Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

பாரம்பரியத்தைப் பறைசாற்ற பனை விதை நடவு!

Dinamani Nagapattinam

|

October 12, 2025

காகிதம் கண்டுபிடிக்கும் முன்பாக பனை ஓலைகள்தான் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தன. எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலை கிழியாமல் எழுதும் திறனைப் பெரும்புலவர்கள் பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதைய்யர், பனை ஓலைகளில் எழுதப்பட்ட நம்முடைய பாரம்பரியத்தை மீட்கவில்லை என்றால் தமிழின் பொக்கிஷங்கள் காணாமல்போய் இருக்கும். பனையின் ஒவ்வொரு பாகமும் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவை. செங்கல்சூளை, வீட்டின் கூரை, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற காரணங்களால் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பனையின் பாரம்பரியத்தை உணர்ந்து பனை விதையை நடவு செய்து வருகிறார், புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பனை டி. ஆனந்தன். அவரிடம் பேசியதிலிருந்து:

- -தமிழானவன்

பனை மரத்தின் பாதுகாப்பு இப்போது எப்படி இருக்கிறது?

தமிழ்நாட்டு மாநில மரம் பனை. இதற்கு முன்பு பல்வேறு காரணங்களுக்காக பனை மரம் வெட்டப்பட்டது. ஆனால், தமிழக அரசு பனை மரத்தைப் பாதுகாக்க ஓர் உத்தரவை அண்மையில் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு அடிப்படையில், இனி யாரும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியில்லாமல் பனை மரத்தை வெட்ட முடியாது. இது போன்ற உத்தரவு புதுவையிலும் பிறப்பிக்க வேண்டும். இப்போது பனைக்குப் பாதுகாப்பு வந்துவிட்டது.

பனை மரம் ஏறுவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகத் தெரிகிறதே?

பனை மரம் ஏறுவோர்தான் பனை மரத்தைப் பாதுகாத்து வந்தனர். பனை ஓலைகளைக் கழித்து விடுதல் போன்ற பணிகளைச் செய்து வந்தனர். தமிழகத்தில் கள் இறக்க அனுமதியில்லாத நிலையில், பனை மரம் ஏறுவோர் வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர். பழக்கம் இருந்தால் மட்டும்தான் பனை மரம் ஏற முடியும். டாஸ்மாக் வந்து விட்டதால் இப்போது பனை மரம் இந்தப் பயன்பாட்டுக்கு இல்லாத சூழ்நிலை உருவாகிவிட்டது.

எத்தனை ஆண்டாக பனை விதைகளை நட்டு வருகிறீர்கள்?

இளைஞர்கள் ஒன்று திரண்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம் நம் பாரம்பரியத்தை மீட்கும் எண்ணம் கொண்டது. அதைப் போன்றதுதான் பனையின் பாரம்பரியத்தை மீட்பதும். அதற்காகத்தான் 2015 முதல் பனை விதைகளை நட்டு வருகிறேன். கடலோரப் பகுதிகள், குளக்கரைகள், ஏரிக்கரைகள், சாலையோரங்களைத் தேர்ந்தெடுத்து பனை விதைகளை நடவு செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 4.5 லட்சம் பனை விதைகளை நடவு செய்துள்ளோம். இதில் சுமார் 2 லட்சம் பனைகள் பிழைத்துக் கொண்டன. இப்போது அவை ஓரடி, இரண்டு, மூன்றடி வரை வளர்ந்துள்ளன.

MORE STORIES FROM Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ராகு - கேது தோஷம் போக்கும் தலம்

அண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் ‘ஆண்மை ஊர்' என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘ஆமையூராக' மாறிய தலம், தற்போது ஆம்பூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ளது சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில்.

time to read

1 mins

October 24, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைவு

சென்னையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனையானது.

time to read

1 min

October 24, 2025

Dinamani Nagapattinam

நடிகை மனோரமா மகன் பூபதி (70) காலமானார்

நடிகை மனோரமாவின் மகன் பூபதி (70) மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் வியாழக் கிழமை காலமானார்.

time to read

1 min

October 24, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

வியர்வை சிந்தும் வேலர்!

முருகப்பெருமானைக் காண பாதயாத்திரை மூலமாகவும் மலை ஏறியும் வியர்க்க வியர்க்க வரும் பக்தர்களை எல்லா ஊர்களிலும் பார்க்கலாம். ஆனால், தன் திருமேனி எங்கும் வியர்வை வழியக் காட்சி தரும் முருகனை சிக்கல் திருத்தலத்தில்தான் தரிசிக்க முடியும்.

time to read

1 mins

October 24, 2025

Dinamani Nagapattinam

முக்கிய உள்கட்டமைப்பு துறைகளில் 3% வளர்ச்சி

இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் 3 சதவீதமாக உள்ளது. இது ஆகஸ்டில் பதிவான 6.5 சதவீத விரிவாக்கத்தை விடக் குறைவாகும்.

time to read

1 min

October 23, 2025

Dinamani Nagapattinam

இன்று 2-ஆவது ஒருநாள் ஆட்டம்: தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?

அடிலெய்டு, அக். 22: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2-ஆவது ஒருநாள் ஆட்டம், அடிலெய்டில் வியாழக்கிழமை (அக். 22) நடைபெறுகிறது.

time to read

1 min

October 23, 2025

Dinamani Nagapattinam

'சென்னை ரன்ஸ்' ஜெர்ஸி அறிமுகம்

சென்னையில் எம் ஆர்டி1 நடத்தும் சார்ஜ் பீ சென்னை ரன்ஸ் 2025 மாரத்தான் போட்டிக்கான அதிகாரபூர்வ ஜெர்ஸியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

time to read

1 min

October 23, 2025

Dinamani Nagapattinam

புதிய டிஜிபி பட்டியல்: தமிழக அரசு ஏற்க மறுப்பு

புதிய டிஜிபி நியமனத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) பட்டியலை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளதாக மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

time to read

1 mins

October 23, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

தென்னாப்பிரிக்காவை மீட்ட முத்துசாமி, ரபாடா

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் சேர்த்து புதன்கிழமை ஆட்டமிழந்தது.

time to read

1 min

October 23, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

நிகழாண்டில் 7-ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

மேட்டூர் அணை நிகழாண்டு 7 ஆவது முறையாக திங்கள்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 35,500 கன அடியாக உள்ளதால் 40 நாள்களுக்குப் பிறகு உபரிநீர்ப்போக்கிகள் வழியாக 22,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

time to read

1 min

October 22, 2025

Translate

Share

-
+

Change font size