Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

கிண்டியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

DINACHEITHI - MADURAI

|

June 06, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.6.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை, கிண்டியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 1.75 கோடி ரூபாய் செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார்.

கிண்டியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

மேலும், 1400 வனக் காவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வனக் காவலர்கள், நீர் நிலைப்பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்கள் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.

மனிதகுலம் சந்தித்துவரும் பெரும் சவாலாக தற்போது காலநிலை மாற்றம் உள்ளது. அதனை எதிர்கொள்ள இவ்வரசு பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய இயக்கங்களை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருவதோடு, இயற்கைப் பாதுகாப்பினையும் வளங்குன்றா வளர்ச்சியையும் தொடர்ந்து வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டை ஒழித்திட உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதுடன், தமிழ்நாட்டின் பாரம்பரியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பை பயன்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை "திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

அத்துடன் தமிழ்நாடு மீன் வலை முன்னெடுப்பின் கீழ், சென்னை காசிமேட்டில் நிறுவப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்வலை சேகரிப்பு மையம் மூலம் கைவிடப்பட்ட மீன் வலைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுவதால் கடலில் நெகிழி மாசுபாடு குறைந்து, கடல் பல்லுயிரியம் பாதுகாக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பேணிக் காத்திட இவ்வரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டுதல்

சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இம் மையத்திற்கான கட்டடம் சுற்றுச்சூழலுக்கு சாதகமான மற்றும் இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய பசுமை கட்டடமாக உருவாக்கப்படும். இக்கட்டடத்தின் மொத்த நிலப்பரப்பு 16,555 சதுர அடி மற்றும் மொத்த கட்டுமானப் பரப்பளவு 46,823 சதுர அடி ஆகும்.

MÁS HISTORIAS DE DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தி.மு.க. கடும் எதிர்ப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை

time to read

1 min

October 30, 2025

DINACHEITHI - MADURAI

தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பாக

time to read

1 min

October 30, 2025

DINACHEITHI - MADURAI

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள குழு அமைப்பு: அடிப்படை ரூ. 51,480 ஆக உயர வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

October 29, 2025

DINACHEITHI - MADURAI

லட்சியத்தை நோக்கி வீறு நடை போடுவோம் 2026 தேர்தலிலும் தி.மு.க.வுக்குத்தான் வெற்றி

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

time to read

1 min

October 29, 2025

DINACHEITHI - MADURAI

சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி மாவட்டத்துக்கு வருகை

பலகோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்

time to read

1 mins

October 29, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களை மிரட்டிய “மோன்தா” புயல் கரையை கடந்தது

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, “மோந்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

time to read

1 min

October 29, 2025

DINACHEITHI - MADURAI

திமுக கூட்டணி கட்சிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

நவ. 2-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முடிவு

time to read

1 min

October 28, 2025

DINACHEITHI - MADURAI

மோந்தா புயல் வேகம் எடுத்தது: இன்று இரவு ஆந்திராவில் கரையை கடக்கிறது

திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

time to read

1 mins

October 28, 2025

DINACHEITHI - MADURAI

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி

நவ.4-ந் தேதி தொடங்குகிறது

time to read

1 mins

October 28, 2025

DINACHEITHI - MADURAI

கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

time to read

1 min

October 28, 2025

Translate

Share

-
+

Change font size