடமும் அதிகரித்துவரும் ஆபத்தான சூழ்நிலையை நாம் எதிர்கொண்டு வருகிறோம் என்பது மிகவும் கவலை தருகின்ற ஒன்றாகும். முக்கியமாக, உயிருக்குப் பெரிதும் ஆபத்தாக விளங்குகிற வேதிப்பொருள்களால் உருவாக்கப்படுகிற செயற்கை போதைப் பொருள்களின் நுகர்வு அண்மைக்காலங்களில் அதிகரித்து இதன் விளைவாக இறப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, போதைப் பொருள
Esta historia es de la edición July 30, 2025 de Dinamani Karur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Karur
Dinamani Karur
தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு
தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Karur
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.
1 mins
January 06, 2026
Dinamani Karur
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு
முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 06, 2026
Dinamani Karur
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.
1 min
January 06, 2026
Dinamani Karur
ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Karur
திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு
திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.
1 min
January 06, 2026
Dinamani Karur
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.
1 min
January 06, 2026
Dinamani Karur
திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு
திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.
1 min
January 06, 2026
Dinamani Karur
திருச்செந்தூர் கோயில் பெயரில் சமூக ஊடகங்களில் மோசடி
பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்
1 min
January 06, 2026
Dinamani Karur
புதிய சிக்கலில் வங்கதேச உறவு!
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.
2 mins
January 06, 2026
Translate
Change font size
