Intentar ORO - Gratis
ஜூன் 25 அரசமைப்பு படுகொலை தினம்: மத்திய அரசு அறிவிப்பு
Dinamani Chennai
|July 13, 2024
அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட நாள்
-
நாட்டில் கடந்த 1975, ஜூன் 25-ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலையை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25-ஆம் தேதி 'அரசமைப்பு படுகொலை தினமாக' அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
அரசமைப்புச் சட்டத்தை முன் வைத்து, ஆளும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்துவரும் நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கையில், 'கடந்த 1975, ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அப்போதைய மத்திய அரசால் அதிகார துஷ்பிரயோகம் கட்டவிழ்க்கப்பட்டது. நாட்டு மக்கள் அத்துமீறல்களுக்கும் அராஜகங்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் மீண்டெழும் ஜனநாயக வலிமையின் மீது மக்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே, அவசரநிலை காலகட்டத்தில் பாதிப்பை எதிர்கொண்டவர்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராகப் போராடியவர்களை நினைவுகூரவும், எதிர்காலத்தில் இதுபோன்ற மோசமான அதிகார துஷ்பிரயோகத்தை எந்த விதத்திலும் இந்திய மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பதை மீண்டும் உறுதிசெய்யவும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25-ஆம் தேதி அரசமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மக்களின் உணர்வை கெளரவிக்கும் நோக்கில்...': மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த 1975, ஜூன் 25-ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியதன் மூலம் இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவின் குரல்வளையை நெரித்தார். இது, சர்வாதிகார மனநிலையின் வெட்கக்கேடான வெளிப்பாடு.
Esta historia es de la edición July 13, 2024 de Dinamani Chennai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Chennai
Dinamani Chennai
வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு போஷ்-டிஎஸ்எஃப் குழுமம் புதிய கூட்டணி
வணிக வாகனங்களுக்காக, நவீன காலத்துக்கேற்ற மின்னணு காற்று அமைப்புகளை உருவாக்கித் தயாரிப்பதற்காக, டிஎஸ்எஃப் குழுமமும் (வீல்ஸ் இந்தியா மற்றும் பிரேக்ஸ் இந்தியா) உலக அளவில் புகழ்பெற்ற போஷ் நிறுவனமும் ஒன்றிணைந்துள்ளன.
1 min
May 21, 2026
Dinamani Chennai
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல் ஐஜி
முதல்வர் ஜோசப் விஜய், கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றவுடன் தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 3 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் கையொப்பமிட்டார்.
1 min
May 21, 2026
Dinamani Chennai
உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவால் முடியும்
எஸ்தோனியா வெளியுறவு அமைச்சர்
1 min
May 21, 2026
Dinamani Chennai
இந்தியா-இத்தாலி உறவுகள் பன்மடங்கு மேம்பாடு: பிரதமர் மோடி-மெலோனி உறுதி
இந்தியா, இத்தாலி இடையேயான உறவுகளை பன்மடங்கு மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும், அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் புதன்கிழமை உறுதிபூண்டனர்.
1 min
May 21, 2026
Dinamani Chennai
அஷ்மிதா, மாளவிகா வெற்றி
மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, மாளவிகா பன்சோத், தேவிகா சிஹக் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min
May 21, 2026
Dinamani Chennai
சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்
குஜராத்துடன் மோதல்
1 min
May 21, 2026
Dinamani Chennai
பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி
புதுக்கோட்டை முதலிடம்
1 mins
May 21, 2026
Dinamani Chennai
பேச்சுவார்த்தையே தீர்வு!
பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.
2 mins
May 21, 2026
Dinamani Chennai
பத்தாம் வகுப்பு: மாநகராட்சிப் பள்ளிகள் 89% தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மாந கராட்சிப் பள்ளி மாணவ, மாண வியர் 89 சதவீதம் பேர் தேர்ச்சிய டைந்துள்ளனர். இது கடந்த ஆண் டைவிட 3 சதவீதம் அதிகமாகும்.
1 mins
May 21, 2026
Dinamani Chennai
12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு
12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை ஸ்கேன் செய்து கணினி வழியாக திரையில் மதிப்பிடுதல்' (ஓஎஸ்எம்) முறையில் மதிப்பீடு செய்ததில் குளறுபடி நிகழ்ந்துள்ளதாக வெளியான தகவலை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை மறுத்தது.
1 min
May 21, 2026
Translate
Change font size

