Try GOLD - Free

தீ கட்டுக்குள் வந்தநிலையில் சரக்கு கப்பலில் மீண்டும் கரும்புகை

DINACHEITHI - MADURAI

|

June 13, 2025

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி சரக்கு கப்பல் கடலில் கடந்த 9-ந்தேதி சென்று கொண்டிருந்தது. சிங்கப்பூர் கொடி ஏற்றப்பட்ட எம்.வி. வார்ன் ஹாய்-53 என்ற அந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் துறைமுகம் அருகே நடுக்கடலில் சென்ற போது, திடீரென கப்பலில் இருந்த கன்டெய்னர்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென பரவியது.

கப்பலில் இருந்த கன்டெய்னர்களில் 20 டன் வெடிபொருட்கள், அபாயகரமான ரசாயனங்கள் இருந்ததால் வெடித்து சிதறின. இதனால் கப்பலில் இருந்து கரும்புகை கிளம்பியது. அதோடு கப்பலில் இருந்து அடுத்தடுத்து 100-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் கடலுக்குள் விழுந்தன. கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 ஊழியர்களும் உயிர் தப்பிப்பதற்காக, கடலில் குதித்தனர்.

இதில் கடலில் தத்தளித்த 18 பேரை கடல் எல்லை பாதுகாப்பு படையினர், கடற்படையினர் மீட்டனர். மேலும் கடலில் மாயமான 4 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சிறப்பு நீச்சல் வீரர்கள் கடலுக்குள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தீ விபத்தை அடுத்து, கடல் எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான சதேத், சமுத்திர பிரகாரி, ஆர்னேஷ், ராஜ்தூத், சமர் ஆகிய 5 கப்பல்கள் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த கப்பல்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து 2 நாட்களாக தீயணைப்பு பணி நடந்து வந்தது. நேற்று 3-வது நாளாக கடல் எல்லை பாதுகாப்பு படையினர், கடற்படையினர், மீட்பு குழுவினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

MORE STORIES FROM DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்

இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

time to read

2 mins

January 04, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தொடரும் : மு.க. ஸ்டாலின் முதல்வராக நீடிப்பார்

லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்

time to read

1 mins

January 04, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

வெனிசுலா மீது தாக்குதல் : அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்

டிரம்ப் அதிரடி அறிவிப்பு

time to read

1 min

January 04, 2026

DINACHEITHI - MADURAI

வீர மங்கை வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு

வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு:- மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, 'தமிழ்நாடு போராடும்' என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களும், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களும்.

time to read

1 min

January 04, 2026

DINACHEITHI - MADURAI

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விபத்தில் உயிர் இழந்தால் ரூ. 1 கோடி

முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

2 mins

January 04, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாட்களில் வினியோகம்

அதிகாரிகள் தகவல்

time to read

1 min

January 03, 2026

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

-மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்.

time to read

3 mins

January 03, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

வங்க கடலில் 6-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

time to read

1 min

January 03, 2026

DINACHEITHI - MADURAI

மது போதையும், மதவாத அரசியல் போதையும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விட மாட்டோம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

3 mins

January 03, 2026

Translate

Share

-
+

Change font size