Facebook Pixel பிரிந்த கணவன் மீண்டும் அழைக்கிறார்! தவிக்கும் மனைவி! | Dinakaran Delhi - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பிரிந்த கணவன் மீண்டும் அழைக்கிறார்! தவிக்கும் மனைவி!

Dinakaran Delhi

|

May 19, 2025

அன்புள்ள டாக்டர், நான் 38 வயது பெண். எனக்கு 26 வயதில் திருமணமானது. அடுத்த இரு ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் ஒரு மகன், ஒரு மகள் என வாய்த்தனர். என் கணவர் சுயமாகத் தொழில் செய்து வருகிறார். என் அண்ணன்கள் மூவர், அப்பா என எங்கள் குடும்பத்தில் எல்லோருமே சுயதொழில்தான்.

என் கணவர் என் மீது அன்பாகவே இருந்தார். ஆனால், விதி கொடூரமாக என் வாழ்வில் விளையாடியது. எனக்கு என் மகள் பிறந்த அடுத்த வருடமே கழுத்து பெரிதாக வீங்கத் தொடங்கியது. என்னவென்று போய் பரிசோதித்துப் பார்த்தபோது, தைராய்டு புற்றுநோய் என்றார்கள். என் உலகமே இருண்டுவிட்டது. என் கணவர் ரிசல்ட் வந்ததில் இருந்தே என்னிடம் சரிவரப் பேசாமல் முகம் இருண்டுபோய் அமைதியாக இருந்தார். நானும் அவர் அப்செட்டாக இருக்கிறார் என்று நினைத்து அமைதியாக வீட்டுக்கு வந்தேன். என் மாமியாரிடம் என் கணவரேதான் விஷயத்தைச் சொன்னார்.

குழந்தைகளுக்கு இப்போதைக்குத் தெரிய வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், என் மாமியார் சொல்லிவிட்டார். அவர்களுக்குப் புரியாவிட்டாலும் அம்மாவுக்கு ஏதோ உடல்நிலை சரியில்லை என்று நினைத்து எனக்கு ஆறுதல் சொன்னார்கள். நான் வெடித்து அழுதேன். அப்போது முதலே என் மாமியாரின் சுடுசொல் என்னை வாட்டத் தொடங்கியது. கேன்சர் இருக்கும் பெண்ணை ஏமாற்றிக் கட்டிவைத்து, என் மகன் வாழ்வை நாசமாக்கிவிட்டார்கள் என்றெல்லாம் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினார். எனக்கு ஆறுதலாக இருப்பார் என்று நினைத்த என் கணவரோ என் அண்ணன்களிடமும் அப்பாவிடமும் சண்டையிட்டார். ஒரு நோயாளியை எனக்கு திருமணம் செய்துவைத்துவிட்டீர்கள். இந்தக் குழந்தைகளை இனி எப்படிப் பார்த்துக்கொள்வேன். ஒருவேளை எதிர்காலத்தில் இவர்களுக்கும் இந்த நோய் வந்தால் என் சந்ததியே இல்லாமல் போய்விடுமே. என்னை இப்படி ஏமாற்றிவிட்டீர்களே என்று சத்தமிட்டார். என் கணவரின் கோபம் கொஞ்சமும் குறையாததால் நான் என் வீட்டுக்கே குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

MORE STORIES FROM Dinakaran Delhi

Dinakaran Delhi

16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் வரும் 30ல் தொடக்கம்

டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில் நடக்கிறது; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

time to read

1 min

May 15, 2026

Dinakaran Delhi

ராகுல் காந்தியுடன் ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத் தூதர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோரை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Delhi

தாயுடன் கள்ளக்காதல் டிரைவரை கொன்ற மூன்று மகன்கள்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே சின்னம்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வைரமணி (46). அப்பகுதியில் உள்ள செங்கல் காளவாசலில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார்.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

தூத்துக்குடியில் ரவுடி சரமாரி குத்திக்கொலை

தூத்துக்குடியில் ரவுடிகள் இடையே நடந்த மோதலில் ஒரு ரவுடி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த மோதலில் மேலும் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

உ.பி.யில் புயல், கனமழைக்கு 113 பேர் பலி

உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களில் வீசிய பலத்த புயல் மற்றும் கனமழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன, சுமார் 113 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

தாத்தா, பாட்டியை கொன்று டீசல் ஊற்றி எரித்த பேரன்

கஞ்சா போதையில் வெறிச்செயல்

time to read

1 mins

May 15, 2026

Dinakaran Delhi

நாகையில் மீனவர், பெண் அடுத்தடுத்து படுகொலை

நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து மீனவர், பெண் படுகொலை செய்யப்பட்டனர்.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Delhi

மந்திர கால்களுடன் மெஸ்ஸி தந்திரமாய் இரண்டு கோல்

மேஜர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, இன்டர் மயாமி அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி அதிரடியாய் 2 கோல்கள் அடித்ததால், சின்சினாட்டி அணி மோசமான தோல்வியை தழுவியது.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Delhi

கெஜ்ரிவாலுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

விண்ணை முட்டும் காய்கறிகள் விலையால் மக்கள் தவிப்பு

விண்ணை முட்டும் காய்கறி விலையை தவெக அரசு விரைந்து கட்டுப்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Translate

Share

-
+

Change font size