Try GOLD - Free
பெங்களூருவில் தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாடு
DINACHEITHI - DHARMAPURI
|May 24, 2025
பெங்களூரு மே 24பெங்களூருவில் நேற்று (23.05.2025) ஒன்றிய அரசின் மாண்புமிகு மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் நடைபெற்ற தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாட்டில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பங்கேற்றார். அப்போது, மின்சாரத்துறையில் தமிழ்நாடு சார்ந்த சில முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மற்றும் ஒழுங்குமுறை அம்சங்கள் குறித்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்து, அதற்கான பரிந்துரைகளைச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.
-
மின்சாரத்துறை, தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் மிக முக்கியமானது என்பதால், தமிழ்நாடு அரசின் முதன்மை முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு (TNPDCL) மானியமாக சுமார் ரூ. 53,000 கோடியும், இழப்பீட்டு நிதியாக ரூ. 52,000 கோடியும் ஒதுக்கி ஆதரவளித்துள்ளது. இது, தமிழ்நாடு அரசு, தனது மக்களுக்கு நம்பகமான மற்றும் மலிவு விலையில் மின்சார விநியோகத்தை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணுடன் (CPI) இணைக்கப்பட்டு, ஐந்தாண்டுகளுக்குத் தானியங்கி வருடாந்திரக் கட்டண உயர்வினைக் கொண்ட பல ஆண்டு கட்டண (Multi-Year Tariff) முறையை அமல்படுத்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய சீர்திருத்தமாக, சிறந்த செயல்பாட்டு மற்றும் நிதித் திறன்களை அடையும் நோக்கில், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை (TANGEDCO) மறுசீரமைத்து, உற்பத்தி, பசுமை எரிசக்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கென தனித்தனி நிறுவனங்களை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக (AT&C) இழப்பைக் குறைப்பதில் எட்டப்பட்டுள்ள வளர்ச்சி ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. 2017-18 ஆம் ஆண்டில் 19.47 சதவீதமாகயிருந்த இந்த இழப்பு, 2023-24 ஆம் ஆண்டில் 11.39 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த AT&C இழப்புக் குறைப்பானது, பெரிய அளவிலான நிதி சேமிப்புக்கு வழிவகுத்துள்ளது.
This story is from the May 24, 2025 edition of DINACHEITHI - DHARMAPURI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
பீகார் முதல் மந்திரியாக நிதிஷ் குமார் பதவியேற்றார்
பிரதமர் மோடி, அமித்ஷா விழாவில் பங்கேற்பு
1 min
November 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் இன்று முதல் பலத்த மழை பெய்யும்: வானிலை நிலையம் அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min
November 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - மேலும் 4 பேர் கைது
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
1 min
November 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 18 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி விடுவித்தார்
புதுடெல்லி,நவ.20சொந்தமாக விவசாய நிலம் பிஎம் கிசான் நிதி வைத்துள்ள விவசாயக் திட்டத்தை மத்திய அரசு குடும்பங்களுக்கு உதவித் 2019ம் ஆண்டு தொடங்கியது. தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டப்படி, 4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு இதுவரை 20 தவணைகளாக வங்கி கணக்கு மூலம் பணம் வழங்கப்பட்டுள்ளது.
1 min
November 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
மதுரை, கோவையிலும் மெட்ரோ ரெயிலை கொண்டு வருவோம்
திட்டத்துக்கு மத்திய அரசுமறுப்பு :
1 min
November 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோவை விழாவில் பிரதமர் மோடி பேச்சு
ரசாயனம் இல்லாத விவசாயத்தை மேற்கொள்ளுங்கள்
1 mins
November 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
பீகார் முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார் நிதிஷ் குமார்
விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
1 min
November 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும்: தமிழ் நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
1 min
November 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
பீகார் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இன்று தேர்ந்து எடுக்கப்படுகிறார்
20-ந் தேதி பதவி ஏற்கிறார்
1 min
November 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடியுடன் இன்று எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேச வாய்ப்பு
1 min
November 19, 2025
Translate
Change font size

