Try GOLD - Free
ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96 சதவீதமாக உயர்வு
Dinakaran Nagercoil
|May 15, 2025
கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96% ஆக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் திராவிட மாடல் அரசு மூலம் எல்லார்க்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி, அவற்றை திறம்பட நிறைவேற்றி வருகிறார். அவற்றில் குறிப்பாக சமூக நீதி அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டில் தனிக் கவனம் செலுத்தி, அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அதன் விவரம் பின்வருமாறு:
• ஆதிதிராவிடர் பள்ளிகளில் 480 புதிய வகுப்பறைகள்: ஆதிதிராவிடர் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அனைத்து வசதிகளுடனும் கல்வி கூடங்கள், விடுதிகள், கிராம அறிவு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ரூ.108.50 கோடி மதிப்பில் 154 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 480 புதிய வகுப்பறைகள் மற்றும் 15 அறிவியல் ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 107 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 256 வகுப்பறைகள், 42 கழிவறைகள், 21 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 65 மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வகங்கள் ரூ.125.00 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன.
சிறப்பான கல்வியினை வழங்க உதவும் வகையில் 119 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் அறிவுத்திறன் வகுப்பறைகளும், 174 பள்ளிகளில் அறிவுத்திறன் பலகைகளும், 206 பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 126 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் ஆய்வு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
• உயர்கல்வி நிறுவனங்களின் நுழைவுத்தேர்விற்கான பயிற்சி: பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் பயிலும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு JEE, NEET, CLUT, NIFT மற்றும் CUET போன்ற உயர்கல்வி தேர்விற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு மருத்துவக் கல்லூரியில் 2 மாணவர்களும், திருச்சி NIT கல்லூரியில் 3 மாணவர்களும், திருச்சி தேசிய சட்டக் கல்லூரியில் ஒரு மாணவரும், சென்னை தரமணி NIFT-ல் 4 மாணவர்களும் திண்டுகல் காந்தி கிராம மத்திய பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களும், ஆக 16 மாணவர்கள் சேர்ந்து அரசின் கல்வி உதவித்தொகையுடன் பயின்று வருகின்றனர்.
This story is from the May 15, 2025 edition of Dinakaran Nagercoil.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
தமிழகத்தில் 16ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் மாலை இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தீபாவளி நாளில் பெய்யும் மழை நிலவரம் குறித்து அடுத்த வாரம் தெரிவிக்கப்படும்.
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
விஜய் தாமதமாக வந்ததே காரணம்...
முதல் பக்க தொடர்ச்சி
3 mins
October 11, 2025
Dinakaran Nagercoil
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவி இந்தியர்கள் உட்பட 50 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை
ஈரா னின் எண்ணெய் ஏற்றும திக்கு உதவிய இந்திய நிறு வனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதி ராக அமெரிக்கா பொரு ளாதார தடைகளை விதித் துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறு வனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கருவூலத்துறை இந்த தடை களை அறிவித்துள்ளன.
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது
நெல்லித்தோப்பில் தொழுகை நடத்தலாம் மூன்றாவது நீதிபதி பரபரப்பு தீர்ப்பு
1 mins
October 11, 2025
Dinakaran Nagercoil
மாவட்ட வாரியாக 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
1 mins
October 11, 2025

Dinakaran Nagercoil
குடும்ப தகராறில் மனைவி வேறொருவருடன் ஓட்டம் 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொடூரமாக கொன்ற தந்தை
தஞ்சாவூர் அருகே பயங்கரம்
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
ஜெயஸ்வால் சத வெடி
வெ.இ.யுடன் 2வது டெஸ்ட்
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
பீகார் தேர்தல் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜினாமா
பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த நிலையில் 2 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்
வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
சிக்கலில் சிக்கிய நடிகரை வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சி நடப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா
சிக்கலில் மாட்டிய நடிகரை வைத்து இலைக்கட்சியும், மலராத கட்சியும் அரசியல் லாபம் தேடும் முயற்சியில் தீவிரம் காட்டி வர்றாங்களாமே.. என்றார் பீட்டர் மாமா.
1 min
October 11, 2025
Translate
Change font size