Try GOLD - Free

பெருகும் மக்கள்தொகை-வரமா, சாபமா?

Dinamani Nagapattinam

|

June 23, 2025

இந்தியாவின் முன்னுள்ள முக்கிய சவால், மக்கள்தொகை எண்ணிக்கையை அதிகரிப்பதல்ல; அறிவார்ந்த, திறன்மிக்க பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். திறன் மேம்படுத்தப்பட்டால்தான் மனிதத் திறன் வளம்மிக்க நாடாக இந்தியா மாறும். தரமான கல்வி, இளைஞர்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டிய தருணமிது.

- பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

இந்தியாவில் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது, ஒரு நாட்டிலுள்ள மக்களின் பாலினம், வயது, கல்வி, வேலைவாய்ப்பு, சொத்து விவரங்கள் ஆகியவற்றை அவர்களிடமிருந்தே பெற்று அரசால் பகுப்பாய்வு செய்வதற்காக நடத்தப்படுகிறது. இது, மத்திய, மாநில அரசுகள் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற மக்கள் நலன்சார்ந்த துறைகளுக்குத் தேவையான திட்டங்களை வகுத்து, சமுதாய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உரிய திட்டமிடலுக்கு உதவுகிறது.

சுதந்திர இந்தியாவில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1951-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது; அப்போதைய மக்கள்தொகை சுமார் 36 கோடியே 10 லட்சம் ஆகும். கடைசியாக, இந்தியாவின் 15-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-இல் நடத்தப்பட்டது; அப்போதைய மக்கள்தொகை சுமார் 121 கோடியே 8 லட்சம் ஆகும். பின்னர், 2021-இல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த ஆயத்தப் பணிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டன. எனினும், நாட்டில் கரோனா தீநுண்மி பரவல் காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2027-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு, பதினாறாவது தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன், வெளிப்படையான ஜாதி வாரி கணக்கெடுப்புப் பணியும் துவங்கும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிக்கை கடந்த ஜூன் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

பனிப்பொழிவால் பாதிக்கப்படும் ஜம்மு-காஷ்மீர், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், லடாக் மாநிலங்களில் முதல்கட்டமாக அடுத்தாண்டு அக்டோபர் 1-ஆம் தேதி கணக்கெடுப்புப் பணி தொடங்கும். இது இந்தியாவில் முதல் எண்ம மக்கள்தொகை கணக்கெடுப்பு. அதாவது, இந்த முறை மக்கள்தொகை தொடர்பான தரவுகள் எண்ம முறையில் இருக்கும்.

MORE STORIES FROM Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கக் கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்களை மானிய விலையில் அல்லது இலவசமாக வழங்கக் கோரிய வழக்கில், வருகிற டிச.16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால், சுகாதாரத்துறைச் செயலர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

time to read

1 min

November 19, 2025

Dinamani Nagapattinam

மின்சார கார்கள் விற்பனை 57% உயர்வு

கடந்த அக்டோப ரில் மின்சார கார்களின் மொத்த விற் பனை 57 சதவீதம் உயர்ந்து 18,055ஆக உள்ளது. 7,239 வாகனங்களை விற்பனை செய்து இந்த பிரிவில் டாடா மோட்டார்ஸ் முன்னிலை வகிக்கிறது.

time to read

1 min

November 19, 2025

Dinamani Nagapattinam

டிரம்ப்பின் காஸா திட்டம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் காஸா அமைதித் திட்டத்தை ஏற்பது மற்றும் அந்தப் பகுதியில் சர்வதேச அமைதிப் படையை நிறுத்த அனுமதி அளிப்பதற்காக அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது.

time to read

1 mins

November 19, 2025

Dinamani Nagapattinam

தெலங்கானாவின் வளரும் தொழில் பிரிவில் தடம் பதிக்கும் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

தெலங்கானாவின் வளர்ந்து வரும் வணிகப் பிரிவில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தடம் பதித்துள்ளது.

time to read

1 min

November 19, 2025

Dinamani Nagapattinam

முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி, அவரை நினைவுகூர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

time to read

1 min

November 19, 2025

Dinamani Nagapattinam

நிலக்கரி இறக்குமதி 14% அதிகரிப்பு

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 13.54 சதவீதம் அதிகரித்தது.

time to read

1 min

November 19, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

மயக்கும் மாயத் திரை!

நாடன் சூர்யாவின் ஒரு கவிதை ஃபேஸ்புக்கில் சட்டென்று என்னை ஈர்த்தது. நிறைய யோசிக்கவும் வைத்தது.

time to read

3 mins

November 19, 2025

Dinamani Nagapattinam

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் திங்கள்கிழமை (நவ.17) நேரில் சந்தித்தார்.

time to read

1 min

November 18, 2025

Dinamani Nagapattinam

ஹசீனாவுக்கு மரண தண்டனை

வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு

time to read

2 mins

November 18, 2025

Dinamani Nagapattinam

உலக கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் உறுதி

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ் போட்டியில் இந்தியாவின் பவன் பர்த்வால், ஹிதேஷ், ஜாதுமணி நவீன், சுமித் ஆகியோர் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

time to read

1 min

November 18, 2025

Translate

Share

-
+

Change font size