Try GOLD - Free

ஐஐடிகள் ராஜேஸ்வரி களின் ராஜ்ஜியம் ஆக வேண்டும்...

DINACHEITHI - NAGAI

|

June 10, 2025

சிங்கத்தின் குகைக்குள் புகுந்து அதன் பிடரியைப் பிடித்து உலுக்குவது என்பது செயற்கரிய செயல். கல்வியே ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. ஆங்கிலேயர் தயவில் அதை இப்பிரிவினர் அடைந்தபோது, மேலாதிக்க சாதியினருக்கு அது எட்டிக்காயாகக் கசந்தது. ஒடுக்கப்பட்டு ஓர் கல்வியில் உயர்வதைத் தடுக்க எத்தனையோ தடைக் கற்களை அவ்வப்போது போட்டு வைத்தார்கள். சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்று கூட விதி இருந்தது.

அதுமட்டுமின்றி, பிற பிரிவினர் எளிதில் நுழைய முடியாதவாறு ஐஐடி உள்ளிட்ட பொறியியல் நிறுவனங்களையும், எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களையும் அமைத்துக் கொண்டு, அதிலே குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் கோலோச்சிக் கொண்டிருந்தனர்.

திராவிட இயக்க தன்னெழுச்சியால் தடைகள் யாவும் நொறுக்கப்பட்டன. மருத்துவம், பொறியியல், சட்டப் படிப்பில் பார்ப்பனர் அல்லாத பிரிவினர் எளிதாக நுழைந்தனர். ஆனாலும், பழங்குடியினர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. குறிப்பாக, ஐஐடியில் அவர்கள் நுழைவு அத்திப்பூத்தாற்போலவே நிகழ்ந்தது.

இச்சூழலில், சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, புற்றுநோயால் தந்தையை இழந்த நிலையிலும், போலித் தொழில் செய்த தாய், தமையனின் உதவியோடு ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில், பழங்குடியினர் பிரிவில் இந்திய அளவில் 417-ஆவது இடம் பிடித்து ஐஐடியில் சேர்வதற்குத் தகுதி பெற்றுள்ளார்.

எட்டாம் வகுப்பு வரை தனியார்ப் பள்ளியில் படித்த ராஜேஸ்வரி, குடும்பச் சூழல் காரணமாக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கருமந்துறை கிராமத்தில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். பத்தாம் வகுப்பில் 500-க்கு 438 மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பில் 600-க்கு 521 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

MORE STORIES FROM DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு

\"அவரது போராட்டங்கள் நமக்கு வழி காட்டும்

time to read

1 min

October 10, 2025

DINACHEITHI - NAGAI

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க வேண்டும்

மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 mins

October 10, 2025

DINACHEITHI - NAGAI

மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

எல்லை மீறி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டு, மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.

time to read

1 mins

October 10, 2025

DINACHEITHI - NAGAI

இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும்

வாக்கு பதிவு இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்

time to read

1 mins

October 09, 2025

DINACHEITHI - NAGAI

காசா இன படுகொலையை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

October 09, 2025

DINACHEITHI - NAGAI

கரூர் கூட்டநெரிசல்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக த.வெ.க. மேல்முறையீடு

சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

time to read

1 min

October 09, 2025

DINACHEITHI - NAGAI

வரும் 9-ந் தேதி மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படவுள்ள அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

October 08, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

'சென்னை ஒன்' செயலியில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ் பெறும் வசதி விரைவில் அறிமுகம்

இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன்' மொபைல் செயலியை கடந்த மாதம் 22-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

time to read

1 min

October 08, 2025

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஜனாதிபதி திரவுபதி முர்மு 22-ந்தேதி சபரிமலை வருகை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.

time to read

1 min

October 07, 2025

DINACHEITHI - NAGAI

சென்னையில் ஒரே வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,400 அதிகம்

பவுன் விலை ரூ. 87,600 ஆக உயர்வு

time to read

1 mins

October 06, 2025

Translate

Share

-
+

Change font size