Intentar ORO - Gratis

காலத்தில் கரைந்துவிட்ட கம்பதாசன்

Dinamani Dharmapuri

|

October 12, 2025

தாஸ் என்றாலும் தாசன் என்றாலும் பொருள் ஒன்றுதான். இலக்கியத்தில் நாம் முதன்முதல் அறியக்கூடிய தாஸ் வடமொழியில் பல காவியங்களை எழுதிய மகாகவி காளிதாஸ். இந்தியில் இராமாயணம் எழுதிய துளசிதாஸ், கன்னடத்தில் புரந்தரதாஸ், ஹிந்தியில் கபீர்தாஸ், என்று பலர் இருந்திருக்கிறார்கள்.

- கவிஞர் முத்துலிங்கம்

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் நாடக உலகின் தந்தையென்று போற்றப்படுகின்ற சங்கரதாஸ், திரைப்படத்துக்கு முதலில் பாடல் எழுதிய மதுர பாஸ்கரதாஸ், பி.யு.சின்னப்பா நடித்த ஆரிய மாலா, ஜெகதலப்பிரதாபன் போன்ற படங்களுக்குக் கதை வசனம் எழுதியவரும், எம்.ஜி.ஆர். நடித்த 'நாடோடி மன்னன்' படத்தில் ‘உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா' என்ற பாடலை எழுதியவருமான கவி லட்சுமண தாஸ் என்று பலர் இருந்திருக்கிறார்கள். ‘கடலுக்குள் அரண் கட்டி கன்னி நீ வாழ்ந்தாலும் உடலுக்குள்ளே மாரன் உதயமாவது திண்ணம்' என்று அந்தக் கால பூலோக ரம்பை படத்தில் பாடல் எழுதிய புதுக்கம்பன் பூமிபால தாஸ்.

1951-இல் வெளிவந்த சிங்காரி என்ற படத்தில் ‘ஒருசாண் வயிறே இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா?' என்று பாடல் எழுதிய தஞ்சை ராமையா தாஸ், உலகத்தில் எவரும் எழுதாத அளவில் 800 படங்களுக்கு மேல் வசனம் எழுதி கின்னஸ் சாதனை படைத்தவரும், ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதியவரும், தான் வசனம் எழுதிய நூற்றுக்கணக்கான மொழிமாற்றுப் படங்களில் 55 படங்களுக்கு எல்லாப் பாடல்களையும் என்னையே எழுத வைத்தவருமான வசன கர்த்தா ஆரூர்தாஸ், ஆகியோரும் இருந்தார்கள்.

பின்னணிப் பாடகர் ஜேசுதாஸ், பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ், தொழில் அதிபர் வி.ஜி.பன்னீர்தாஸ், அரசியல் தலைவர்களில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஆகியோரும் பிரபலமானவர்கள்.

அதுபோல், தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டவர்களில் பாரதிதாசன், கண்ணதாசன், வாணிதாசன், கம்பதாசன், சுப்புரத்தின தாசன் என்று பெயர் வைத்துக் கொண்ட சுரதா ஆகியோர் புகழ்பெற்றவர்கள். இதில் சுரதா உவமைக் கவிஞர் என்று புகழ் பெற்றவர். அப்படிப்பட்டவரே புதிய உவமைகளில், புதிய சிந்தனைகளில், புதிய கற்பனைகளில் கம்பதாசன் முதலிடத்தில் இருக்கும் சிறப்புக்குரியவர் என்று பாராட்டியிருக்கிறார். அன்றைய காலத்தில் இந்தியா முழுதும் அறிந்த ஒரே தமிழ்க் கவிஞர் கம்பதாசன்தான் என்றும் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் கண்ணதாசன் சகாப்தம் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலை.

கிளியின் சிவந்த மூக்கிற்கு பச்சை மிளகாய்ப் பழத்தை பாரதிதாசன் உவமை சொல்லியிருப்பார். 'வெற்றிலை போடாமலே வாய்சிவந்த பச்சைப் பசுங்கிளிகள்' என்று பாகவதர் நடித்த அமரகவி படத்தில் எழுதியிருப்பார் சுரதா.

MÁS HISTORIAS DE Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு

வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தினமும் ஒரு மணி நேர புத்தக வாசிப்பு அவசியம்

இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

time to read

2 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்

மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

தொட்டனைத் தூறும் மணற்கேணி...

ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

time to read

1 min

January 09, 2026

Translate

Share

-
+

Change font size