Try GOLD - Free
வாக்களிப்பில் பங்கேற்பின்மையும் நிராகரிக்கப்படும் வாக்குகளும் வட, கிழக்கில் தொடர் அதிகரிப்பு
Virakesari Weekly
|May 11, 2025
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவதற்கான தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசிய கொள்கைத் தளத்தில் பிரிந்து நின்று பயணிக்கும் தரப்புக்கள் வடக்கு, கிழக்கில் வாக்குவங்கியில் எழுச்சி அடைந்திருக்கின்றன. அதனையிட்டு மார் தட்டிக்கொள்கின்றன. ஆனாலும் தனித்து ஆட்சி அமைப்பதற்கான இயலுமை (ஓரிரு சபைகளில் தமிழரசுக் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை காணப்படுகிறது) எந்தவொரு தரப்பிற்கும் காணப்படவில்லை.
நிலைமைகள் இவ்வாறிருக்கையில், தேர்தல் வாக்களிப்பில் மக்கள் பங்கேற்காத நிலைமைகளும் வாக்குகள் நிராகரிக்கப்படுகின்ற எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதை கடந்த மூன்று தேர்தல்களின் புள்ளிவிபரங்கள் ஊடாக அவதானிக்க முடிகின்றது.
இந்த நிலைமையானது, நாடளவிய ரீதியில் காணப்பட்டாலும், வடக்கு, கிழக்கில் நிலைமை தொடர்ச்சியாக மோசமடைந்து வருவதை உறுதிப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு பல கருத்தியல் ரீதியான வாதப்பிரதவாதங்களை முன்வைக்க முடியும். ஆனால், அதற்கப்பால் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாடளவிய நிலை
ஏனென்றால், இம்முறை வாக்காளர் இடாப்பில் புதிதாக உள்வாங்கப்பட்ட 155,976 பேருடன் 17,296,330 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 10,616,087 பேரே வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர்.
அதில் 10,410,810 வாக்குகள் மட்டுமே செல்லுபடியானவையாக காணப்படுவதோடு 205,277 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அது 1.93 சதவீதமாக காணப்படுகின்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 300,300 ஆக காணப்பட்டதோடு அதன் சதவீதம் 2.2 ஆகும்.
அதேபோன்று கடந்தாண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 667,240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்ததோடு அதன் சதவீதம் 5.65ஆகும். அந்த வகையில் பார்க்கின்றபோது இத்தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை குறைவடைந்திருக்கின்றது.
ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் 3,820,738 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. பாராளுமன்றத் தேர்தலில் 5,992,348 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. இந்நிலையில் இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் 6,747,528 வாக்காளர்கள் வாக்களித்திருக்கவில்லை.
வட, கிழக்கில் மோசமான நிலை
This story is from the May 11, 2025 edition of Virakesari Weekly.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Virakesari Weekly
Virakesari Weekly
மீள் குடியேற்றம், மீள் நிர்மாணம் செய்வதற்கு திட்ட முன்மொழிவு
வீரகேசரி செய்தியை கோடிட்டுக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைப்பு
1 min
August 24, 2025
Virakesari Weekly
ரணிலின் கைது தென்பகுதி அரசியல் அரங்கிலே வித்தியாசமான மாற்றங்களை கொண்டுவரலாம்
யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பது முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாகி இருக்கின்றது. ஆனாலும் இந்தக் கைது கூட தென்பகுதி அரசியல் அரங்கிலே ஒரு வித்தியாசமான மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
1 min
August 24, 2025
Virakesari Weekly
மூன்று வகை கிரிக்கெட்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பது மகிழ்ச்சி தருவதாக பெத்தும் நிஸ்ஸன்க கூறுகிறார்
பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட்களிலும் சதங்கள் குவித்ததையிடிலும், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதையிடிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பெத்தும் நிஸ்ஸன்க் தெரிவித்தார்.
1 min
June 29, 2025
Virakesari Weekly
ஈரானிய தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்
இஸ்ரேலுடனான யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள்க்கு ஈரானிய அரசாங்கம் நேற்று அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்தியது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
அடுத்த கட்ட சாணக்கியம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கு கீழே அடுத்த அடுக்கில் இரண்டாம் நிலை தலைவர்களை, தளபதிகளை பேணிவந்த மு.கா. தலைவர், அண்மைக்காலத்தில் அந்த அடுக்கில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது.
3 mins
June 29, 2025
Virakesari Weekly
ட்ரம்பின் நிறைவேற்றதிகார உத்தரவுகளை கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு
அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார உத்தரவுக ளுக்கு கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் ஒரு பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
அகதிகளின் உரிமைகள் தொடர்பில் தேசிய மட்ட விழிப்புணர்வு அவசியம்
நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
சிக்கிக் கொண்ட கடற்படை
இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவர் சர்வதேச கடற்படை செயலணி ஒன்றின் தளபதியாகப் பதவி வகிப்பது, அதன் முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை.
2 mins
June 29, 2025
Virakesari Weekly
புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவத்தில்
இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்றுமுன்தினம் (27) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
பத்திரிகையாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவித்த அமைச்சர் ஹரி
பத்திரிகையாளர்களை கனேடிய பாராளுமன்றத்துக்கு அழைத்து அந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கௌரவித்துள்ளார்.
1 min
June 29, 2025
Translate
Change font size