Try GOLD - Free

கார்ப்பரேட்கள் கண் அசைவில் அரசுகள்!

Kanmani

|

January 29, 2025

அரசியல் என்பது அதிகாரத்துக்கான போராட்டம். அதிகாரம் கொண்ட பதவியை அடைய பணமும் பலமும் தேவை. இதனால் தேர்தல் சமயங்களில் செல்வந்தர்களோடு அரசியல்வாதிகள் கூட்டணி அமைக்கிறார்கள்.

கார்ப்பரேட்கள் கண் அசைவில் அரசுகள்!

அதற்கு பிரதியுபகாரமாக வெற்றிக்கு பின் அவர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குகின்றனர்.

இந்த சூட்சுமத்தை நன்குணர்ந்த நவீன பெருமுதலாளிகளான கார்பரேட்கள், ஏதாவது ஒரு அரசியல் கட்சியை பிடித்துக் கொண்டு தங்கள் செல்வாக்கை அதிகப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் ஆதரிக்கும் கட்சிகள் பெரும்பாலும் முதலாளித்துவ கொள்கை கொண்ட வலதுசாரி கட்சிகளாகவே இருக்கின்றன. சமீபத்தில் தேர்தல் நடைபெறும் ஜெர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியை ஆதரித்து எலான் மஸ்க் தனது பணபலத்தை பிரயோகித்து வருகிறார்.

ஜெர்மனியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஓலாப் ஸ்கோல்ஸ் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தார். அவர் கொண்டுவந்த பொருளாதார சட்டங்களுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஓலாப் ஸ்கோல்ஸ் தலைமையிலான அரசு அண்மையில் கவிழ்ந்தது.

இந்நிலையில், ஜெர்மனியில் 2025 -பிப்ரவரி 23ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு நடைபெற உள்ள தேர்தலில் தனது செல்வாக்கை காட்ட, எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான எலான் மஸ்க், ஜெர்மனியின் தீவிர வலதுசாரிக் கட்சியான ஜெர்மனிக்கான மாற்றுக் கட்சியை (ஏ.எப்.டி) வெளிப்படையாக ஆதரித்துள்ளார்.

‘உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான மஸ்க், தனது கணிசமான முதலீடுகள் காரணமாக, இங்குள்ள அரசியலை எடைபோட்டு பார்க்கிறார். தனது உரிமையைப் பாது காத்து, கட்டுப்பாடுகள், வரிகள் மற்றும் சந்தைக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்காக, ஏ.எப்.டி.,யின் அணுகுமுறையைப் பாராட்டுகிறார்’ என எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எலான் மஸ்க், ஏற்கனவே, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பைஆதரித்து இங்கு போல் வாக்காளருக்காக பணத்தையும் வெளிப்படையாக வெள்ளமாக செலவழித்தார். சில மாதங்களுக்கு முன்பு வரை, டிரம்பிற்கு எதிராகப் பேசி வந்த எலான் மஸ்க், அரசியல் சூழலை அறிந்து திடீரென டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தார்.

மேலும், வாக்காளர்களை கவர்வதற்காக, நவம்பர் 5 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 1 மில்லியன் வழங்கினார். அதாவது, தான் உருவாக்கிய பெட்டிஷனில் கையெழுத்திடும் நபர்களை ரேண்டமாக தேர்வு செய்து தினமும் ஒரு நபருக்கு தேர்தல் முடியும் வரை 1 மில்லியன் டாலர் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

MORE STORIES FROM Kanmani

Kanmani

Kanmani

தூக்கி நிறுத்திய நம்பிக்கை!

தென்னிந்திய படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை நவ்யா நாயர், மீண்டும் 'ஒருத்தி' மலையாள படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். திரிஷ்யம் 2 கன்னட ரீமேக் படத்திலும் நடித்தார். தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகளவில் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளாத நவ்யா, தன் திரையுலக பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

ஓய்வு பெற்ற பிறகும் வேலைக்கு செல்ல விரும்பும் முதியவர்கள்!

முதுமை என கருதிவிட்டால் அவர்களை உபயோகம் இல்லாதவர்கள் என கருதும் காலம் இது.

time to read

1 mins

November 05, 2025

Kanmani

Kanmani

கமர்சியல் சக்ஸஸ் ரொம்ப முக்கியம்!

பிகில், 96, வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

விசித்திரமான 'மறதி' கிராமங்கள்!

அது ஒரு அழகிய சிறிய கிராமம்.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

இன்னொருத்தி தேவை!

காலை நேரம். ஏழு மணி. \"அம்மா.... போயிட்டு வரேன்....\" மாடியிலிருந்து துள்ளிக் கொண்டு வந்த சரயூ கத்திக் கொண்டே இறங்கி வந்தாள்.

time to read

53 mins

November 05, 2025

Kanmani

Kanmani

மக்களை விட் 6 மடங்கு அதிகம்.. நகரங்களில் பெருகி வரும் எலிகள்!

நகரங்களில் பெருதி வரும் எலிகள்!

time to read

1 mins

November 05, 2025

Kanmani

Kanmani

எப்படி இருந்த அ.தி.மு.க. இப்படி ஆகிடுச்சே!

குடும்பங்களில் குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி பயமுறுத்துவது போல், அரசியலிலும் சில கட்சியினரை பீதியூட்டி கூட்டு சேர்க்க முயல்வதுண்டு.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

வைரம் - தங்கத் துகள் சோப்பூ

மன்னர் காலத்தில் குளியல் பொடியானது பலவிதமான இயற்கை மூலிகைளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

time to read

1 min

November 05, 2025

Kanmani

Kanmani

குறட்டைக்கு நன்றி!

தூக்கத் திற்கான அளவுகோல் குறட்டை அல்ல! ஒருசிலருக்கு அது எச்சரிக்கை மணி! குறட்டை ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

time to read

3 mins

November 05, 2025

Kanmani

Kanmani

தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் ஸ்மார்ட் செயலி சரண்யா!.

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில்... எங்கு திரும்பினாலும் அடிதான் என்ற நிலையில் பரிதாபகரமான நிலையில் இருப்பவர்கள் விவசாயிகள்தான்.

time to read

3 mins

November 05, 2025

Translate

Share

-
+

Change font size