Try GOLD - Free
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
Dinamani Karur
|December 01, 2025
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2006-ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சி அமைந்த காலத்திலும் சரி, 2013 முதல் 2018-ஆம் ஆண்டுவரை நடந்த சித்தராமையா ஆட்சிக் காலத்திலும் சரி, முதல்வர் பதவியைக் குறிவைத்து காய்கள் நகர்த்தப்பட்டன. அந்த சவால்களைக் கையாண்டுதான் சித்தராமையா முன்பு 5 ஆண்டுகாலம் முதல்வராக நீடித்தார்.
2018 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் எச்.டி. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது. புதிய தலைமையைக் கொண்டுவரும் நோக்கத்தில் எடியூரப்பாவை நீக்கிவிட்டு பசவராஜ் பொம்மையை முதல்வராக்கியது பாஜக. அதன் விளைவாக, 2023-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை பாஜக இழந்தது. அந்த 5 ஆண்டு காலத்தில் ஏராளமான அரசியல் குழப்பங்கள் மக்களை சோர்வடையச் செய்தது.
2023-இல் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்த போதும், யார் முதல்வர் என்ற குழப்பம் எழுந்தது. சித்தராமையாவுக்கும்,டி.கே. சிவகுமாருக்கும் இடையே முதல்வர் பதவிக்காக குடுமிப்பிடி சண்டை நடந்தது. இந்த விவகாரத்தில் தலையிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள், முதல் பாதி ஆட்சியை சித்தராமையா கையிலும், பின்பாதி ஆட்சியை டி.கே. சிவகுமார் கையிலும் ஒப்படைக்கலாம் என வாய்மொழி தீர்வை வழங்கினர்.
சித்தராமையாவுக்கு ராகுலின் ஆதரவு இருக்கக் காரணம், அவர் தேர்தலின்போது கொடுத்த 5 வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றியதுதான்.
This story is from the December 01, 2025 edition of Dinamani Karur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Karur
Dinamani Karur
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Karur
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Dinamani Karur
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani Karur
எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்
நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 mins
December 01, 2025
Dinamani Karur
கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்
கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Dinamani Karur
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani Karur
வெற்றியின் முகவரி பணமா?
மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.
2 mins
December 01, 2025
Dinamani Karur
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Karur
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Dinamani Karur
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Listen
Translate
Change font size

