Facebook Pixel வாட்ஸ் கரையைப் பாதுகாப்போம்! | Dinamani Karur - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

வாட்ஸ் கரையைப் பாதுகாப்போம்!

Dinamani Karur

|

April 12, 2025

கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு இந்த வாட்ஸ் கரையையே சார்ந்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அகழ்ந்தெடுப்பது கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டுமானால் செழிப்பைக் கொடுக்கலாம்; ஆனால், சாதாரண மக்களுக்கு அது அழிவையே தரும்.

- சுப. உதயகுமாரன்

‘கரை’ என்ற சொல் புவியியலின் பல்வேறு துறைகளில் உள்ள பல்வேறு கட்டமைப்புகளைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, லிம்னாலஜியில் (உள்நாட்டு நீர் பற்றிய ஆய்வு), கரை என்பது ஒரு நீரோடை அல்லது நதியின் படுகையை ஒட்டிய நிலப்பரப்பைக் குறிக்கிறது. நன்னீர் சூழலியலில், கரை என்பது கரையோர வாழ்விடங்களின் இருப்பிடத்தைக் குறிக்கிறது. கடற்பயணத்தில் இந்த சொல் ஒரு தடைத் தீவை அல்லது நீரில் மூழ்கியிருக்கும் பீடபூமியைக் குறிக்கிறது.

தடைத் தீவு என்பது மணலால் ஆன ஒரு நீண்ட குறுகிய தீவு. இது கடற்காயல் மற்றும் கடலுக்கு இடையில் ஒரு தடையை உருவாக்குகிறது. நீரில் மூழ்கிய பீடபூமி என்பது 200 மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் கடல் தளத்தில் அமைந்திருக்கும் தட்டையான மேட்டுப் பகுதி. கடலுக்குள் அமைந்திருக்கும் மலையின் உச்சி போன்ற பகுதி, அதைச் சுற்றியுள்ள பகுதியுடன் ஒப்பிடும்போது ஆழமற்ற கடற்பரப்பாகத் தோன்றும், இதைக் கடல் திட்டு என்றழைக்கிறோம்.

இப்படியாக, கரை என்பது மணல் மற்றும் பிற ஒருங்கிணைக்கப்படாத பொருள்களைக் கொண்ட, நீரில் மூழ்கிய முகடு, அல்லது கரை அல்லது பட்டை ஆகும். ஒரு நீர்நிலையின் படுகையிலிருந்து உயர்ந்து மேற்பரப்புக்கு அருகில் அல்லது அதற்கு மேலே நிற்கும் பகுதியைத்தான் கரை என்கிறோம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், கரை என்பது நீருக்கடியில் உள்ள ஒரு நிலப்பரப்பு. இதை ஊட்டச்சத்து நிறைந்த நீரோட்டங்கள் தொடர்ந்து தழுவும் போது, அது ஒரு வளமான மீன்பிடிப் பகுதியாக மாறும். உலகில் இம்மாதிரியான இருபதுக்கும் மேற்பட்ட பெரிய கரைகள் உள்ளன. அவற்றில் நியூஃபவுண்ட்லேண்டின் கிராண்ட் பேங்க்ஸ் (2,80,000 சதுர கி.மீ.), அகுல்ஹாஸ் பேங்க் (1,16,000 சதுர கி.மீ.), டோகர் பேங்க் (17,600 சதுர கி.மீ.), கிளீவர் பேங்க் (1,235 சதுர கி.மீ.) போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

டோகர் பேங்க் என்பது பிரிட்டனின் கிழக்கு கடற்கரையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் (55 கடல் மைல்) தொலைவில் வட கடலின் ஆழமற்ற பகுதியில் உள்ள ஒரு பெரிய மணல் திட்டாகும். இது காட் எனப்படும் பண்ணா மீன்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட டச்சு மீன்பிடிப் படகுகளான ‘டாக்கர்ஸ்’ நினைவாகப் பெயரிடப்பட்டிருக்கிறது.

MORE STORIES FROM Dinamani Karur

Dinamani Karur

இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!

இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Karur

'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Karur

காவலர்கள் மீது வழக்கு தொடுக்கும் விவகாரம்: தமிழக உள் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் அனைத்து நிலை காவலர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் வழக்கு தொடுக்க அரசின் முன்அனுமதி தேவை என பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக உள் துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Karur

திமுக கூட்டணியில் நீடிப்பதா ?: ஜூன் 27-இல் மதிமுக முடிவு

திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்துவரும் 27- ஆம் தேதி நடைபெறும் கட்சியின் பொதுக் குழுவில் முடிவு செய்யப்படும் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Karur

Dinamani Karur

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

time to read

3 mins

June 12, 2026

Dinamani Karur

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Karur

விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Karur

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Karur

Dinamani Karur

சந்திர தோஷம் விலக...

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Karur

தொடர வேண்டும் மாற்றம்

உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.

time to read

2 mins

June 12, 2026

Translate

Share

-
+

Change font size