Intentar ORO - Gratis
மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்பு கருத்துக் கணிப்பு சொல்லுவது என்ன?
DINACHEITHI - NELLAI
|June 22, 2025
சென்னை ஜூன் 22சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்கிற அமைப்பு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக கருத்துகணிப்புகளை நடத்தி உள்ளது.
-
234 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த பிப்ரவரி 5-ந்தேதி முதல் கடந்த 17 -ந்தேதி வரை 150 நாட்கள் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் 70,922 பேர் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பு முடிவுகளை இந்திய அரசியல் ஜனநாயக யுத்திகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் அவரது குழுவினர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து வெளியிட்டனர். அதன் விவரம் வருமாறு :-
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக 77.83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என்று 73.30 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக 67.99 சதவீதம் பேரும், பா.ஜ.க. முன்னாள் தலைவரான அண்ணாமலை முதல்வராக 64.58 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக அரசியல் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் முதலமைச்சராக 60.58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு அடுத்த படியாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் முதல்வராக 30.80 சதவீதம் பேரும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்வராக 19.97 சதவீதம் பேரும், ஓ. பன்னீர்செல்வத்துக்கு 17.38 சதவீதம் பேரும், டி.டி.வி. தினகரனுக்கு 16.29 சதவீதம் பேரும், திருமாவளவனுக்கு 14.71 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
வருகிற தேர்தலில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள அரசியல் கட்சி எது என்கிற கேள்விக்கு தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று 80.74 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வரும் காலத்தில் இவரால் தான் தமிழகம் தலை சிறக்கும் என நீங்கள் நம்புகிற இளம் தலைவர் யார்? என்கிற கேள்விக்கு அண்ணாமலை முதலிடத்தில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 2-வது இடத்தில் விஜய், 3-வது இடத்தில் உதயநிதி, 4-வது இடத்தில் சீமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Esta historia es de la edición June 22, 2025 de DINACHEITHI - NELLAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
ஜி 20 உறுப்பு நாடுகள் மாநாடு : தலைவர்களை சந்தித்தார், பிரதமர் மோடி
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
1 min
November 24, 2025
DINACHEITHI - NELLAI
தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது
“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு
1 mins
November 24, 2025
DINACHEITHI - NELLAI
“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு
தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும், என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min
November 24, 2025
DINACHEITHI - NELLAI
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது இரங்கல் செய்தி வருமாறு :-
1 min
November 23, 2025
DINACHEITHI - NELLAI
துபாய் விமான கண்காட்சியில் பங்கேற்ற தேஜஸ் போர் விமானம் எரிந்து கீழே விழுந்தது
துபாயில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் பங்கேற்கும் விமானக் கண்காட்சி கடந்த நவ. 17 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் இறுதி நாளான இன்று (நவ. 21) சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் பெருமைமிகு தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கி பின்னர் தீப்பிடித்து எரிந்தது. துபை விமான நிலையம் அருகே உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
November 22, 2025
DINACHEITHI - NELLAI
சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்
“மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் வரை போராட்டம் தொடரும்” என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 mins
November 22, 2025
DINACHEITHI - NELLAI
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - மேலும் 4 பேர் கைது
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
1 min
November 21, 2025
DINACHEITHI - NELLAI
தமிழகத்தில் இன்று முதல் பலத்த மழை பெய்யும்: வானிலை நிலையம் அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min
November 21, 2025
DINACHEITHI - NELLAI
பீகார் முதல் மந்திரியாக நிதிஷ் குமார் பதவியேற்றார்
பிரதமர் மோடி, அமித்ஷா விழாவில் பங்கேற்பு
1 min
November 21, 2025
DINACHEITHI - NELLAI
கோவை விழாவில் பிரதமர் மோடி பேச்சு
ரசாயனம் இல்லாத விவசாயத்தை மேற்கொள்ளுங்கள்
1 mins
November 20, 2025
Translate
Change font size

