கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவின் கட்டண அறை திறப்பு, விஷ முறிவு சிறப்பு மருத்துவ மாநில பயிற்சி மய்யம் ஆகியவற்றை திறந்து வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, அவர் பேசுகையில், மாநில அளவிலான மய்யமாக கோவை அரசு மருத்துவமனை உள்ளது. 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,206 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும் இதய பாதுகாப்புக்கான மருந்து கையிருப்பு வைக்கப்படும்.
இதய பாதுகாப்பு மருந்து வழங்கப்படும். கரோனாவுக்குப் பிறகு மார டைப்பு அதிகரிக்கிறது என தெரிவித் தத்தன் பேரில் இதய பாதுகாப்புத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.