Facebook Pixel தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை! | Dinamani Kanchipuram - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!

Dinamani Kanchipuram

|

August 28, 2025

பாதுகாப்புத் தளவாடங்கள், செமிகண்டக்டர்களை நாமே தயாரிப்பதற்கான முயற்சி வரை தன்னிறைவை அடைய தொடர் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ரஷியா, சீனா முதலாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என அனைத்துடனும் நட்பை, வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறது.

- கோதை ஜோதிலட்சுமி

கவனம் தற்போது இந்தியாவை நோக்கித் திரும்பி இருக்கிறது. ஒருபுறம் அமெரிக்கா தரும் புதிய வரிகளுக்கான அழுத்தம், மறுபுறம் ரஷ்யாவுடன் இருக்கும் எண்ணெய் வர்த்தகம், மற்றொருபுறம் சீனா உடனான போட்டி.

இந்தச் சூழ்நிலையில் அமெரிக்கா விதித்த 50% கூடுதல் வரிவிதிப்பு அமலுக்கு வருமா, இந்தியா எத்தகைய முடிவை எடுக்கப் போகிறது? அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியுமா, ரஷ்யாவுடனான வர்த்தகத்தைத் தொடருமா போன்ற வினாக்களுடன் உலகம் நம்மை உற்று நோக்குகிறது.

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் ஆக. 27-ஆம் தேதிமுதல் செயல்பாட்டுக்கு வரும் நிலையில் இந்தியாவின் பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும்? அதற்கு முன்னதாக அமெரிக்காவுடன் சுமுகமான முடிவு எட்டப்படுமா? வினாக்களோடு இந்தியர்களான நாமும் காத்திருக்கிறோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இந்தியா புதிய வெளியுறவுக் கொள்கையைக் கொண்டு செயல்படுகிறது. ஜவஹர்லால் நேரு காலத்தில் அணிசாரா கொள்கை பின்பற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பன்முகக் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். பல கூட்டமைப்புகளிலும் இந்தியா பங்கு பெறுவது என்ற நிலைப்பாடுதான் அதற்குக் காரணம். உண்மையில் இந்தியாவின் கொள்கை பன்முகக் கூட்டணியதானா?

ஐரோப்பா, அமெரிக்க ஆதிக்கத்துக்கு இடம் கொடுத்துவிட்டது. டிரம்ப்பின் முடிவுகளால் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை அடைந்திருக்கிறது. ஆனால், இந்தியா தன்னை எந்த இடத்திலும் இறக்கிக் கொள்ளவில்லை. உலகின் வல்லரசுடன் சம நிலையில் நின்று பேச விரும்புகிறது.

எங்களுக்கான நட்பு நாடுகளை, வர்த்தகக் கூட்டாளிகளை வேறு எவரும் தீர்மானம் செய்ய முடியாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. டிரம்ப் விதித்த கூடுதல் வரிகள் இன்னும் சில நாள்களில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் நிலையில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இந்தியா வந்து வெளியுறவுத் துறை அமைச்சரையும், பிரதமரையும் சந்தித்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யப் பயணத்தை மேற்கொண்டார். பிரதமர் சீனா செல்ல இருக்கிறார்.

MORE STORIES FROM Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

கோயில்களில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய உத்தரவு

கோயில்களில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை இந்து சமய அறநிலையத் துறை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanchipuram

ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

உயர்கல்வித் துறையில் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிகழாண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்தார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

இறுதியில் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanchipuram

சீர்திருத்தங்கள், தற்சார்பு நடவடிக்கைகள்: மத்திய செயலர்களுடன் பிரதமர் ஆலோசனை

நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் தொழில் புரிவதை எளிதாக்குவதற்கான சீர்திருத்தங்கள் மற்றும் தற்சார்பு நடவடிக்கைகள் ஊக்குவிப்பு ஆகிய இரு அம்சங்களின்கீழ், மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை உயர்நிலை ஆலோசனை நடத்தினார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

ஸ்வியாடெக், சின்னர் முன்னேற்றம்

புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanchipuram

புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்

அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanchipuram

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயர்வு

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2026, மார்ச் இறுதியில் ரூ.72.08 லட்சம் கோடியாக (762.8 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Kanchipuram

செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

June 30, 2026

Translate

Share

-
+

Change font size