Intentar ORO - Gratis
மயக்கும் மாயத் திரை!
Dinamani Chennai
|November 19, 2025
நாடன் சூர்யாவின் ஒரு கவிதை ஃபேஸ்புக்கில் சட்டென்று என்னை ஈர்த்தது. நிறைய யோசிக்கவும் வைத்தது.
சக மனிதனுக்கு நேரும் வன்முறைகளை சர்வசாதாரணமாகக் கடந்து போய்க் கொண்டிருக்கும் நான்தான் ஒருகாலத்தில் பொம்மையின் கை உடைந்ததற்கு ஒரு வாரம் அழுது இருக்கிறேன்.
பொம்மையின் கை உடைந்ததற்கு அழுத குழந்தை வளர வளர ஏன் இரக்கத்தைத் தொலைக்க ஆரம்பிக்கிறது? மென்மையான அதன் இதயம் எப்படிக் கடினப்பட்டுப் போகிறது? முன்பெல்லாம் வேலியில் போகும் ஓணானைக் கல்லால் அடிப்பது, தட்டான் பூச்சியைக் கயிற்றால் கட்டி இழுப்பது போன்ற அடாவடிகளைச் செய்தார்கள். தற்போதைய பிள்ளைகள் கைப்பேசி வன்முறை விளையாட்டுகளை ஆர்வத்துடன் விளையாடுகிறார்கள். இவர்களும் பிற உயிர்களை துன்புறுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். கைப்பேசி விளையாட்டுகள் வன்முறையை உள்ளடக்கியதாகவோ அல்லது வன்முறையைத் தூண்டுவதாகவோ இருக்கின்றன.
சில வகை விளையாட்டுகளில் வீரர்கள் ஒருவரையொருவர் சுட்டு வீழ்த்திய பிறகு, கடைசியில் நிற்பவர் வெற்றியாளர் ஆவார். தீவிர சண்டை, துப்பாக்கிச் சண்டையை மையமாகக் கொண்ட விளையாட்டை சிறுவர்கள் விரும்பி விளையாடுகிறார்கள். பல விளையாட்டுகள் பயங்கரமான வன்முறையைக் கொண்டவை.
இதனால், வளரும் குழந்தைகள் மன நலன் மற்றும் நடத்தை சார்ந்த பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். இது அவர்களது தீவிர கோபம், வன்முறை நடத்தைக்கு வழிவகுக்கிறது. விளையாட அனுமதிக்காத போது பெற்றோருடன் சண்டையிடுகிறார்கள்; பொருள்களைப் போட்டு உடைக்கிறார்கள்; குடும்ப உறுப்பினர்களுடன் வன்முறையாக நடந்துகொள்கிறார்கள். ஒரு விளையாட்டுக்காக தாயை சுட்டுக்கொன்ற அதிர்ச்சியூட்டும் வழக்கு ஒன்று உள்ளது. சிலசிறார்கள் தற்கொலையும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
எப்போதும் விளையாட்டிலேயே மூழ்கிக் கிடப்பதால் மிகுந்த மன அழுத்தம், பதற்றம் மற்றும் மன நோயால் பாதிக்கப்படுகிறார்கள். படிப்பில் கவனம் இருக்காது. அறிவார்ந்த மாணவர்கள்கூட தேர்வில் தோல்வியைத் தழுவுகிறார்கள். மேலும், உடல் சார்ந்த பாதிப்புகளும் ஏற்படுகின்றன. மணிக்கணக்கில் ஒரே நிலையில் உட்கார்ந்து விளையாடுவதால் முதுகெலும்பில் தேய்மானம் ஏற்படுவது, முதுகுத்தண்டு வளைவது, நடக்கவும் சிறுநீர் கழிக்கவும்கூட அவதிப்படும் நிலை என பல பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
அதிக நேரம் விளையாடுவதால் கைகள், குறிப்பாகப் பெருவிரல் வீங்கி வலி உண்டாகிறது. கண்ணில் வறட்சி, கிட்டப் பார்வை கோளாறுகள் வருகின்றன. தூக்கம் பாதிக்கப்படுகிறது.
Esta historia es de la edición November 19, 2025 de Dinamani Chennai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Chennai
Dinamani Chennai
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Chennai
தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்
செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை
எடப்பாடி பழனிசாமி சூசகம்
1 min
May 20, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Chennai
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குடிநீர் குழாய் உடைப்பால் உள்வாங்கிய சாலை
புழல் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Listen
Translate
Change font size

