Try GOLD - Free

தரவுகள் பேசட்டுமே...

Dinamani Karur

|

July 10, 2025

கீழடி ஆய்வு முதலில் மத்திய அரசால் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழருக்கு எதிரான அணுகுமுறை என்பதில் அர்த்தமில்லை. நம்முடைய நோக்கம் நமது வரலாற்றை வெளிப்படுத்துவது மட்டுமே எனில், உலக நடைமுறைகளின் படி அறிவியல் அணுகுமுறையோடு உண்மையை நிரூபிக்க ஆவன செய்ய வேண்டும்.

- கோதை ஜோதிலட்சுமி

தமிழ்மொழியும் அதைப் பேசும் மக்களும் உலகம் முழுவதும் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் நம்மை வாழ்வித்து வருவதோடு உலகின் மிக மூத்த மொழிகளுள் ஒன்றென நிற்கிறது. இதனால் தான், கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி என்று பெருமிதம் கொள்கிறோம்.

இலக்கியங்கள் மொழியின் தொன்மையைச் சொல்கின்றன. அம்மொழி பேசும் மக்களின் நாகரிகத்தை நிறுவுவதற்கு கற்பனை கலந்த இலக்கியம் மட்டுமே சான்றாகாது. பிற சான்றுகள் தேவைப்படுகின்றன. அதற்கு அகழாய்வுகள் நடத்தப்படுகின்றன.

அகழாய்வு என்பது அறிவியல் அணுகுமுறை கொண்டது. உலகம் முழுவதும் அகழாய்வை ஒப்புக்கொள்வதற்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. பல வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் அறிஞர்களும், மானுடவியல் ஆராய்ச்சியாளர்களும் தொன்மையான மனித வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அகழாய்வுப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இந்தியாவைப் பொருத்தவரை, உலகின் முதல் நூல் என்று சொல்லப்படும் ரிக் வேதம் நம்முடையது. அது 1028 சூக்தங்களில் 10,600 ஸ்லோகங்களைக் கொண்டது. அதிலே பொற்காசுகள், பொன்னாலான ஆபரணங்கள், தங்கம் கிடைத்த இடங்கள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. நிர்வாகக் கட்டமைப்பை உறுதி செய்யும் அமைப்புகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. வானியல் பற்றிய அறிவியல் இருக்கிறது. ரிக் வேத காலத்தை ஆராய்ந்த ஜெர்மனி அறிஞர் ஜாகோபி கி.மு. 6000 என்று முடிவுக்கு வந்தார்.

உலக நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்புகள், அயல்நாட்டுத் தூதுவர்கள் பற்றி சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. திரைகடல் வணிகம் பற்றிய தகவல்கள், வானியல் குறிப்புகள் இருக்கின்றன. நிர்வாகம், கலைகள், ஆயுதங்கள், அணு முதல் உளவியல் வரையிலான இன்றைய உலகம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் அறிவியலைத் தொல்காப்பியம் என்ற ஒற்றை நூலே பேசிவிடுகிறது. இத்தகைய இலக்கிய வளம் நமது தொன்மையைச் சொல்ல ஏற்கெனவே இருக்கிறது.

MORE STORIES FROM Dinamani Karur

Dinamani Karur

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.

time to read

1 mins

January 06, 2026

Dinamani Karur

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு

முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு

திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

திருச்செந்தூர் கோயில் பெயரில் சமூக ஊடகங்களில் மோசடி

பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்

time to read

1 min

January 06, 2026

Dinamani Karur

புதிய சிக்கலில் வங்கதேச உறவு!

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.

time to read

2 mins

January 06, 2026

Translate

Share

-
+

Change font size