Facebook Pixel நல்வழிப் பயணம் - சமூகமும் பொறுப்பு! | Dinamani Dharmapuri - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

நல்வழிப் பயணம் - சமூகமும் பொறுப்பு!

Dinamani Dharmapuri

|

August 25, 2025

பள்ளி, கல்லூரியில் இருந்து வெளிவரும் அத்தனை மாணவர்களும் அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும். தொடர் ஓட்டம்போல் சமூகமும் இவர்களுடன் இணைய வேண்டும். இளைஞர்களை நல்வழிப்படுத்துவது என்பது ஒருவரின் தனிப்பட்ட பொறுப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும்.

- வெ.இன்சுவை

நான் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கட்டுரைப் போட்டி, விளம்பரச் சிற்றேடு தயாரிப்பு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. அந்தப் போட்டிகளுக்கு நடுவராக என்னை அழைத்திருந்தார்கள். நிறைய மாணவர்கள் கலந்து கொண்டார்கள். தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரை எழுதியிருந்தார்கள். ஏறக்குறைய அனைவருமே சிறப்பாக எழுதியிருந்தார்கள். அவர்களின் வயதுக்கு மீறிய சிந்தனைகளையும், கருத்துகளையும் கண்டு மகிழ்ச்சி ஏற்பட்டது. எத்தனை விதமான போதைப் பொருள்கள் கிடைக்கின்றன என்று அவர்கள் எழுதியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியும், வேதனையும் ஏற்பட்டது. போதைப் பொருள் பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகிவிடக் கூடாது என்று எல்லோருமே வலியுறுத்தியிருந்தார்கள்.

மாணவர்களுக்கு சுயக் கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் அவசியம்; எனவே, சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடித்திருந்தது சிறப்பு. விளம்பரச் சிற்றேடு தயாரிக்கும் போட்டியிலும், ஓவியப் போட்டியிலும் கலக்கியிருந்தார்கள். வார்த்தைகளால் சொல்வதைவிட வண்ணங்கள் அதிகம் பேசின. தலைப்பு - போதைப் பொருளுக்கு மறுப்பு சொல்லுங்கள்' போதைப் பொருள் உபயோகத்தால் நம் நாடு கலங்கிப் போய், கருத்துப் போயிருப்பதாக ஒரு படம்; எதிர்காலம் இருண்டு போகும் என்ற எச்சரிக்கை படம் - என அருமையாக வரைந்திருந்தார்கள். அவர்களின் உள்ளத்தில் இருந்துவந்த உணர்வு; நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட தெளிவு; போதைப் பொருள் கூடாது என்ற மன உறுதி அவர்களில் வெளிப்பட்டன.

இந்தப் பிள்ளைகள் எந்தக் காரணம் கொண்டும் அதைத் தொட மாட்டார்கள் என்ற நம்பிக்கை தோன்றியது. பதின்பருவ பிள்ளைகளின் மனதில் இந்த எண்ணத்தை விதைத்துவிட்டோம் என்றால், அவர்களைக் காப்பாற்றி விட்டோம் என்று மன நிறைவு கொள்ளலாம். இந்தக் காலப் பிள்ளைகள் மிகவும் கெட்டிக்காரர்கள். அவர்கள் கடலில் ஒரு துளி அன்று, ஒரு துளியில் அடங்கியுள்ள கடல்.

எதற்குப் பரிசு கொடுப்பது என்று முடிவு செய்வதில் சிரமமாகிவிட்டது. சரியான மேய்ப்பர் இருந்து விட்டால் மந்தை ஆடுகள் வழிதவறிப் போகாது என்பதுபோல், சரியான வழிகாட்டுதல் இருந்தால் இளம் தலைமுறை திசைமாறிப் போகாது. ஆகவே, இந்த மாதிரி போட்டிகளை நடத்தினால் அவர்களை யோசிக்க வைக்க முடியும்.

MÁS HISTORIAS DE Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

களம் சூடாக உள்ளது: மு.க. அழகிரி

தேர்தல் களம் சூடாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி தெரிவித்தார்.

time to read

1 min

April 24, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மும்பையை வீழ்த்தியது சென்னை

சாம்சன், அகீல் ஹுசைன் அபாரம்

time to read

1 min

April 24, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு

வரலாறு காணாத சாதனை

time to read

1 mins

April 24, 2026

Dinamani Dharmapuri

எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவுகள்!

நல்ல எதிர்காலம் என்பது ஒவ்வொருவரின் முக்கியமான தேவையும் ஆசையும்; குறிப்பாக, மாணவர்களின் வாழ்க்கையில் இது ஒரு மிக முக்கியமான முடிவாக அமைகிறது.

time to read

2 mins

April 24, 2026

Dinamani Dharmapuri

நாஸ்காம் புதிய தலைவர் நியமனம்

இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் உயரிய கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக, 'ஃபிராக்டல்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீகாந்த் வேலமாகன்னி (படம்) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.

time to read

1 min

April 24, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Premier லீக்: மான்செஸ்டர் சிட்டி முன்னிலை

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால் பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 1-0 கோல் கணக்கில் பர்ன்லியை வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

April 24, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

time to read

1 min

April 24, 2026

Dinamani Dharmapuri

ஆயுள் பலம் அதிகரிக்க...

சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலான பழைமையும், பல்லவர் கால கட்டடக்கலை நுணுக்கங்களையும் கொண்டது, திண்டிவனம் அருகேயுள்ள ஆலகிராமம் என்ற ஊரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் திருக்கோயில்.

time to read

2 mins

April 24, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு: முகவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதி வாக்குச்சாவடி மையத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது.

time to read

1 min

April 24, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மக்கள் சிறந்த தீர்ப்பை வழங்குவர்: சுந்தர் சி

மக்கள் உற்சாகமாக வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இந்தத் தேர்தலில் சிறப்பான தீர்ப்பை அவர்கள் வழங்குவர் என்றும் திரைப்பட இயக்குநரும், மதுரை மத்தியத் தொகுதி புதிய நீதிக் கட்சி வேட்பாளருமான சுந்தர் சி தெரிவித்தார்.

time to read

1 min

April 24, 2026

Translate

Share

-
+

Change font size