காவிரி படுகை குறுவை சாகுபடிக்கு...
DINACHEITHI - KOVAI
|June 17, 2025
ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டது.
-
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி. குப்பம் தொகுதி எம். எல். ஏவுமான ஜெகன்மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது. காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக கே.வி. குப்பம் எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர்.
இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், கடத்தல் வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரினார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த தலைமை நீதிபதி, வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரிப்பார் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பி. வேல்முருகன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
பூவை ஜெகன்மூர்த்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார். காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, இந்த சம்பவத்தில் காவல் துறை ஏடிஜிபி ஜெயராமனுக்கு தொடர்புள்ளதாகவும் பணம் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனால், நீதிபதி குறிப்பிட்ட நேரத்தில் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜராகவில்லை. அதனால், வழக்கை 45 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார். பிற்பகல் 3.30 மணிக்கு நீதிபதி முன்னால் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார்.
This story is from the June 17, 2025 edition of DINACHEITHI - KOVAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"தொடர் வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்
1 min
December 20, 2025
DINACHEITHI - KOVAI
ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
அரசிதழில் ஜன. 5-ம் தேதிக்குள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு
1 min
December 20, 2025
DINACHEITHI - KOVAI
அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.
1 min
December 20, 2025
DINACHEITHI - KOVAI
நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
1 min
December 19, 2025
DINACHEITHI - KOVAI
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை
பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 17, 2025
DINACHEITHI - KOVAI
ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்யுங்கள்
மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min
December 16, 2025
DINACHEITHI - KOVAI
7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார்
1 mins
December 16, 2025
DINACHEITHI - KOVAI
ஸ்குவாஷ் உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சாதனை படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
1 min
December 16, 2025
DINACHEITHI - KOVAI
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1 min
December 14, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்
19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
1 mins
December 14, 2025
Translate
Change font size

