Try GOLD - Free

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 41,38,833 மாணவர்கள் 1,00,960 விரிவுரையாளர்கள்

Dinakaran Nagercoil

|

July 07, 2025

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 41,38,833 மாணவர்களும், 1,00,960 விரிவுரையாளர்களும் பயிற்சி பெற்றுள்ளனர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 41,38,833 மாணவர்கள் 1,00,960 விரிவுரையாளர்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்குப் பார்வையுடன் எண்ணற்ற புதுமையான திட்டங்களை உருவாக்கி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார். இந்தப் புதுமையான திட்டங்கள் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வளர்ச்சியை உறுதி செய்கின்றன. முதல்வரின் தனித்தன்மை வாய்ந்த இத்திட்டங்கள், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சுகாதாரம், ஊரகம், நகர்ப்புர வளர்ச்சி, சமூக நீதி ஆகிய 7 முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

மக்கள் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்களைத் தொடர்ந்து கண்காணித்து அவற்றின் முன்னேற்றம், திட்டமிடப்பட்ட இலக்கினை அடைவதை உறுதி செய்வதன் மூலம், அவற்றை உரிய காலத்திற்குள் மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர ஆவன செய்வதே இந்தச் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறையின் முக்கியப் பணியாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு, அவரது கடும் உழைப்பின் மூலம் சிறப்பான பல வெற்றிக் கனிகளைப் பறித்து வருகிறது.

குறுகிய காலப் பயிற்சி: கடந்த நான்கு ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட துறைகளில் 2,59,072 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் தொடர்பான குறுகிய காலத் திறன் பயிற்சிகளை வழங்கியுள்ளது.

முன் கற்றல் அங்கீகாரம்: முன்கற்றல் அங்கீகாரம் என்பது, அனுபவத்தின் மூலம் பெற்ற திறனை அங்கீகரித்தல் ஆகும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் பல முகாம்களை நடத்தி கட்டுமானத் துறை, தளவாடம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தோல் மற்றும் நூல் தொழில் துறைகள் ஆகியவற்றில் வேலை செய்யும் 1,13,940 தொழிலாளர்களுக்கு முன் கற்றல் அங்கீகார சான்றிதழ்களை வழங்கியுள்ளது.

சமூக நல இல்லங்களில் வசிப்பவர்களுக்கு திறன் பயிற்சிகள் : திராவிட மாடல் அரசினால் தாம்பரம், சென்னை, கடலூர், சிவகங்கை, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள சமூக நல இல்லங்களில் தங்கி இருப்பவர்களுக்குத் தகவல் தொழில்நுட்ப திறன்களுடன் சேர்த்து ஆங்கிலத்தில் தகவல் தொடர்பு மற்றும் அலுவலக வரவேற்பாளர் ஆகிய பாடநெறிகளில் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

MORE STORIES FROM Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழகத்தில் 16ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் மாலை இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தீபாவளி நாளில் பெய்யும் மழை நிலவரம் குறித்து அடுத்த வாரம் தெரிவிக்கப்படும்.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

விஜய் தாமதமாக வந்ததே காரணம்...

முதல் பக்க தொடர்ச்சி

time to read

3 mins

October 11, 2025

Dinakaran Nagercoil

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவி இந்தியர்கள் உட்பட 50 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஈரா னின் எண்ணெய் ஏற்றும திக்கு உதவிய இந்திய நிறு வனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதி ராக அமெரிக்கா பொரு ளாதார தடைகளை விதித் துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறு வனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கருவூலத்துறை இந்த தடை களை அறிவித்துள்ளன.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது

நெல்லித்தோப்பில் தொழுகை நடத்தலாம் மூன்றாவது நீதிபதி பரபரப்பு தீர்ப்பு

time to read

1 mins

October 11, 2025

Dinakaran Nagercoil

மாவட்ட வாரியாக 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு

தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

time to read

1 mins

October 11, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குடும்ப தகராறில் மனைவி வேறொருவருடன் ஓட்டம் 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொடூரமாக கொன்ற தந்தை

தஞ்சாவூர் அருகே பயங்கரம்

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

ஜெயஸ்வால் சத வெடி

வெ.இ.யுடன் 2வது டெஸ்ட்

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

பீகார் தேர்தல் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜினாமா

பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த நிலையில் 2 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்

வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

time to read

1 min

October 11, 2025

Dinakaran Nagercoil

சிக்கலில் சிக்கிய நடிகரை வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சி நடப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா

சிக்கலில் மாட்டிய நடிகரை வைத்து இலைக்கட்சியும், மலராத கட்சியும் அரசியல் லாபம் தேடும் முயற்சியில் தீவிரம் காட்டி வர்றாங்களாமே.. என்றார் பீட்டர் மாமா.

time to read

1 min

October 11, 2025

Translate

Share

-
+

Change font size