Intentar ORO - Gratis
காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன்
Dinamani Dharmapuri
|October 05, 2025
அந்த மாணவரின் கையில் விலங்கிட்டு ஆங்கிலேய அரசின் போலீஸார் மதுரை ஆரப்பாளையம் சிறையிலிருந்து நடத்தி, வைகையின் வடகரையிலிருந்த மதுரை மாவட்ட ஆட்சியரின் முன் கொண்டு நிறுத்தினர். மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்துகொண்ட அந்த மாணவரை அலிபுரம் சிறையில் 60 நாள்கள் அடைக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டார். இதனால் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கவும் சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்தது.
அவர் மீண்டும் மதுரைக் கல்லூரி மூலமாக பட்டப் படிப்பை முடித்து, திருச்சி புனித வளனார் கல்லூரியில் ஹானர்ஸ் படித்தார். 1948-இல் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் முதுகலையில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.
1952-இல் தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்து, 1961-இல் கரூர் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். தன்னுடைய மென்மையான அணுகுமுறையால் அனைவரையும் கவர்ந்தார். அவருடைய பணியைப் பாராட்டி இந்திய ஆட்சிப் பணியை தமிழ்நாடு அரசு வழங்கி சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான தாமிரப் பட்டயம் வழங்கியது.
1967 ஜூலை 1-இல் எந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திரத்துக்கு முன்பு கையில் விலங்கிட்டு நிறுத்தப்பட்டாரோ, அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக மாடிப் படிகளில் ஏறி, ஆட்சியர் அறையில் அமர்ந்து பணியாற்றத் தொடங்கினார். அவர்தான் ‘காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன்' என்ற வள்ளுவர் வாக்குக்கு வாழும் உதாரணமாயிருக்கும் லட்சுமிகாந்தன் பாரதி.
2025 அக்டோபர் 4-இல் தன்னுடைய 99 வயதை முடித்து, அக். 5-இல் தன்னுடைய நூறாவது அகவையை தொடங்குகிறார் இவர். இவருக்கு 2024-ஆம் ஆண்டில் தினமணி சார்பில் 'பாரதியார் விருது' வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 'பாரதி' என்ற பட்டப் பெயருடன் விளங்கும் குடும்பங்கள் இரண்டு. இவ்விரு குடும்பத்தின் மூல புருஷர்களுக்கும் 'பாரதி' பட்டத்தை வழங்கி கௌரவித்தவர் அன்றைய எட்டயபுரம் மகாராஜா. ஒருவர் சுப்ரமணிய பாரதி, மற்றொருவர் லட்சுமிகாந்தன் பாரதியின் தாய்வழித் தாத்தா சோமசுந்தர பாரதி. இருவருமே எட்டயபுரத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். நான் சட்டப் பேரவை உறுப்பினராக அன்றைய அமைச்சர் ராஜாராமுடன் குற்றாலத்திலிருந்து தென்காசிக்கு வந்து கொண்டிருந்தபோது, 'பாரதி நகர்’ என்ற பெயரைப் பார்த்தவுடன், "இது யார் பெயர் தெரியுமா?" என்கிறத் தகவலைச் சொன்னார் அமைச்சர்.
Esta historia es de la edición October 05, 2025 de Dinamani Dharmapuri.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்
தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.
1 mins
January 11, 2026
Dinamani Dharmapuri
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளிப் பெண்!
பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
1 min
January 11, 2026
Dinamani Dharmapuri
சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு
திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்தது மற்றும் பிறந்தநாள் விழா ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு செய்தி யாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்.
1 min
January 11, 2026
Dinamani Dharmapuri
தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்
பதினாறு பேறுகளும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க' என்று மங்களகரமாக மக் களை, குறிப்பாக மணமக்களை வாழ்த்துவது தொன்றுதொட்டு இருந்து வரும் நம் தமிழர் களின் மரபாகும்.
1 min
January 11, 2026
Dinamani Dharmapuri
தேசிய சீனியர் கூடைப்பந்து: இறுதிச் சுற்றில் தமிழகம்-ரயில்வே ஆடவர்
75-ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டியில் ஆடவர் இறுதிச் சுற்றில் தமிழகம்-இந்திய ரயில்வே அணிகள் மோதுகின்றன.
1 min
January 11, 2026
Dinamani Dharmapuri
போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Dharmapuri
மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை
இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.
1 mins
January 11, 2026
Dinamani Dharmapuri
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்
அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
1 mins
January 11, 2026
Dinamani Dharmapuri
அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!
தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.
2 mins
January 11, 2026
Dinamani Dharmapuri
இணையத்தில் வாசிப்போம்...
கொரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது.
1 mins
January 11, 2026
Translate
Change font size
