Intentar ORO - Gratis

அரிய பண்புகளின் தலைமகன்

Dinamani Coimbatore

|

July 15, 2025

காமராஜ் அதிகார ஆணவமோ, பதவி மோகமோ இல்லாத எளிய, இனிய மனிதர்; தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் ஓயாது உழைத்தவர்; ஆகவேதான், மக்கள் மனங்களில் என்றும் வாழ்கிறார்.

- முனைவர் அ.பிச்சை

வொஹர்லால் நேரு 1964-இல் நோய்வாய்ப்பட்டிருந்த காலகட்டம். அப்போது, மேலைநாட்டுப் பத்திரிகையாளர்களில் சிலர், நேருவுக்குப் பிறகு இந்தியா சிதறுண்டு போகும் என்றார்கள்; ஆனால், வேறு சிலர் இந்தியா சிதறாமல் நிற்கலாம் என்றாலும், அங்கு ஜனநாயகம் நீடிக்க வாய்ப்புகள் குறைவு என்று ஆரூடம் கூறினர்.

அதைப் பொய்யாக்கி, இந்தியாவில் ஒற்றுமையையும், ஸ்திரத்தன்மையையும், தொடர் வளர்ச்சியையும் உறுதி செய்ததில் அன்றைய காங்கிரஸ் தலைவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. அவர்களில், முதன்மையானவராகக் குறிப்பிடப்பட வேண்டியவர் கு.காமராஜ். ஆனால், இன்று அவர் தமிழ்நாட்டைத் தவிர்த்து- தேசத்தின் பிற பகுதிகளில் மறக்கடிக்கப்பட்ட தலைவராக ஆகிவிட்டாரே! என்று கவலையுடன் பதிவு செய்திருக்கிறார் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜ் பதவி வகிக்கிறார். அது சமயம் நேரு தன் வீட்டில் நலிந்த நிலையில், ஓய்வு எடுத்து வருகிறார். அவரை காமராஜ் சந்திக்கிறார்.

‘ஐயா! எனக்கு உங்கள் அறிவுரை தேவை. உங்களுக்கு முழுமையான ஓய்வு தேவை என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி நீங்கள் ஓய்வில் இருந்தால், உங்கள் பொறுப்பை நாங்கள் யாரிடம் கொடுப்பது? எனக் கேட்கிறார் காமராஜ். அதற்கு நேரு; ‘சாஸ்திரியை வைத்துப் பாருங்கள்’ என்கிறார். சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின்னால், ‘இந்திரா காந்தியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று காமராஜ் கேட்க, அதற்கு நேரு தந்த பதில்; ‘இப்போது வேண்டாம்’ என்பதாகும்.

அதன் பிறகு, சென்னை திரும்பிய காமராஜ், தன் நம்பிக்கைக்குரிய சகா வான சட்டப்பேரவைத் தலைவர் செல்ல பாண்டியனிடம் இந்த உரையாடலைப் பகிர்ந்து கொள்கிறார்.

அத்துடன் சேர்த்து, காமராஜ் பேரவைத் தலைவரிடம், “பாண்டியன்! இந்திரா காந்தியின் பெயரை நான் சொன்னவுடன், தலைவர் நேரு, ‘இப்போது வேண்டாம்’ என்றுதான் சொன்னாரே தவிர, ‘வேண்டாம்’ என்று சொல்லவில்லை! ஆகவே, நம் தலைவர் மனதில் இந்திரா காந்தியின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இது எனது ஊகம்’ என்றாராம்.

இவ்வாறு தன் தலைவனின் ஆழ்மனத்தில் கிடந்த எண்ணத்தை, தானே கேட்டறிந்து, அப்படியே முதலில் சாஸ்திரி, அடுத்து இந்திரா என்று நிறைவேற்றிக் காட்டிய தூய்மையான தேசத் தொண்டர் காமராஜ்.

MÁS HISTORIAS DE Dinamani Coimbatore

Dinamani Coimbatore

யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்

யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.

time to read

1 min

January 04, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்

லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

time to read

1 min

January 04, 2026

Dinamani Coimbatore

வருடச் சிவந்த மலரடிகள்

சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.

time to read

2 mins

January 04, 2026

Dinamani Coimbatore

அறநிலையத் துறையில் ரூ.124 கோடியில் புதிய பணிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time to read

1 mins

January 04, 2026

Dinamani Coimbatore

வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை விடுவித்தது கேகேஆர்

பிசிசிஐ உத்தரவு எதிரொலி

time to read

1 min

January 04, 2026

Dinamani Coimbatore

நீரில் விழுந்த நெருப்பு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Coimbatore

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 04, 2026

Dinamani Coimbatore

எல்லாவற்றையும் வாசியுங்கள்

தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Coimbatore

எம்பியை ஈங்குப் பெற்றேன்!

உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.

time to read

1 min

January 04, 2026

Dinamani Coimbatore

அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!

“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.

time to read

1 min

January 04, 2026

Translate

Share

-
+

Change font size