Denemek ALTIN - Özgür
காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன்
Dinamani Dharmapuri
|October 05, 2025
அந்த மாணவரின் கையில் விலங்கிட்டு ஆங்கிலேய அரசின் போலீஸார் மதுரை ஆரப்பாளையம் சிறையிலிருந்து நடத்தி, வைகையின் வடகரையிலிருந்த மதுரை மாவட்ட ஆட்சியரின் முன் கொண்டு நிறுத்தினர். மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்துகொண்ட அந்த மாணவரை அலிபுரம் சிறையில் 60 நாள்கள் அடைக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டார். இதனால் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கவும் சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்தது.
அவர் மீண்டும் மதுரைக் கல்லூரி மூலமாக பட்டப் படிப்பை முடித்து, திருச்சி புனித வளனார் கல்லூரியில் ஹானர்ஸ் படித்தார். 1948-இல் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் முதுகலையில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.
1952-இல் தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்து, 1961-இல் கரூர் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். தன்னுடைய மென்மையான அணுகுமுறையால் அனைவரையும் கவர்ந்தார். அவருடைய பணியைப் பாராட்டி இந்திய ஆட்சிப் பணியை தமிழ்நாடு அரசு வழங்கி சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான தாமிரப் பட்டயம் வழங்கியது.
1967 ஜூலை 1-இல் எந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திரத்துக்கு முன்பு கையில் விலங்கிட்டு நிறுத்தப்பட்டாரோ, அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக மாடிப் படிகளில் ஏறி, ஆட்சியர் அறையில் அமர்ந்து பணியாற்றத் தொடங்கினார். அவர்தான் ‘காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன்' என்ற வள்ளுவர் வாக்குக்கு வாழும் உதாரணமாயிருக்கும் லட்சுமிகாந்தன் பாரதி.
2025 அக்டோபர் 4-இல் தன்னுடைய 99 வயதை முடித்து, அக். 5-இல் தன்னுடைய நூறாவது அகவையை தொடங்குகிறார் இவர். இவருக்கு 2024-ஆம் ஆண்டில் தினமணி சார்பில் 'பாரதியார் விருது' வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 'பாரதி' என்ற பட்டப் பெயருடன் விளங்கும் குடும்பங்கள் இரண்டு. இவ்விரு குடும்பத்தின் மூல புருஷர்களுக்கும் 'பாரதி' பட்டத்தை வழங்கி கௌரவித்தவர் அன்றைய எட்டயபுரம் மகாராஜா. ஒருவர் சுப்ரமணிய பாரதி, மற்றொருவர் லட்சுமிகாந்தன் பாரதியின் தாய்வழித் தாத்தா சோமசுந்தர பாரதி. இருவருமே எட்டயபுரத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். நான் சட்டப் பேரவை உறுப்பினராக அன்றைய அமைச்சர் ராஜாராமுடன் குற்றாலத்திலிருந்து தென்காசிக்கு வந்து கொண்டிருந்தபோது, 'பாரதி நகர்’ என்ற பெயரைப் பார்த்தவுடன், "இது யார் பெயர் தெரியுமா?" என்கிறத் தகவலைச் சொன்னார் அமைச்சர்.
Bu hikaye Dinamani Dharmapuri dergisinin October 05, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Dharmapuri'den DAHA FAZLA HİKAYE
Dinamani Dharmapuri
மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!
சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.
2 mins
January 13, 2026
Dinamani Dharmapuri
‘டபுள் டெக்கர்’ மின்சார பேருந்து சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் டபுள் டெக்கர் மின்சார பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
1 min
January 13, 2026
Dinamani Dharmapuri
பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு
மும்பை, ஜன.
1 min
January 13, 2026
Dinamani Dharmapuri
சுஸுகி மோட்டார்சைக்கிள் விற்பனை 26% உயர்வு
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 13, 2026
Dinamani Dharmapuri
அமெரிக்காவுடன் போரிடவும் தயார்: ஈரான்
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார், தேவைப்பட்டால் போரிடவும் தயார் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
1 min
January 13, 2026
Dinamani Dharmapuri
பொங்கல்: சென்னையிலிருந்து இதுவரை 15 லட்சம் பேர் பயணம்
பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் இதுவரை சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
1 min
January 13, 2026
Dinamani Dharmapuri
ரோஹிங்கியாக்கள் இன அழிப்பு மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
1 min
January 13, 2026
Dinamani Dharmapuri
வளர்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!
மத்திய அரசு வருகிற 2047ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.
3 mins
January 13, 2026
Dinamani Dharmapuri
அயன்மேன் டிரையத்லான்: இந்திய அணியினர் சிறப்பிடம்
சென்னையில் முதன்முறையாக நடைபெற்ற ஒலிம்பிக் தூர டிரையத்லான் நிகழ்வான, 'அயன்மேன் 5150 டிரையத்லான் சென்னை' போட்டியில் இந்திய அணியினர் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
January 12, 2026
Dinamani Dharmapuri
தாமதமாகும் 'ஜனநாயகன்' - பின்புலம் என்ன?
மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜனவரி 9-ஆம் தேதி வெளி வரவேண்டிய நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' தணிக்கைக் குழுவினரின் தாமதத்தால் வெளிவராமல் போனது பரவலான விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.
3 mins
January 12, 2026
Translate
Change font size
