Facebook Pixel உலக வங்கியின் 190 மில்லியன் டாலர் வங்கி கடன் மூலம் ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் | DINACHEITHI - DHARMAPURI - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

உலக வங்கியின் 190 மில்லியன் டாலர் வங்கி கடன் மூலம் ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்

DINACHEITHI - DHARMAPURI

|

June 11, 2025

தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் நேற்று (10.06.2025) சென்னை, தரமணியில் உலக வங்கியின் உலகளாவிய வணிக மையம் திறப்பு விழாவில் ஆற்றிய உரை :- உலக வங்கியின் சென்னை குளோபல் பிசினஸ் மையத்தை திறந்து வைக்கின்ற இந்த நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்ச்சியும், பெருமையும் எனக்கு தருகிறது.

உலக வங்கியுடன் நம்முடைய Partnership 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு விவசாயக் கடன் திட்டத்தில் தொடங்கியது. அப்போது இருந்து, தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, பேரிடர் மேலாண்மை, நகர்ப்புற வளர்ச்சி போன்ற பலதரப்பட்ட துறைகளில் உலக வங்கி நமக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

குறிப்பாக, 2022-ஆம் ஆண்டில், புது டெல்லிக்கு வெளியே தன்னுடைய முதல் மண்டல அலுவலகத்தை உலக வங்கி சென்னையில்தான் அமைத்தார்கள். செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களுக்கு உதவி செய்து, வேகமான மற்றும் வலுவான ஒருங்கிணைப்புக்கும் வழி ஏற்படுத்தி, தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவுடனான உலக வங்கியின் உறவை இந்த அலுவலகம் மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.

உலக வங்கியுடனான நம்முடைய இந்த நீண்ட நெடிய உறவு பல்வேறு துறைகளில் பல நற்பலன்களை வழங்கியிருக்கிறது. முக்கியமான சிலவற்றை மட்டும் நான் பட்டியிலிட விரும்புகிறேன்.

1980-ஆம் ஆண்டு மற்றும் 1990-ஆம் ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் 'தமிழ்நாடு ஊட்டச்சத்து திட்டம்' மற்றும் 2004-ஆம் ஆண்டிலும் 2010-ஆம் ஆண்டிலும் செயல்பாட்டில் இருந்த தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம். இந்த இரண்டும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன்களில் முன்னேற்றம் காண சிறந்த முன்னெடுப்பாக அமைந்தது. இன்றைக்கு தமிழ்நாடு இந்தத் துறைகளில் இந்தியாவிற்கே லீடர் என்று சொல்லக்கூடிய இடத்தை அடைந்திருக்கிறது. அடுத்து, வறுமையை ஒழித்து ஊரகமக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு செயல்படுத்தப்பட்ட ‘வாழ்ந்து காட்டுவோம்’ எனும் முன்மாதிரி திட்டம், 20 லட்சம் ஏழை குடும்பங்கள் இதனால் முன்னேறி இருக்கிறார்கள். பெண்களுக்கான அதிகாரத்தை வழங்கியது மட்டுமல்லாமல், உழவர்களுக்கு நிலைத்த சமுதாயக் கட்டமைப்புகளையும் இந்தத் திட்டம் உருவாக்கி தந்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், சுய உதவிக் குழுக்களை ஊக்கப்படுத்தி பெண்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக ஒரு தரவை நான் சொல்ல விரும்புகிறேன்.

MORE STORIES FROM DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கீழடி உள்ளிட்ட 8 இடங்களுக்கான அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு உடனே அனுமதி வழங்க வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

time to read

1 min

March 04, 2026

DINACHEITHI - DHARMAPURI

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது

பிரதமர் மோடி பேட்டி

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஈரான் - அமெரிக்கா போர்: இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு

மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழகம் - புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

time to read

1 min

March 03, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்க இருக்கிறது.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஓமன் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; 15 இந்தியர்கள் மீட்பு

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியதில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழும் தமிழ்நாடும் நம் உயிர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

“சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும்.”

time to read

1 min

March 02, 2026

DINACHEITHI - DHARMAPURI

ஆந்திரா: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 18 பேர் பலி

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஆந்திர முதல்-மந்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

March 01, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது

காப்பி அடித்தால் 3 ஆண்டு தடை

time to read

1 min

March 01, 2026

Translate

Share

-
+

Change font size