Try GOLD - Free
ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிகழாண்டு இறுதிக்குள் இந்தியா நிறுத்திவிடும்?
Dinamani Coimbatore
|October 24, 2025
'ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிகழாண்டு இறுதிக்குள் பெரும்பாலும் நிறுத்திவிட இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.
-
இருந்தபோதும், 'ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெயை முழுமையாக நிறுத்தும் அளவுக்கு குறைப்பதற்கு இந்தியாவுக்கு சில காலம் ஆகும்' என்ற கருத்தையும் அவர் தெரிவித்தார்.
'சீனாவும் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்வதற்கு வலியுறுத்த முயற்சிப்பேன்' என்றும் அவர் தெரிவித்தார்.
இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இழுபறி மற்றும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது ஆகிய காரணங்களைக் காட்டி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இதனால், இரு நாடுகளிடையேயான உறவில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. எனினும், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார். அதை இந்தியா மறுத்தது.
அதைத் தொடர்ந்து, 'ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடர்ந்தால், கூடுதல் வரியைச் செலுத்த வேண்டியிருக்கும். இந்தியப் பொருள்கள் மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்படும்' என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
This story is from the October 24, 2025 edition of Dinamani Coimbatore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Coimbatore
Dinamani Coimbatore
திருப்பரங்குன்றம் மலையில் தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு
திருப்பரங்குன்றம் மலையில் தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குநர் யத்தீஸ்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
December 11, 2025
Dinamani Coimbatore
மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாட்டில் மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கனிம வளத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.
1 min
December 11, 2025
Dinamani Coimbatore
இண்டிகோ செயல்பாடுகள் மேற்பார்வைக்கு 8 பேர் குழு: டிஜிசிஏ அமைப்பு
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட கடுமையான குளறுபடிகளைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 பேர் கொண்ட குழுவை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) புதன்கிழமை அமைத்தது.
1 mins
December 11, 2025
Dinamani Coimbatore
திருவண்ணாமலை தீப மலையில் ஏறிய நபர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
திருவண்ணாமலையில் மகா தீப தரிசனம் காண தடையை மீறி செவ்வாய்க்கிழமை இரவு மலை மீது ஏறிச் சென்ற நபர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
1 min
December 11, 2025
Dinamani Coimbatore
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமான முன்னேற்றம்
இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை நோக்கி, இருநாடுகளும் வேகமாக முன்னேறி வருவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min
December 11, 2025
Dinamani Coimbatore
உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி உரியவர்களிடம் திருப்பியளிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
December 11, 2025
Dinamani Coimbatore
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு
புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி அறிவிப்பு
1 min
December 11, 2025
Dinamani Coimbatore
2-ஆவது வெற்றி முனைப்பில் இந்தியா
டி20: தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்
1 min
December 11, 2025
Dinamani Coimbatore
ஐபிஎல் 2026 ஏலத்தின் பட்டியலில் 240 இந்தியர்களுடன் 350 வீரர்கள்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் ஏலத்துக்காக மொத்தம் 350 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
1 min
December 10, 2025
Dinamani Coimbatore
சோனியா காந்தி பிறந்தநாள்: பிரதமர், கார்கே வாழ்த்து
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியின் 79-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
December 10, 2025
Listen
Translate
Change font size
