Try GOLD - Free
ஆதிராவிட பழங்குடியின மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96 சதவீதமாக உயர்வு
Dinakaran Delhi
|May 15, 2025
கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிக ளில் ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96% ஆக உயர்ந்துள்ளதாக தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.
-
முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் திராவிட மாடல் அரசு மூலம் எல்லார்க்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி, அவற்றை திறம்பட நிறைவேற்றி வருகிறார். அவற்றில் குறிப்பாக சமூக நீதி அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டில் தனிக் கவனம் செலுத்தி, அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அதன் விவரம் பின்வருமாறு:
ஆதிதிராவிடர் பள்ளிகளில் 480 புதிய வகுப்பறைகள்:
ஆதி திராவிடர் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அனைத்து வசதிகளுட னும் கல்வி கூடங்கள், விடுதிகள், கிராம அறிவு மையங்கள் அமைக் கப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ரூ.108.50 கோடி மதிப்பில் 154 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 480 புதிய வகுப்பறைகள் மற்றும் 15 அறிவியல் ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 107 ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் நலப் பள்ளிகளில் 256 வகுப்பறைகள், 42 கழிவறைகள், 21 உயர்நிலைப் பள்ளிகள் மற் றும் 65 மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வகங்கள் ரூ.125.00 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. சிறப்பான கல்வியினை வழங்க உதவும் வகையில் 119 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் அறிவுத்திறன் வகுப்பறைகளும், 174 பள்ளிகளில் அறிவுத் திறன் பலகைகளும், 20% பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங் களும் உருவாக்கப்பட்டுள்ளன. 126 ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங் களுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் ஆய்வு உபகரணங்கள் வழங்கப் பட்டுள்ளன.
உயர்கல்வி நிறுவனங்களின் நுழைவுத்தேர்விற்கான பயிற்சி:
பழங்குடியினர் உண்டு உறைவிட மாணவர்களுக்கு பாடத்திட்டத் திற்கு ஏற்ப வழங்கப்படும் உட்ப யிற்சி காலங்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 10,000/- வழங்கப்படுகிறது. 2023-2024ஆம் ஆண்டு 789 மாண வர்களுக்கு ரூ.78.90 லட்சமும் நீதியரசர்களிடம் பயிற்சி பெற உதவித்தொகை ரூ.10,000 வீதம் 15 மாணாக்கர்களுக்கு ரூ.1.50 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2024-2025-ஆம் நிதியாண் டில் உட்பயிற்சி உதவித்தொகை யாக 774 மாணாக்கருக்கு ரூ.77.40 லட்சமும் வழங்கப்படும்.
ஐ.ஐ.டி. என்.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த மாணவர்கள் தொகையுடன் பயின்று வருகின்ற னர்.
This story is from the May 15, 2025 edition of Dinakaran Delhi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Delhi
Dinakaran Delhi
16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் வரும் 30ல் தொடக்கம்
டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில் நடக்கிறது; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
May 15, 2026
Dinakaran Delhi
ராகுல் காந்தியுடன் ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் சந்திப்பு
ஐரோப்பிய ஒன்றியத் தூதர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோரை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
1 min
May 15, 2026
Dinakaran Delhi
தாயுடன் கள்ளக்காதல் டிரைவரை கொன்ற மூன்று மகன்கள்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே சின்னம்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வைரமணி (46). அப்பகுதியில் உள்ள செங்கல் காளவாசலில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார்.
1 min
May 15, 2026
Dinakaran Delhi
தூத்துக்குடியில் ரவுடி சரமாரி குத்திக்கொலை
தூத்துக்குடியில் ரவுடிகள் இடையே நடந்த மோதலில் ஒரு ரவுடி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த மோதலில் மேலும் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது.
1 min
May 15, 2026
Dinakaran Delhi
உ.பி.யில் புயல், கனமழைக்கு 113 பேர் பலி
உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களில் வீசிய பலத்த புயல் மற்றும் கனமழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன, சுமார் 113 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
May 15, 2026
Dinakaran Delhi
தாத்தா, பாட்டியை கொன்று டீசல் ஊற்றி எரித்த பேரன்
கஞ்சா போதையில் வெறிச்செயல்
1 mins
May 15, 2026
Dinakaran Delhi
நாகையில் மீனவர், பெண் அடுத்தடுத்து படுகொலை
நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து மீனவர், பெண் படுகொலை செய்யப்பட்டனர்.
1 min
May 15, 2026
Dinakaran Delhi
மந்திர கால்களுடன் மெஸ்ஸி தந்திரமாய் இரண்டு கோல்
மேஜர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, இன்டர் மயாமி அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி அதிரடியாய் 2 கோல்கள் அடித்ததால், சின்சினாட்டி அணி மோசமான தோல்வியை தழுவியது.
1 min
May 15, 2026
Dinakaran Delhi
கெஜ்ரிவாலுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.
1 min
May 15, 2026
Dinakaran Delhi
விண்ணை முட்டும் காய்கறிகள் விலையால் மக்கள் தவிப்பு
விண்ணை முட்டும் காய்கறி விலையை தவெக அரசு விரைந்து கட்டுப்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
1 min
May 15, 2026
Translate
Change font size
