Facebook Pixel 2000 கோடி! பா.ஜ.க.விடம் எடப்பாடி டிமாண்ட்! | Nakkheeran - news - Read this story on Magzter.com

Try GOLD - Free

2000 கோடி! பா.ஜ.க.விடம் எடப்பாடி டிமாண்ட்!

Nakkheeran

|

September 10-12, 2025

எல்லோரையும் கட்சியில் இணைக்கவேண்டும் என்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோரிக்கையை நிராகரித்ததோடு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் எல்லோரையும் கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. செங்கோட்டையன் வகித்த புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் இந்த பொறுப்புகளிலிருந்தும் நீக்கியிருக்கிறார்.

- -ஜீவாதங்கவேல்

2000 கோடி! பா.ஜ.க.விடம் எடப்பாடி டிமாண்ட்!

பதிலுக்கு 'எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் பத்து நாள் முடியட்டும். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள்' என செங்கோட்டையன் தரப்பிலிருந்து 'சஸ்பென்ஸ்' வைக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 2000-க்கும் மேற்பட்டோர் 'எங்களையும் கட்சியிலிருந்து விலக்குங்கள்' என ராஜினாமா கடிதங்களை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி வருகிறார்கள்.

10 மாதங்களுக்கு முன்பே செங்கோட்டையன் தலைமையில் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், அன்பழகன் ஆறு பேரும் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகிய அனைவரையும் கட்சியில் இணைக்கவேண்டும் என பேசினார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி எந்த பதிலையும் கூறாதது பற்றியும் வெளிப்படையாகக் கூறினார் செங்கோட்டையன்.

இவர்கள் ஆறு பேரிடமும், 'உங்களுக்கு அவர்கள் மீது 'பிரியம்' இருந்தால் நீங்கள் தாராளமாக ஓ.பி.எஸ். அணிக்குச் சென்றுவிடுங்கள். எனக்கு அவர்களை கட்சியில் சேர்க்க விருப்பமில்லை' என அப்போதே கூறியிருக்கிறார் எடப்பாடி. அதற்கு செங்கோட்டையன், “நமது கட்சிக்கு கொங்குமண்டலத்தில் உள்ள பலம், டெல்டா, தென்மாவட்டங்களில் இல்லை. 30 முதல் 32 சதவீத வாக்குகள் நிலையாக வைத்திருந்தோம். ஆனால் இப்போது வெறும் 20 முதல் 22 சதவீத வாக்குகளுக்குள் சுருங்கிவிட்டோம். தென்மாவட்டங்களில் 10 முதல் 12 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. யோசித்து முடிவெடுங்கள்” என அப்போதைக்கு கூறிவிட்டு வந்துள்ளனர்.

MORE STORIES FROM Nakkheeran

Nakkheeran

Nakkheeran

கூட்டணியில் கலகம்! ரெடியாகும் காங்கிரஸ்!

\"ஹலோ தலைவரே, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை கவனிச்சீங்களா? \" \"கவனிக்காமல் இருப்பேனா? பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தி.மு.க.தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லியிருக்கே.\"

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

திராவிட மாடல் 2.0 Exit Poll ரிசல்ட்!

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்ததையொட்டி, இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த மாநிலங்களான தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் நடந்த தேர்தலுக்கான எக்ஸிட் போல் எனும் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி மாலையில் வெளியாகியது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

பெரும் பலம்!

ராம்சரண் நடித்துவரும் 'பெத்தி' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட அதிக நாட்கள் நடந்துவருகிறது.

time to read

1 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

விவசாயிகளுக்கு வஞ்சனை!

விவசாயிகள் நெல் உற்பத்தி செய்வதைவிட விளைந்த நெல்லை விற்பனை செய்வதற்கு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

இலங்கை மீனவரை சிறைபிடித்த தமிழக மீனவர்கள்!

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்களில் ஒருவரை சுற்றிவளைத்துப் பிடித்த தமிழக மீனவர்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்திருப்பது சந்தோசத்தையும், கலக்கத்தையும் ஒருசேர உருவாக்கியுள்ளது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

வார் ரூம்

(25) அப்போது தளபதி... இப்போது எதிரி!

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

சீட் தேறுமா? விஜய் யாகம்!

2026 சட்டமன்றத் தேர்தலின் புதுவரவான த.வெ.க. தலைவர் விஜய்தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக்! தற்போது தேர்தல் முடிந்த நிலையில், தனது அரசியல் பயணம் வெற்றிபெற வேண்டுமென்றும், எதிரிகளின் சூழ்ச்சி தன்னை பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், மிகவும் பிரபலமான ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்று, தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

பழிக்குப்பழி..! தஞ்சை பயங்கரம்!

தன் மகளைக் கொன்றவனைக் காத்திருந்து பழிதீர்த்த தந்தையின் செயல் தஞ்சாவூர் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

கூவாகம் திருவிழா! குறைதீர்க்குமா அரசு நிர்வாகம்?

ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாக கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு திருநங்கைகள் திருமணம், அரவான் களப்பலி ஆகிய திருவிழா மூன்று நாட்கள் மிக விமர்சையாக நடைபெறும்.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

தீவிரமயமாக்கல்: கண்காணிப்பு தளர்ந்தால் என்ன நடக்கும்?

முக்கிய வழக்குகளில் சிறைக்கு வரும் குற்றவாளிகள், சாதி, மதம், இனம், பணம், மொழி போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தி, சிறைப் பணியாளர்களையும், சிறைவாசிகளையும் மெதுவாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்.

time to read

3 mins

May 02-05, 2026

Translate

Share

-
+

Change font size