Try GOLD - Free
மன்னித்தல் என்னும் மாமருந்து!
Dinamani Karur
|March 27, 2025
அறிவிற்சிறந்த சான்றோர் அப்படி நினைக்காமல், தமக்கு தீமை செய்தவரையும் மன்னித்து அவர் வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மையே செய்துவிடுவார்கள். இங்கே சான்றோரின் உயர் பண்பும் பெருமையும் அவருடைய மன்னித்தல் என்னும் குணத்தால் வெளிப்படுகிறது.
தெரிந்து செய்வது தப்பு... தெரியாமல் செய்வது தவறு. அதாவது ஒரு செயலை நாம் செய்யும்போது, அதை நாம் செய்வது சரியல்ல அல்லது முறையல்ல என்று அறிந்த பிறகும் அதை தெரிந்தே செய்வது தப்பு. ஆனால் ஒரு செயலை நாம் செய்யும்போது நாம் இதை செய்வது சரியா, சரியற்றதா என்று அறியாமல் சிந்திக்காமல் செய்வது தவறு. தப்போ அல்லது தவறோ அதைச் செய்தவர் எவராயினும் அதை செய்ததால் அவருக்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட்ட பின்விளைவுகளை அவர் உணரும்படி செய்து அவரை மன்னித்து நல்வழிப்படுத்துதலே சான்றோர்க்கு அழகு. அவர் திருந்திவாழ சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதே 'மன்னித்தல்' என்னும் மாபெரும் குணமாகும். மன்னித்தல் என்பதே மாந்தர்க்கு வேண்டிய உயர்ந்த குணம் என்பது சான்றோர் வாக்கு.
இதைத்தான் வள்ளுவர், "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்" என்றார்.
அதாவது, நமக்கு ஒருவன் தீமை செய்கிறான். அவனைத் தண்டிக்க வேண்டும் என்று நினைத்தால், அவன் வெட்கப்படும்படியாக, அவனுக்கு நன்மைகளைச் செய்துவிடுவது நல்லது. இது பண்பாளர் செயல் என்பதாகும். அதாவது சாதாரண மனிதர்கள் பிறரொருவர் தமக்கு தீமை செய்யும்போது உணர்ச்சிவசப்பட்டு அவர்களைத் தண்டிக்க நினைப்பார்கள். ஆனால், அறிவிற்சிறந்த சான்றோர் அப்படி நினைக்காமல், தமக்கு தீமை செய்தவரையும் மன்னித்து அவர் வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மையே செய்துவிடுவார்கள். இங்கே சான்றோரின் உயர் பண்பும் பெருமையும் அவருடைய மன்னித்தல் என்னும் குணத்தால் வெளிப்படுகிறது.
இது போன்று, இவ்வுலகில் தங்களுக்கு இழைத்த தீமைகளையெல்லாம் பொறுத்து, தவறு செய்தவர்களையும் மன்னித்து, அவர்களை நல்வழிப்படுத்தி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து மறைந்த மாமனிதர்கள் பலர். அவர்களில் ஒருவர் நம் தேசப்பிதா காந்தியடிகள் ஆவார்.
ஆங்கிலேயர்கள் வியாபாரம் செய்யும் நோக்கில் இந்தியாவுக்குள் நுழைந்தார்கள். இந்தியாவின் பல பகுதிகளையும் வேறு வேறு மன்னர்கள் ஆண்டு வந்ததாலும் அவர்கள் தம்மிடையே ஒற்றுமையின்றி வேறுபட்டு இருந்ததாலும் அந்த பலவீனத்தை வியாபாரம் செய்ய வந்தவர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டனர். அவன் நாட்டைப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தம்மை எதிர்த்த ஆயிரமாயிரம் இந்திய மக்களைக் கொன்று குவித்தான். வெள்ளையனை விரட்ட சுதந்திரப் போராட்டம் வெடித்தது.
This story is from the March 27, 2025 edition of Dinamani Karur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Karur
Dinamani Karur
இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!
இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Karur
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்
இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.
1 min
June 12, 2026
Dinamani Karur
காவலர்கள் மீது வழக்கு தொடுக்கும் விவகாரம்: தமிழக உள் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் அனைத்து நிலை காவலர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் வழக்கு தொடுக்க அரசின் முன்அனுமதி தேவை என பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக உள் துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
June 12, 2026
Dinamani Karur
திமுக கூட்டணியில் நீடிப்பதா ?: ஜூன் 27-இல் மதிமுக முடிவு
திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்துவரும் 27- ஆம் தேதி நடைபெறும் கட்சியின் பொதுக் குழுவில் முடிவு செய்யப்படும் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தார்.
1 min
June 12, 2026
Dinamani Karur
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
3 mins
June 12, 2026
Dinamani Karur
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.
1 min
June 12, 2026
Dinamani Karur
விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Karur
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா
பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
1 min
June 12, 2026
Dinamani Karur
சந்திர தோஷம் விலக...
சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.
2 mins
June 12, 2026
Dinamani Karur
தொடர வேண்டும் மாற்றம்
உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.
2 mins
June 12, 2026
Translate
Change font size

