Intentar ORO - Gratis
சர்க்கரை கசக்கிற சர்க்கரை
Kungumam Doctor
|July 01, 2024
இன்று இளவயதினருக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. பாரம்பரியம், வாழ்வியல் கோளாறுகள், உணவுமுறை எனப் பலவிதமான காரணங்கள் இதற்கு இருக்கின்றன.
சர்க்கரை நோய் ஏன் வருகிறது? வராமல் தடுப்பது எப்படி? சர்க்கரை நோய் வந்துவிட்டால் எப்படி எதிர்கொள்வது? சர்க்கரைநோயை எப்படிக் கட்டுப்படுத்துவது? என்பதை இங்கு பார்ப்போம்.
'நாம் சாப்பிட்ட உணவானது, உடலில் உள்ள திசுக்களுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. தவிர, கல்லீரலும் குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. ரத் தத்தில் கலக்கப்பட்ட குளுக்கோஸை திசுக்கள் தானாகக் கிரகிக்க முடியாது.
இதற்கு ஒரு சாவி போல செயல்ப டுவதுதான் இன்சுலின். கணையத்தில் இன்சுலின் சுரக்கிறது. ஒருவருக்குப் போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ, இன்சுலின் செயல்திறன் போதுமானதாக இல்லை என்றாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித் துவிடுகிறது. இதையே சர்க்கரை நோய் என்கிறோம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது நரம்பு மண்ட லம், கண், சிறுநீரகம், ரத்தக் குழாய் என உடலின் அனைத்து உறுப்புக்களையும் பாதிக்கிறது. சர்க்கரை நோய் டைப் 1 மற்றும் டைப் 2 என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்ப டுகிறது.தவிர, ப்ரீடயாபடீஸ், கர்ப்பகால சர்க்கரை நோய் போன்ற வகைகளும் உண்டு.
டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் முற்றிலுமாக சுரப்பது இல்லை. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்ப டக்கூடியது. இவர்கள் ஆயுள் முழுக்க இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும்.
டைப் 2 சர்க்கரை நோய் என்பது மர பியல் மற்றும் வாழ்க்கைமுறை மாறுபாட் டால் ஏற்படக்கூடியது. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும். ஆனால் அதன் அளவு போதுமானதாக இருக்காது. சிலருக்கு இன்சுலின் தரம் போது மானதாக இருக்காது. இதை இன்சுலின் ரெசிஸ்டென்ஸ்' என்போம்.
டைப் 2 சர்க்கரை நோய் யாருக்கெல்லாம் வரலாம்?
45 வயதைக் கடந்தவர்கள்
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் மற்றும் உடல் பருமனானவர்கள்
கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் வந்தவர்கள்
குடும்பத்தில் பெற்றோருக்குச் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள்
ப்ரீ டயாபடீஸ் உள்ளவர்கள்
உடல் உழைப்பு குறைந்தவர்கள்
உடற்பயிற்சி செய்யாதவர்கள்
கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள்
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
உணவுக் கட்டுப்பாடு இல்லாதவர்கள்
Esta historia es de la edición July 01, 2024 de Kungumam Doctor.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Kungumam Doctor
Kungumam Doctor
எளிய வீட்டு வைத்தியம்!
நம் வீட்டில் உபயோகிக்கும் பொருட் களை நமது சிறிய உபாதைகளை தடுக்க வல்லது.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
பார்வதி வெங்கடராமன் ஃபிட்னெஸ்!
சின்னத்திரையில் விஜேவாக அறிமுகமாகி பின்னர், நிகழ்ச்சி தொகுப்பாளராகி தற்போது சின்னத்திரையின் கதாநாயகி அந்தஸ்தை பிடித்திருப்பவர் பார்வதி வெங்கடராமன்.
1 mins
April 16-30, 2026
Kungumam Doctor
கார்கூந்தல் பெண் அழகு!
பெண்கள் பொதுவாகவே தங்கள் அழகு விஷயத்தில் ஆர்வமுடன் இருப்பார்கள்.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
ஃபிட்னெஸைப் பாதுகாக்கும் பிக்கிள்பால்!
உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் பிக்கிள்பால் விளையாட்டும் ஒன்று. பிக்கிள் பால் என்பது டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய மூன்று விளையாட்டுகளின் கலவையாக விளையாடப்படுகிறது. இது சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி விளையாடப்படுவதால் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.
3 mins
April 16-30, 2026
Kungumam Doctor
மைக்ரேன் தீர்வு என்ன?
இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு நொடிப் பொழுதில் தலைவலியை சந்தித்திருப்பார்கள்.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
முதுகுவலியைத் தடுக்கும் வழிகள்!
முதுகுவலி என்பது இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனை வரும் சந்திக்கும் பொதுவான பிரச்னையாகும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
சிக்கரி ஓர் அரு மருந்து!
காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் சிலருக்கு வேலையே ஓடும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
ப்ரீ டயாபட்டீஸ்: தற்காப்பு வழிகள்!
இந்திய மக்கள் தொகையில் 14% பேருக்கு ப்ரீ-டயாபட்டீஸ் இருப்பதாக தேசிய நகர்ப்புற நீரிழிவு அமைப்பின் ஆய்வு எச்சரித்துள்ளது.
2 mins
April 16-30, 2026
Kungumam Doctor
உடல் சூட்டை தணிக்கும் புதினா!
புதினா (Mint) செரிமானத்தை மேம்ப டுத்துதல், வாய் துர்நாற்றத்தைப் போக்குதல், தலைவலி மற்றும் வயிற்று வலியை நிவர்த்தி செய்தல் போன்ற எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு சிறந்த மூலிகையாகும்.
1 min
April 16-30, 2026
Kungumam Doctor
தைராய்டு அறிவோம்
இந்தியாவில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஹார்மோன் சம்பந்தமான பிரச்சனைகளில் தைராய்டு பிரச்னையும் ஒன்றாக உள்ளது. சுமார் 4 கோடியே 20 லட்சம் இந்தியர்கள் ஏதேனும் ஒரு வகை தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
2 mins
April 16-30, 2026
Translate
Change font size
