Intentar ORO - Gratis
கம்பனின் மதுவிலக்குப் பரப்புரை
Dinamani Chennai
|April 20, 2025
எந்த தீய பழக்கமும் இல்லாத கல்வியாளர் ஒருவரை, தீய பழக்கங்களுக்கு ஆள்பட்ட சிலர் பிடித்தனர். அவரை எப்படியேனும் ஒரு தவறான செயலைச் செய்ய வைப்பது என்பதே அவர்களுடைய நோக்கம். 'இந்த மதுவை குடிக்க வேண்டும்; அல்லது, இங்குள்ள விலைமகளுடன் தனித்திருக்க வேண்டும்; எதையாவது ஒன்றைச் செய்யாமல் இங்கிருந்து நீ போகவே முடியாது' என்று மிரட்டினர். இரண்டு பாவச்செயல்களில் மது குடிப்பது சுமாரான பாவமாக அவருக்குத் தோன்றியது. மதுவைக் குடித்தார். மதி மயங்கியது. அந்த விலைமகளுடன் தனியாக இருக்க மனம் நாடியது. தனித்திருந்தார். மதுவின் தீமையைச் சொல்லும் பழைய கதை இது.
வள்ளுவன் தொடங்கி எல்லாரும் மதுவிலக்குப் பரப்புரை செய்தாலும், நமது நிலைமை, பாரதியின் வரிகளில், 'பேசிப் பயன் என்னடி' தான். கம்பனும் சிறப்பான மதுவிலக்குப் பரப்புரை செய்கிறான். வான்மீக ராமாயணத்தில் இல்லாத ஒரு பரப்புரையாக இது அமைந்துள்ளது சிறப்பு.
வாலி கொல்லப்பட்ட பின்னர், சுக்ரீவன் மன்னன் ஆனான். சீதையை மீட்க படைகளைத் திரட்டவேண்டும். அதற்குள் மழைக்காலம் குறுக்கிட்டது. காட்டில் இராமனும் இலக்குவனும் தனித்திருக்க, 'மழைக்காலம் முடிந்ததும் படைகளுடன் வருகிறேன்' என்று சொல்லிப்போன சுக்கிரீவன், மதுவில் மூழ்கினான்; மங்கையருடன் கிடந்தான்; கடமையை மறந்தான்.
சினம் கொண்ட இராமன், இலக்கு வனை அனுப்பினான். அதே கோபத்துடன் இலக்குவன் சுக்கிரீவனின் அரண்மனைக்கு வந்தான். மிகுந்த சிரமப்பட்டு சுக்கிரீவனை மயக்கத்தில் இருந்து தெளிவித்த அங்கதன், இலக்குவன் கோபத்துடன் வந்திருப்பதைத் தெரிவித்தான்.
Esta historia es de la edición April 20, 2025 de Dinamani Chennai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Chennai
Dinamani Chennai
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
1 min
May 20, 2026
Dinamani Chennai
போலந்தில் தானமளிக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் சென்னை பெண்ணுக்கு சிகிச்சை
குருதிசார் புற்று நோய்க்குள்ளான இளம்பெண் ஒருவருக்கு போலந்து நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் உயிர்காத்துள்ளனர்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Chennai
தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்
செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை
எடப்பாடி பழனிசாமி சூசகம்
1 min
May 20, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Chennai
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Translate
Change font size

